Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதார் அட்டை பிழைகளை ஆன்லைனிலேயே சரி செய்யலாம்!


             ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைனிலேயே பிழை திருத்தம் செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


முதுகலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி : தோல்வியை குறைக்க அதிரடி நடவடிக்கை


             பிளஸ் 2 தேர்வில், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில், மாணவர்கள் அதிகளவில், தோல்வி அடைவதை தவிர்க்கும் வகையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கும் பணியில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.



ஏடிஎம் சேவை: வங்கிகளுக்கு புதிய உத்தரவு


             ஏடிஎம் பயன்படுத்துவோரின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 


பி.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 94 சதவீதம்

          பி.எட்., படிப்பு தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பி.எட்., படிப்பிற்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்


        பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.


ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச விடைகளில் குளறுபடி - நாளிதழ் செய்தி


      முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ-ஆன்சர்), ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட நிலையில், அதில் ஏராளமான தவறுகள் உள்ளன.


பள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு ஜாதி பெயர்களா? ஐகோர்ட் நோட்டீஸ்


         தமிழகத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில், ஒட்டியிருக்கும் ஜாதி பெயர்களை, நீக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட ஐகோர்ட், விசாரணையை, செப்டம்பருக்கு தள்ளிவைத்துள்ளது.



கேட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை...


           ஐ.ஐ.எம்.,கள் மற்றும் நாட்டின் இதர புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் கேட் தேர்வு நெருங்கும் நேரமிது. பல்வேறான வழிகளில், கடுமையாக முயன்று தங்களை தேர்வுக்காக மாணவர்கள் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கல்வி உதவித்தொகை திட்டத்தில் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு


          பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்படும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மாணவர் குடும்பத்தின் வருமான உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு சேவை மனப்பான்மை அவசியம்: சிபிசிஐடி., டிஐஜி.

          பாபநாசத்தில் ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது. 
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை சிபிசிஐடி டிஐஜி., ஜான் நிக்கல்சன் பேசுகையில்,

எம்.பில்/பி.எச்டி/எம்.எட் ஊக்க ஊதிய உயர்வுக்கான தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என்ற தலைமை ஆசிரியர் உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்காலத் தடை

    தேனி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஜெயக்குமார் மற்றும் பிரகாஷம் இரு ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கிய எம்.பில் ஊக்க ஊதிய உயர்வுக்கான தொகையை (recovery) திரும்ப செலுத்த மாறு  அவர்களுக்கு அவர்களின் தலைமை ஆசிரியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

Contact Form For Padasalai

இன்று வந்த இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 6ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

          
          சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க வருகிற 06.08.2013 செவ்வாய் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு | BT to PG Promotion Panel - Final List Ready.


            பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் இயற்பியல், கணித ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள¢ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்படும்.


TET Hall Ticket may be publish in Aug-5 - TRB


            வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர்.

பி.எட். கல்லூரிகளின் வேலை நாள்கள்180 லிருந்து 200 வேலை நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது,மேலும் பி.எட். படிப்பில் புதிய பாடங்கள்


          ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பி.எட். படிப்பில் புதிய பாடங்களை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

கல்வி கட்டண விவரத்தை இணையதளத்தில் வெளியிட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கெடு


         கல்வி கட்டண விபரங்களை ஒரு மாதத்திற்குள் அந்தந்த பள்ளியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 10 சதவீதம் உறுதி


           ஜூன் 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து ஜூலை 2013 வரை 9.79 புள்ளிகள் அதிகரித்து 90.62ஆக உள்ளது. எனவே AICPIN குறியீட்டு எண் படி ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 10% என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என மத்திய அரசு பணியாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

1 முதல் 4ஆம் வகுப்பில் 100க்கு மேல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் SABL அட்டைகள் வழங்க விவரம் கோரப்பட்டுள்ளது.


                அரசு / அரசு நிதியதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில், பல பள்ளிகள் 1 முதல் 4 வகுப்புகளில் 100க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளதெனவும், அப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 1Set கற்றல் அட்டைகள் கொண்டு கற்றல் நிகழ்வுகள் நேர்த்தியாக நடைபெற இயலவில்லை என்றும், எனவே அவ்வாறு கூடுதல் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் அட்டைகள் வழங்க விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோர் பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல்


             சென்னை மாநகராட்சியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு


           பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்களை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய உத்தரவின் படி

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் - திரு. இராமேஸ்வர முருகன்,
அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் - திரு. தேவராஜன்,
தொடக்கக் கல்வித் துறை  இயக்குநர் - திரு.இளங்கோவன் 
RMSA இயக்குனர் - திரு.சங்கர் 
TRB இயக்குனர் - திருமதி. வசுந்திரதேவி 
DTERT இயக்குனர் - திரு.கண்ணப்பன் 
மெட்ரிக் பள்ளி இயக்குனர் திரு. பிச்சை 
பாடநூல் கழக இயக்குநர் -  திரு.அன்பழகன் 

TET ல் இடஒதுக்கீடு கோரி வழக்கு


             ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்வில் மதிப்பெண்களை நிர்ணயிப்பதில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

TET: பாடப்புத்தக அட்டையில் இருந்தும் கேள்விகள்: டி.இ.டி., தேர்வுக்கு நிபுணர்கள் ஆலோசனை


          "பள்ளி பாடப்புத்தக அட்டையில் இருந்து கூட, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படலாம்; எனவே, புத்தகங்களை, ஒரு வரி விடாமல், முழுமையாக படிக்க வேண்டும்" என, டி.இ.டி., தேர்வு எழுதுவோருக்கு, பேராசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.




நல்லாசிரியர் விருது தேர்வில் புதுமை: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்


         "மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என பள்ளிக் கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்ய அரசு திட்டம்?


          பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

வருமான வரி : கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம்


         இந்திய குடிமக்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.




ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்


           ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.

TRB Published the Tentative Answer Key - 2013


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Objection for Tentative Answer Keys - Submit at Teachers Recruitment Board on or before 5.30PM on 05.08.2013


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
TENTATIVE ANSWER KEY - POST GRADUATE
As per the Notification No.2/2013 published on 09.05.2013, the Written Competitive Examination for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and Physical Education Director Grade - I Posts was held on 21.07.2013. A total No. of 1,67,664 candidates applied for the written examination. Out of this, 7914 candidates were absent for the Examination and 1,59,750 candidates attended the Written Examination.
Now, the Board has released the tentative key answers for all the subjects for the post of Post Graduate Assistants. Candidates are given time upto 05.08.2013 to submit their representation regarding objection if any on the tentative answer keys published along with the proof for the disputed answer keys. Their representation may be sent through post or may be dropped in the Box provided at Teachers Recruitment Board on or before 5.30PM on 05.08.2013

Utmost care has been taken in preparing the key answers list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect key answer would not confer any right of enforcement.
          

Dated: 29-07-2013

Chairman

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive