ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஜூன் 17 ல் விற்பனை செய்யப்பட உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
பி.இ. கட்-ஆப்: 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை சரிவு
"கடந்த ஆண்டு, கட்-ஆப் 200க்கு, 200 மதிப்பெண்களை, 32 மாணவர்கள்
பெற்றனர். இந்த ஆண்டு, 12 மாணவர்கள் மட்டுமே, 200க்கு, 200 மதிப்பெண்களை
பெற்றுள்ளனர்" என பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் தெரிவித்தார்.
ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஆர்வம் குறைவு
ஈரோட்டில் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பம் வினியோகிக்கும் பணி துவங்கிய 15 நாளில் 127 விண்ணப்பங்கள் மட்டுமே விற்றுள்ளன.
தொழிற்கல்விக்கான விண்ணப்பங்கள் குவிந்தன: தர வரிசை பட்டியல் தயாரிப்பு தீவிரம்
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான சென்டாக் சேர்க்கைக்கு, 6765 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
அரசு அங்கீகாரமின்றி மாணவர்கள் சேர்ப்பு: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
அரசு அங்கீகாரமில்லாத தனியார் பள்ளிகளில் மாணவர்கள்
சேர்க்கை நடைபெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ.,
எச்சரித்துள்ளார்.
இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?
எஸ்.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அனுமதி
சீட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு
ஏற்பட்டது.
இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்
1959ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., இனி வெளிநாடுகளிலும்...
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., ஆகியவற்றின் சர்வதேச கிளைகளை தொடங்குவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி., ) திட்டமிட்டுள்ளது. இதன்படி முதன்முறையாக கத்தார் நாட்டில் ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., ஆகியவற்றின் கிளைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என (எம்.எச்.ஆர்.டி., ) தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெர்ச்சன்ட் நேவி
மெர்ச்சன்ட் நேவி என்பது லட்சக்கணக்கான டன் கொள்ளவுகளைக் கொண்ட
டேங்கர்கள், கார்கோ மற்றும் பயணிகள் கப்பல்களைக் குறிக்கிறது. கப்பற்படை
என்பது ராணுவத்தோடு தொடர்புடையது.
பள்ளிகள் முன் பெற்றோர் பரிதவிப்பு
பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ததை கல்வித்துறை கடைசி
நேரத்தில் அறிவித்ததால், கல்வியாண்டின் துவக்க தினமான நேற்று, பெற்றோரும்,
குழந்தைகளும் குழப்பம் அடைந்தனர்.
TN-TET Application Issue Details | ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பம் வழங்கல் குறித்து அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை
ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் 17.06.2013 காலை 10.00 மணி முதல் 01.07.2013 மாலை 5.30 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணி முதல் 5.30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விற்பனை செய்யப்படும்.
TNTET – 2013 விண்ணப்பங்கள் விற்பனை தொடர்பான தலைமை ஆசிரியர்களுக்கான குறிப்புகள்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு – 2013 தேர்விற்கான விண்ணப்பங்கள் இம்முறை
அனைத்து அரசு மேனிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலம் விற்பனை
செய்யப்பட
உள்ளது. இதற்கான தகுந்த முன்னேற்பாடுகள் செய்திட தலைமை
ஆசிரியர்களுக்கு
பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
1.
TNTET – 2013 தேர்விற்கு தாள் 1 மற்றும் தாள் 11க்கு வெவ்வேறு விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
2.
தாள் 1 மற்றும் தாள் 11க்கான விண்ணப்பங்கள் வெவ்வேறு தனித்தனி
அறைகளில்
விற்பனை செய்யப்பட வேண்டும்.
TN-TET Application Issue Details | ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பம் வழங்கல் குறித்து அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை
ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் 17.06.2013 காலை 10.00 மணி முதல் 01.07.2013 மாலை 5.30 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணி முதல் 5.30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விற்பனை செய்யப்படும்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி: 4 புதிய திட்டங்கள் அமல்
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு, நான்கு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
பள்ளிகள் திறப்பு: இலவச பஸ் பாஸ் விரைவில் கிடைக்குமா?
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இலவச, பஸ் பாஸ்
வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், பள்ளி கல்வித் துறையும், போக்குவரத்து துறையினரும்
விரைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
மருத்துவ பல்கலை மாணவர்களுக்கு அறிவுரை
தனியார் மருத்துவக் கல்லூரிகள், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு,
இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்.சி.ஐ.,) ஒப்புதல் பெற்றுள்ளனவா என்பதை
உறுதி செய்த பின்பே, மாணவர்கள், அக்கல்லூரிகளில் சேர வேண்டும் என, மருத்துவ
பல்கலை அறிவுறுத்தி உள்ளது.
ஆரம்ப பள்ளி இடை நிற்றலை தடுக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு
பெண் குழந்தைகளின், பள்ளி இடை நிற்றலை தடுக்கும் விதமாக, 14 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட,
இந்தாண்டு ஒதுக்கீடு அதிகம்.
உதவித் தொகை வழங்குவதை கண்காணிக்க இணையதளம்
தமிழக கல்லூரிகளில் பயிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த, மாணவ,
மாணவியருக்கு, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
மருத்துவப் படிப்பு விண்ணப்பதாரர்களுக்கான தர வரிசைப் பட்டியல், இன்று
வெளியிடப்படுகிறது. மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்தில் நடக்கும்
நிகழ்ச்சியில், தர வரிசைப் பட்டியலில், முதல், 10 இடங்களை பிடிக்கும்
மாணவர்களுக்கு, அவர்களுக்கான, கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையையும், அமைச்சர்
வழங்குகிறார்.
தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் பணி முடியவில்லை
பள்ளிகள் திறந்த நிலையிலும், தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம்
நிர்ணயிக்கும் பணி முடியவில்லை. இதனால், நடப்பு கல்வியாண்டில், கட்டணம்
வசூலிப்பதில், பிரச்னை ஏற்பட்டுள்ளது.
42 மழலையர் பள்ளிகளுக்குத் தடை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள
42 மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு
கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.