Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒன்றிய அளவில் கூட்டம் நடத்தி அறிக்கை அளிக்க இயக்குநர் உத்தரவு


              தொடக்கக் கல்வி - அரசின் நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்துதல் சார்பாக 15.06.2013 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர் -களின் கூட்டம் ஒன்றிய அளவில் நடத்தி அறிக்கை அளிக்க இயக்குநர் உத்தரவு

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கடலூரில் உண்ணாவிரதம்


            ஊதியம், பணி சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கூட்டமைப்பினர் கடலூரில் உண்ணாவிரதம் இருந்தனர்.
 

சி.ஆர்.சி மையக் கூட்டங்களும் பணியிடைப் பயிற்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்பு


                 தொடக்க, நடுநிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு 2013-14ஆம் ஆண்டிற்கான பணியிடைப் பயிற்சிகள் மற்றும் மாதாந்திரக் கூட்ட மையங்களை நடத்துவதற்கான முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள SCERT மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி & பயிற்சி நிறுவனங்களை கல்வித்துறைச் செயலகம் அறிவுறுத்தியுள்ளதாக அறிய வருகிறது.
 

மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு : தேர்வுக் கூட அனுமதி சீட்டுகள் விநியோகம்


              மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு எழுத ஆன்-லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், மேல்நிலைத் தேர்வு பள்ளி மாணாக்கர்கள் / தனித்தேர்வர்களாகவும் தேர்வெழுதி தோல்வி அடைந்தவர்கள் / தேர்வுக்கு வருகை புரியாது, தற்போது இச்சிறப்புத் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் (ஹால் டிக்கெட்) வரும் 17.06.2013 (திங்கட்கிழமை) மற்றும் 18.06.2013 (செவ்வாய் கிழமை) ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் தகுதிப் பட்டியலை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு


              அனைத்து பொறியியல் கல்லூரிகளின் தகுதிப் பட்டியலை ஜூன் 21-ஆம் தேதி, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அண்ணா பல்கலை கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொறியியல், மருத்துவத்திற்கான கட்-ஆப் மதிப்பெண்களில் குளறுபடி


                   பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான, கட்-ஆப் மதிப்பெண் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களின், கட்-ஆப் மதிப்பெண்கள், மாறியுள்ளன. மறு மதிப்பீட்டிற்கு, பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பிக்காத போதும், அவர்களுடைய விடைத்தாள்களை, தேர்வுத்துறை, மறு மதிப்பீடு செய்ததில், ஏராளமானோருக்கு, மதிப்பெண்கள் குறைந்துள்ளன.
 

அங்கீகாரம் பெறாத மருத்துவ கல்லூரிகள்: சுகாதார துறை செயலர் எச்சரிக்கை - நாளிதழ் செய்தி


           "உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
 

நெல்லை பல்கலை.,யில் தொடரும் பிரச்னைகள்: மாணவர்கள் போராட முடிவு


            நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் தொடர் பிரச்னைகளை கண்டித்து போராட்டங்களை நடத்த மாணவர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
 

ஜூன் 23ல் இளநிலை ஆராய்ச்சியாளர் தகுதித் தேர்வு


            இளநிலை ஆராய்ச்சியாளர் (ஜே.ஆர்.எப்.,) மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு, ஜூன் 23 ல் நடக்கிறது. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம் (சி.எஸ்.ஐ.ஆர்.,) மற்றும் பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) இணைந்து நடத்தும், தேசிய தகுதித் தேர்வு, நாடு முழுவதும், 26 மையங்களில் நடக்க உள்ளது.
 

எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் எத்தனை பேர்?


எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் (2013-14) அடிப்படையில், 200-க்கு 200 தொடங்கி 200-க்கு 190 வரை ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை கீழே அளிக்கப்பட்டுள்ளது.

கட்-ஆஃப் எத்தனை பேர்?
200-க்கு 200 7
200-க்கு 199.75 14
200-க்கு 199.50 33

பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 24-ல் தொடக்கம்


          பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

நாமக்கல்லில் 3 தனியார் பள்ளிகளில் வருமான வரித் துறை சோதனை


           பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து நாமக்கல்லிலுள்ள மூன்று பிரபல தனியார் பள்ளிகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


தேசிய அளவில் ஒரே பாடத் திட்டம் அவசியம்


              தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற, தேசியளவில் ஒரே பாடத் திட்டம் அவசியம் என, ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் என்.திருநாவுக்கரசு வலியுறுத்தினார்.
 

