Half Yearly Exam 2024
Latest Updates
Employment Cut-off Seniority
As on July - 2013 , Directorate of Employment and Training Information on Secondary Grade Teacher/ B.T Assistant/ Special Teacher Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu
Information on Cut-off Seniority dates adopted for nomination
வினாத்தாள் அவுட்டான விவகாரத்துக்கு, உரிய ஆதாரங்கள் இல்லாத நிலை - Paper News
டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் அதிர்ச்சி தகவல் 80 முதல், 120 கேள்வி வந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு: தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை, அடுத்த மாதம், 17ம் தேதிக்கு தள்ளிவைத்து, சென்னை, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.
சுற்றுச் சூழல் மன்றம் சார்பாக அரசு பள்ளிகளில், 36 ஆயிரத்து 600 மரக் கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.
உலகம் முழுவதும் வனப் பகுதிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதுடன், நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் புவி வெப்பமயமாதல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
"இரண்டு தாள்களின் உத்தேச விடை பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்"
தமிழகம் முழுவதும் நடந்த, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். உத்தேச விடை பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
விரைவில் "கற்க கசடற' பள்ளிக்கல்வித்துறை திட்டம்
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் "கற்க கசடற' என்ற புதிய மாத இதழ் விரைவில் வெளியிடபோவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டி.இ.டி., தேர்ச்சி, 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: டி.ஆர்.பி., நம்பிக்கை
மூன்றாவது முறையாக, இன்றும், நாளையும் நடக்கும் டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல், இரு தேர்வுகளில், 3 சதவீதத்தை தாண்டாத தேர்ச்சி சதவீதம், இந்த தேர்வில், 7 சதவீதமாக அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், 7 லட்சம் பேரில், குறைந்தபட்சம், 50 ஆயிரம் பேர், தேர்ச்சி பெறலாம்.
குரூப்-1 மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு: செப்., 27 முதல் 29 வரை நடக்கிறது
"குரூப்-1 மெயின் தேர்வு, செப். 27, 28, 29 ஆகிய தேதிகளில், சென்னையில் நடக்கும். இத்தேர்வை, 1,391 பேர் எழுத அனுமதிக்கப்படுவர்," என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.
பத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை அறிமுகம்
பத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை வரும் கல்வியாண்டியல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் அரசு பொதுத்தேர்வு தான் நடத்த வேண்டும், என பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சத்துணவு தயாரிக்க "சோலார் குக்கர்": மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்
கோவை மாநகராட்சி சார்பில், வடகோவை மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் "சோலார் குக்கர்" முறை பரீட்சார்த்த முறையில் கையாளப்படுகிறது. இத்திட்டம் வெற்றியடைந்தால், மாநகராட்சி பள்ளிகளில் "சோலார் குக்கர்" திட்டம் விரிவடையும்.
இங்கிலாந்துடன் கை கோர்க்கும் தமிழக மருத்துவக் கல்லூரிகள்
சி.எம்.சி., மற்றும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிகள், இங்கிலாந்தை சேர்ந்த கே.இ.பி., (Knowledge Economy Partnerships) புரோகிராமுடன் ஒருவருட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன.
கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை பெற்றோருக்கு வழங்க உத்தரவு
கூடலூரில், கூடுதலாக வசூல் செய்த கல்வி கட்டணத்தை பெற்றோருக்கு வழங்க தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆய்வுக்கட்டுரை தயாரிக்கும் போட்டி: மாணவர்கள் பங்கேற்று சாதிக்கலாம்
தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கும் போட்டியில் பங்கேற்க, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் சார் பட்டப்படிப்பு: 19ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்றுடன் முடிந்தது. மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 19ம் தேதி துவங்குகிறது.
மதிய உணவு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
"பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள், 22 பேர் பலியானது போன்ற சம்பவம், மீண்டும் நடக்காமல் தடுக்கவும், குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை, மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டி.,யின் தனித்தன்மை குறைகிறதா?
இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் முதன்மையாக திகழ்வது ஐ.ஐ.டி., இன்று அதன் தனித்துவம் குறைகிறதா என சந்தேகம் எழுந்துள்ளதாக பீகார் "சூப்பர் 30" நிறுவன இயக்குனர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். இவர் பீகாரில் ஆண்டுதோறும் ஏழை மாணவர்கள் 30 பேருக்கு, இலவசமாக ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு பயிற்சி அளித்து வருகிறார்.
ஆசிரியர் தகுதி தேர்வு மையத்திற்கு செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை
ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகின்ற தேர்வு மையத்திற்கு செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராமானுஷம் கூறினார்.