Half Yearly Exam 2024
Latest Updates
2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழகம் ஏற்பாடு
வரும் செப்டம்பர் இறுதியில், ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு
வழங்க, இரண்டாம் பருவத்திற்கு, 2.29 கோடி பாடப் புத்தகங்களை அச்சிடும்
பணியை, பாடநூல் கழகம், மும்முரமாக செய்து வருகிறது.
12,618 கிராம பஞ்சாயத்துகளில் செயலாளர்களை நியமிக்க நடவடிக்கை
தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 கிராம
பஞ்சாயத்துகளில் செயலாளர்களை நியமிப்பதற்கான பணி வரன்முறைகளை வகுத்து மாநில
அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள் மறுப்பு
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ்,
56,682 இடங்கள் இருந்த போதும், 18,946 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. இது,
33.42 சதவீதம். 1,012 தனியார் பள்ளிகள், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை
குழந்தைகளுக்கு, "சீட்' கொடுக்க மறுத்துள்ளன. "இந்த பள்ளிகள் மீது,
விரைவில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
ஒரே நாளில் இரு தேர்வுகள்: அரசுத் துறைகள் மோதலால் தேர்வர்கள் பாதிப்பு - நாளிதழ் செய்தி
வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஒரே நாளில் இரு
தேர்வுகள் நடப்பதால் தேர்வர்கள் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில்
டி.என்.பி.எஸ்.சி மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்,
டைப்பிஸ்ட், சுருக்கெழுத்து டைப்பிஸ்ட் காலி பணியிடங்களுக்கான
டி.என்.பி.எஸ்.சி மூலம் போட்டி எழுத்து தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 25ம்
தேதி நடக்கிறது. இத்தேர்வில் சுமார் 9 லட்சம் பேர் பங்கேற்பர் என
எதிர்பார்க்கப்படுகிறது.
டி.ஆர்.பி., பணியிடங்கள் பல மாதங்களாக காலி: அலுவலர்கள் திணறல்
முதுகலை ஆசிரியர் தேர்வு, டி.இ.டி., தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு
என, பல்வேறு தேர்வுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள டி.ஆர்.பி.,யில்,
மிக முக்கியமான உறுப்பினர் - செயலர் பணியிடமும், டி.இ.டி., இயக்குனர்
பணியிடமும், நிரந்தரமாக நிரப்பப்படாமல், கூடுதல் பொறுப்பு நிலையில், வேறு
அலுவலர்களிடம், பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மூளையைத் தூங்க விடாதீர்கள்!
பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும்
மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை
வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு
இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா
பட்நாயக் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்
இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு,
மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை பல்கலைக்கழக இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று
வெளியானது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டப் பல்கலை இணையதளம் முடங்கியது: பரிதவித்த மாணவர்கள்
சட்டப் பல்கலைக்கழக இணைய தளம் திடீரென முடங்கியதால், "கட்-ஆப்"
மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல், மாணவர்கள் பரிதவித்தனர்.
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு
உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, வரும், 26ம் தேதி வரை, காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு எப்போது?
பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு வெளியாவதில், இந்த ஆண்டு, கால தாமதம்
ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான், முடிவு
வெளியாகும் என, கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள், உயர் கல்வியில்
சேர்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு: 18 நாளில், 20 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
பொறியியல் பொதுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வு முடிந்த, 18 நாட்களில்
மட்டும், 20 ஆயிரம் மாணவர்கள், "ஆப்சென்ட்" ஆகியிருப்பது, அண்ணா பல்கலையை,
அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தலைமை ஆசிரியர்கள் ஓய்வில் சிக்கல்: நிதி இழப்பை ஈடுகட்ட வேண்டும்
தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் முன், அவர்கள்
பணியாற்றிய அனைத்து பள்ளிகளிலும், நிதி இழப்பு இருந்தால், அதை சரி செய்ய
வேண்டும். இல்லை எனில், அவர் ஓய்வூதியம் பெறுவதற்கு பரிந்துரை செய்த,
மாவட்ட கல்வி அலுவலர்களே, முழு பொறுப்பாவார்கள், என பள்ளி கல்வி
இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
விளம்பரமின்றி யூடியூப்
வயது வித்தியாசமில்லாமல், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் இணையம் மூலம் வீடியோ பார்க்க பயன்படுத்தும் தளம் யூடியூப்தான் (YouTube Video Website).
மற்ற மாநில TET வினாத்தாள்களை போன்று தயாரிக்கப்படும் TNTET வினாத்தாள்கள்
மிக மிக நுட்பமான முறையில் வினவப்படும் TNTET
வினாத்தாள்கள் முழுமையாக ஒரு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே
தயாரிக்கப்பட்டு வருகின்றன.
உதவி பேராசிரியர் நியமனம் குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, உதவி
பேராசிரியர் நியமனம் குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு திரும்ப
பெறப்பட்டது. உதவி பேராசிரியர் நியமனம் குறித்து நேற்று வெளியிட்ட
அறிவிப்பில், பி.எச்டி., குறித்து எந்தவித தகவலும் வெளியிடவில்லை.
அவர்களின் பணி அனுபவம் எவ்வாறு எடுத்து கொள்ளப்படும் என்பது குறித்தும்
தெரிவிக்கப்படவில்லை.