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு தேதி அறிவிப்பு


          டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, ஆகஸ்ட் 25ம் தேதி நடத்தப்படுகிறது என்று அதன் தலைவர் நவநீதகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்றும் விசாரணைக்கு வரவில்லை


              இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மே மாதம் நீதிமன்றம் விடுமுறைக்கு பின்பு கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. பின்னர் ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

என்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்காக சென்னை வரும் மாணவர்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை தமிழக அரசு அறிவிப்பு


          தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

குழப்பமான அரசாணையால் ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல்: 20 ஆயிரம் ஆசிரியர்கள் தவிப்பு


            எம்.எட்., உடன், எம்.பில்., மற்றும் பி.எச்டி., தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்களுக்கு, இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்க வழி வகை செய்யும் அரசாணை, குழப்பங்கள் நிறைந்ததாக இருப்பதால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊக்க தொகையை பெற முடியாமல், தவித்து வருகின்றனர்.
 

அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 மற்றும் 20ம் தேதி அழைத்து பேச தமிழக அரசு முடிவு


           தமிழகத்திலுள்ள அனைத்து தொடக்கக்கல்வித்துறையை சார்ந்த ஆசிரியர் சங்கங்களுடன் வருகிற 19ம் தேதியும், பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த அனைத்து உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி சங்கங்களுடன் 20ம் தேதியும் கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் திரு. செ.முத்துசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விரைவில் முடிவெட்டப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

உயர்நிலைப் பள்ளிகளில் தரம் உயரவில்லை: பிளஸ் 1 மாணவர்கள் தவிப்பு


          நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு இல்லாததால், பிளஸ்1 சேர்க்கையில் இடம் கிடைக்காமல், மாணவர்கள் தவிக்கின்றனர்.

8,000 பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் அறிவிப்பு


            தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, 8,000 பள்ளிகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது. ஆண்டு கட்டணமாக, 3,000 ரூபாய் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, பள்ளிகளுக்கு தகுந்தாற்போல், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்


           பொறியியல் கவுன்சிலிங் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், கவுன்சிலிங் தொடங்குவதற்கான இறுதி கட்டம் நெருங்கிவிட்டது. இந்நிலையில், கவுன்சிலிங் தொடர்பான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எத்தனை இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு?


           தமிழகத்தில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மட்டும் முதல்கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
 

பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதா.... விவரம் கேட்கும் பள்ளிக் கல்வித்துறை


              முழுவுதும் பள்ளிகள் திறந்த நாளில், பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விபரங்களை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. பாடப்புத்தகங்கள் மற்றும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.
 

உணவு தொடர்பான துறைகளில் ஆர்வமா?


           உணவு பற்றிய படிப்பை ஒரு சிறந்த ஆர்வமூட்டும் படிப்பாக கருதும் மாணவர்களுக்கு, அத்தொழில்துறையில், பல அற்புதமான வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன.
 

வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்


           தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வழங்கப்படும் இளநிலை படிப்புகள்

வேளாண் அறிவியல் படிப்புகள் - சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை

* பி.எஸ்சி., (வேளாண்மை) - 4 வளாகங்களில் சேர்த்து 420 இடங்கள்(சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)

TET Article - உங்கள் குழந்தைகள், பேரன் பெயர்த்திகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்? அரசுப் பள்ளியிலா? தனியார் பள்ளியிலா? - தினமணி கட்டுரை

         முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது மேலும் சில லட்சம் அதிகரிக்கக்கூடும். இந்நிலையில், "ஆசிரியர் தேர்வு தொடர்பான பள்ளிக்கல்வித் துறை அரசாணை 252-ஐத் திரும்பப்பெற வேண்டும்; தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்' என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Private Schools Fee Determination Committee Fee Fixed for the year 2013-2016


District
AriyalurFixation
ChennaiFixation
CoimbatoreFixation
CuddaloreFixation
DharmapuriFixation

ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள்: ஜூன் 17ல் விற்பனை


         ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஜூன் 17 ல் விற்பனை செய்யப்பட உள்ளது.

பி.இ. கட்-ஆப்: 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை சரிவு


           "கடந்த ஆண்டு, கட்-ஆப் 200க்கு, 200 மதிப்பெண்களை, 32 மாணவர்கள் பெற்றனர். இந்த ஆண்டு, 12 மாணவர்கள் மட்டுமே, 200க்கு, 200 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்" என பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் தெரிவித்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive