பொருளாதாரத்தில் பின்தங்கிய, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, பள்ளி மாணவர்களுக்கு, வினாக்கள் அடங்கிய, "சிறப்பு வழிகாட்டி" புத்தகம் தயாரிக்கும் பணியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஈடுபட்டு உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
வரலாறு: 14 ஆம் நூற்றாண்டின் அரிய "செப்பு காசு" கண்டுபிடிப்பு
கடந்த 14 ஆம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, அரிய செப்பு காசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாளில் இருந்து பணி வரன்முறை தமிழக அரசு உத்தரவு
அரசு பள்ளிகளில் கடந்த 1990-91, 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.800, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.1,200, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.1,400 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் ஆசிரியர்கள் நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 1990-91, 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து உரிய தெளிவுரை கேட்டு பள்ளிக் கல்வி இயக்குனர் அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக பள்ளி கல்வி செயலர் சபிதாவின் விளக்கக் கடிதம்: ஏற்கனவே 2012 ஜூன்26ம் தேதி அரசு கடிதத்தில் 1990-91, 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணி விதிகள் ஏதும் தளர்வு செய்ய கூடாது. இந்த நிபந்தனை அடிப்படையில் பணி நியமன நாள் முதல் முன்தேதியிட்டு பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கலாம் எனவும், பணிவரன்முறை செய்த நாளில் இருந்து பணிமூப்பு நிர்ணயிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணி விதிகளில் பொதுவிதி 35(ஏ) பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யலாம் என்றும், பணி மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டவர்களுக்கு விதி 35(ஏஏ)யை பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 1990,91, 1991,92ல் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் சமமாக பொருந்தும். எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு என தனியாக தெளிவுரை வழங்க அவசியம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் திருத்தப்பட்ட ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதுகலை ஆசிரியர் தேர்வில் தவறான கேள்வியை நீக்க முடிவு
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, "கீ-ஆன்சர்', வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதியுள்ளனர். இதற்கான, தற்காலிக, "கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்வி மற்றும் விடைகள் குறித்து, 1,000 தேர்வர்கள், மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மாதம்தோறும் 12 பள்ளிகளை பார்வையிட உத்தரவு
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யவேண்டிய சார்நிலை அலுவலகங்கள், பார்வையிட வேண்டிய பள்ளிகள் எண்ணிக்கையில் குறைந்தபட்ச இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும்.
கறிவேப்பிலை பற்றிய ஒரு அறிய குறிப்பு, புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.
TNTET QUESTIONS FOR TAMIL - PAPER 1 & 2
10 நிமிடம் - 10 கேள்விகள் - குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண் எடுக்க நீங்கள் தயாரா?
CLICK HERE 4 VISIT -
மத்திய அரசு PFRDA மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் நாளன்று மத்திய அரசு அலுவலகங் -களில் இரண்டு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு
மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் / PFRDA (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) மசோதாவை தாக்கல் செய்து நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளது.
TNTET - ENGLISH QUESTIONS FOR - PAPER 2 & PAPER 1
Visit - http://trbtnpsc.blogspot.in/
for daily new useful updates.
இந்த தேர்வின் சிறப்பம்சங்கள்
- ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு பயனுள்ள வகையிலான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
- ஒவ்வொரு முறையும் கேள்விகளின் வரிசை முறை தானாகவே மாறிக்கொள்ளும்.
- ஒவ்வொரு முறையும் கேள்விகளுக்கான விடைகளின் வரிசை முறைகளும் தானாகவே மாறிக்கொள்ளும்.
- தேர்வை முடித்த உடன் அனைத்து கேள்விகளுக்கான விடையும் சரியா தவறா என தெரிந்து கொள்ளலாம்.
- தேர்வில் 60 சதவீதத்திற்கு மேல் பெற்றவர்களுக்கு பெயருடன் கூடிய சான்றிதழ் உடனடியாக வெளியிடப்படும்.
- தேர்வில் தாங்கள் எதிர்கொண்ட வினா மற்றும் விடைகளை உடனடியாக PDF - Format ல் Print எடுத்துக்கொண்டு தேவையான போது பயன்படுத்திக்கொள்ள முடியும்.
- தினமும் ஒரு பாடம் வீதம் இந்த வலைதளத்தில் கேள்விகள் கேட்கப்படும்.
- இந்த தேர்வுகள் முற்றிலும் இலவசமானது.
- விரைவில் Group - 4 தேர்வுக்கு பயன்படும் வினாக்களும் இலவசமாக பயன்பெறும் வகையில் பதிவேற்றப்படும்.
- முயற்சி! பயிற்சி! வெற்றி! - வாழ்த்துக்கள்!.
பி.எட் ..,தேர்வில் தோல்வியடைந்து பின் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு
பி.எட்., தேர்வில் தோல்வியடைந்து, பின் வெற்றி பெற்றவருக்கு, ஆசிரியர் தகுதி சான்றிதழ் வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஜூன் மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், வினோத்குமார் என்பவர் கலந்து கொண்டார். விளக்க குறிப்பேட்டின்படி, பி.எட்., அல்லது ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ இறுதி ஆண்டு தேர்வை எழுதுபவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியும்.
குரூப் - 4 தேர்வு விவரங்களை சரிபார்க்க தேர்வர்களுக்கு வேண்டுகோள் | TNPSC GROUP - IV Application Acknowledgement
"குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை, தேர்வாணைய இணைய தளத்தில் பார்த்து, உறுதி செய்துகொள்ளலாம்' என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டிய AEEO அலுவலக ஆய்வு, பார்வை மற்றும் பள்ளிப் பார்வைப் பணிகளை மாதவாரியாக பட்டியலிட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை
ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.
பள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.
முதல்வர் உத்தரவு
மாண்புமிகு முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகைத் திட்டம் - 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் BC / MBC / DNC / சிறுபான்மையர் மாணவ / மாணவியர்களில் மாநில அளவில் முதல் 500 இடங்களை பெரும் மாணவர்களுக்கு ரூ.3000/- அவர்களின் உயர்கல்விக்காக வழங்க முதல்வர் உத்தரவு
மாநில திட்ட இயக்குனர் உத்தரவு
U-DISE - பள்ளிகளின் பட்டியலை இறுதி செய்தல், அறிக்கை சமர்பித்தல் அறிவுரை வழங்கி அகை மாநில திட்ட இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
அனைத்து வகை பள்ளிகள் / கல்வி அலுவலகங்களில் 15.08.2013 அன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதை உறுதி செய்து அறிக்கை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
TRB - TNTET EXAM AUGUST 2013 HELP LINE
TRB - TNTET HELP LINE
044 - 28272455,
044 - 64525208,
044 - 64525209.
TET HALL TICKET MISTAKES? டி.இ.டி ஹால் டிக்கெட்டில் பிழையா ? என்ன செய்யலாம்?
TET HALL TICKET MISTAKES? டி.இ.டி ஹால் டிக்கெட்டில் பிழையா ? என்ன செய்யலாம்?
வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 18ஆம் தேதி நடைபெறும் டி.இ.டி முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் கடந்த 6ஆம் தேதி இணையதளத்தில் வெளியானது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் டவுன்லோட் செய்த பின் பார்த்ததில் அதில் தேர்வு மைய மாவட்டம், பெயர், புகைப்படம் போன்ற பதிவுகள் மாறி வந்ததால், தேர்வர்கள் அச்சம் அடைந்தனர்.