சென்னை பல்கலைக்கழக இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று
வெளியானது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
Revision Exam 2025
Latest Updates
சட்டப் பல்கலை இணையதளம் முடங்கியது: பரிதவித்த மாணவர்கள்
சட்டப் பல்கலைக்கழக இணைய தளம் திடீரென முடங்கியதால், "கட்-ஆப்"
மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல், மாணவர்கள் பரிதவித்தனர்.
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு
உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, வரும், 26ம் தேதி வரை, காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு எப்போது?
பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு வெளியாவதில், இந்த ஆண்டு, கால தாமதம்
ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான், முடிவு
வெளியாகும் என, கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள், உயர் கல்வியில்
சேர்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு: 18 நாளில், 20 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
பொறியியல் பொதுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வு முடிந்த, 18 நாட்களில்
மட்டும், 20 ஆயிரம் மாணவர்கள், "ஆப்சென்ட்" ஆகியிருப்பது, அண்ணா பல்கலையை,
அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தலைமை ஆசிரியர்கள் ஓய்வில் சிக்கல்: நிதி இழப்பை ஈடுகட்ட வேண்டும்
தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் முன், அவர்கள்
பணியாற்றிய அனைத்து பள்ளிகளிலும், நிதி இழப்பு இருந்தால், அதை சரி செய்ய
வேண்டும். இல்லை எனில், அவர் ஓய்வூதியம் பெறுவதற்கு பரிந்துரை செய்த,
மாவட்ட கல்வி அலுவலர்களே, முழு பொறுப்பாவார்கள், என பள்ளி கல்வி
இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
விளம்பரமின்றி யூடியூப்
வயது வித்தியாசமில்லாமல், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் இணையம் மூலம் வீடியோ பார்க்க பயன்படுத்தும் தளம் யூடியூப்தான் (YouTube Video Website).
மற்ற மாநில TET வினாத்தாள்களை போன்று தயாரிக்கப்படும் TNTET வினாத்தாள்கள்
மிக மிக நுட்பமான முறையில் வினவப்படும் TNTET
வினாத்தாள்கள் முழுமையாக ஒரு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே
தயாரிக்கப்பட்டு வருகின்றன.
உதவி பேராசிரியர் நியமனம் குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, உதவி
பேராசிரியர் நியமனம் குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு திரும்ப
பெறப்பட்டது. உதவி பேராசிரியர் நியமனம் குறித்து நேற்று வெளியிட்ட
அறிவிப்பில், பி.எச்டி., குறித்து எந்தவித தகவலும் வெளியிடவில்லை.
அவர்களின் பணி அனுபவம் எவ்வாறு எடுத்து கொள்ளப்படும் என்பது குறித்தும்
தெரிவிக்கப்படவில்லை.
32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம் உடனடியாக பணி ஆணை வழங்க -உயர்நீதிமன்றம் உத்தரவு
32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம்: கோர்ட் உத்தரவு 2010-ம் ஆண்டு 32,000 ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 2011-ல் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனை எதி்ர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக பணி ஆணை வழங்க உத்தரவிட்டார்.
9th & 10th Handling Teacher's RMSA Training - Time Table
பணியிடைப் பயிற்சி
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து நான்கு நாட்கள் பணியிடைப்பயிற்சி இரு கட்டங்களாக பாடவாரியாக 10.07.2013 முதல் 30.07.2013 வரை இணைப்பில் உள்ளவாறு நடைபெறுகிறது. தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் இருந்து ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களை பயிற்சி மையங்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெயர் பதிவு: காலை 9.30 முதல் 10.00 மணி வரை
பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை
இந்த ஆண்டு 18,205 ஆசிரியர்கள் நியமனம்
இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
மொத்தம் 18,205 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அலுவலர்கள்
நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில்
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் 12,295 பட்டதாரி ஆசிரியர்கள்
தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு
மூப்பின் அடிப்படையில் 817 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய உத்தரவால், தொலை நிலைக் கல்வியில், எம்.பில்., படித்தவர்களின் உதவி பேராசிரியர்கள் கனவு தற்போது கேள்விக்குறி
தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி.,) மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி
பேராசிரியர் பணி நியமனத்தில், கல்வித் தகுதிக்கான மதிப்பெண்ணில், தொலைநிலை
கல்வி எம்.பில்., படிப்பிற்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண்
எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என, புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.
விவசாயம், நெசவு, மரவேலை தொடர்பான ஆசிரியர்கள் நியமனத்தடையை நீக்க வேண்டும் : முதல்வரிடம் கோரிக்கை மனு
பள்ளிகளில் விவசாயம், நெசவு,மரவேலை தொடர்பான
பாட ஆசிரியர்கள் நியமனத்தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு தொழிற்கல்வி
ஆசிரியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.