பி.எட்., தேர்வில் தோல்வியடைந்து, பின் வெற்றி பெற்றவருக்கு, ஆசிரியர் தகுதி சான்றிதழ் வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஜூன் மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், வினோத்குமார் என்பவர் கலந்து கொண்டார். விளக்க குறிப்பேட்டின்படி, பி.எட்., அல்லது ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ இறுதி ஆண்டு தேர்வை எழுதுபவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியும்.