Half Yearly Exam 2024
Latest Updates
AEEO Promotion - 2013-14
2013-14 ஆம் கல்வியாண்டு - தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உதவி/ கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறூதல் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியல் வரிசை எண் 251 முதல் 350 வரை 20.08.2013 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்டுள்ளது.
17.8.2013 All Schools Leave - Its compensatory to 30.08.2013
17.08.2013 அன்று TET முதல் தாள் தேர்வை முன்னிட்டு CBSE உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தும் 31.08.2013 அன்று ஈடுசெய்யும் வேலை நாளாகவும் அறிவித்து அரசாணை 131 வெளியீடு
பள்ளிக்கல்வித்துறையில் புதிய இணை இயக்குநர்கள் பொறுப்பேற்பு
பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் இயக்குனர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தற்பொழுது புதியதாக இணை இயக்குநர்கள் பொறுப்பேற்றுள்ள பட்டியல் வெளியாகியுள்ளது.
*இணை இயக்குநர் (பணியாளர்த் தொகுதி) திரு. கருப்பசாமி அவர்களையும்,
TET Online Model Test Available in Rani TET Park
TET Paper 2
Model Test 1
Model Test 2
Model Test 3
Model Test 4
Model Test 5
Model Test 6
Model Test 7
TET Paper 1
Model Test 1
Model Test 2
Model Test 3
Model Test 4
Model Test 5
Visit - www.Ranitetpark.com
Contact - 9952787972
பள்ளிகளில் எதிர்பாராத நிகழ்வுகள்: உடனடியாக தெரிவிக்க அரசு உத்தரவு
"பள்ளிகளில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் குறித்து, உடனடியாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு, தலைமை ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்" என, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு: சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்
"கல்வித் தகுதியுள்ள சத்துணவு உதவியாளர், சமையலர் அனைவருக்கும் அமைப்பாளர் பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்புடன் நிறுத்தம் - Dinamalar
தமிழகத்தில் உள்ள 50 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என்ற அரசின் அறிவிப்பு, நிறைவேற்றப்படாததால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அரசு பள்ளியில் தகவல் தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசு ரூ.86 கோடி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் 4,340 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மத்திய அரசு நிதியுதவியுடன், தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சிறப்பு வழிகாட்டி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, பள்ளி மாணவர்களுக்கு, வினாக்கள் அடங்கிய, "சிறப்பு வழிகாட்டி" புத்தகம் தயாரிக்கும் பணியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஈடுபட்டு உள்ளது.
வரலாறு: 14 ஆம் நூற்றாண்டின் அரிய "செப்பு காசு" கண்டுபிடிப்பு
கடந்த 14 ஆம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, அரிய செப்பு காசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாளில் இருந்து பணி வரன்முறை தமிழக அரசு உத்தரவு
அரசு பள்ளிகளில் கடந்த 1990-91, 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.800, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.1,200, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.1,400 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் ஆசிரியர்கள் நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 1990-91, 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து உரிய தெளிவுரை கேட்டு பள்ளிக் கல்வி இயக்குனர் அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக பள்ளி கல்வி செயலர் சபிதாவின் விளக்கக் கடிதம்: ஏற்கனவே 2012 ஜூன்26ம் தேதி அரசு கடிதத்தில் 1990-91, 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணி விதிகள் ஏதும் தளர்வு செய்ய கூடாது. இந்த நிபந்தனை அடிப்படையில் பணி நியமன நாள் முதல் முன்தேதியிட்டு பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கலாம் எனவும், பணிவரன்முறை செய்த நாளில் இருந்து பணிமூப்பு நிர்ணயிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணி விதிகளில் பொதுவிதி 35(ஏ) பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யலாம் என்றும், பணி மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டவர்களுக்கு விதி 35(ஏஏ)யை பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 1990,91, 1991,92ல் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் சமமாக பொருந்தும். எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு என தனியாக தெளிவுரை வழங்க அவசியம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் திருத்தப்பட்ட ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதுகலை ஆசிரியர் தேர்வில் தவறான கேள்வியை நீக்க முடிவு
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, "கீ-ஆன்சர்', வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதியுள்ளனர். இதற்கான, தற்காலிக, "கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்வி மற்றும் விடைகள் குறித்து, 1,000 தேர்வர்கள், மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மாதம்தோறும் 12 பள்ளிகளை பார்வையிட உத்தரவு
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யவேண்டிய சார்நிலை அலுவலகங்கள், பார்வையிட வேண்டிய பள்ளிகள் எண்ணிக்கையில் குறைந்தபட்ச இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும்.
கறிவேப்பிலை பற்றிய ஒரு அறிய குறிப்பு, புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.