Revision Exam 2025
Latest Updates
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி: 4 புதிய திட்டங்கள் அமல்
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு, நான்கு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
பள்ளிகள் திறப்பு: இலவச பஸ் பாஸ் விரைவில் கிடைக்குமா?
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இலவச, பஸ் பாஸ்
வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், பள்ளி கல்வித் துறையும், போக்குவரத்து துறையினரும்
விரைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
மருத்துவ பல்கலை மாணவர்களுக்கு அறிவுரை
தனியார் மருத்துவக் கல்லூரிகள், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு,
இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்.சி.ஐ.,) ஒப்புதல் பெற்றுள்ளனவா என்பதை
உறுதி செய்த பின்பே, மாணவர்கள், அக்கல்லூரிகளில் சேர வேண்டும் என, மருத்துவ
பல்கலை அறிவுறுத்தி உள்ளது.
ஆரம்ப பள்ளி இடை நிற்றலை தடுக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு
பெண் குழந்தைகளின், பள்ளி இடை நிற்றலை தடுக்கும் விதமாக, 14 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட,
இந்தாண்டு ஒதுக்கீடு அதிகம்.
உதவித் தொகை வழங்குவதை கண்காணிக்க இணையதளம்
தமிழக கல்லூரிகளில் பயிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த, மாணவ,
மாணவியருக்கு, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
மருத்துவப் படிப்பு விண்ணப்பதாரர்களுக்கான தர வரிசைப் பட்டியல், இன்று
வெளியிடப்படுகிறது. மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்தில் நடக்கும்
நிகழ்ச்சியில், தர வரிசைப் பட்டியலில், முதல், 10 இடங்களை பிடிக்கும்
மாணவர்களுக்கு, அவர்களுக்கான, கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையையும், அமைச்சர்
வழங்குகிறார்.
தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் பணி முடியவில்லை
பள்ளிகள் திறந்த நிலையிலும், தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம்
நிர்ணயிக்கும் பணி முடியவில்லை. இதனால், நடப்பு கல்வியாண்டில், கட்டணம்
வசூலிப்பதில், பிரச்னை ஏற்பட்டுள்ளது.
42 மழலையர் பள்ளிகளுக்குத் தடை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள
42 மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு
கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? எதிர்கொள்வது எப்படி?
2 மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம்
முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
அரசுப் பணியில் சேர என்ன தகுதி வேண்டும்? ஆர்.நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர்
அரசு அலுவலகம் என்றாலே நமக்கு நினைவுக்கு
வருவது நூலாம்படை படர்ந்த சுவர்கள்; வெற்றிலை பாக்கு உமிழ்ந்த இடங்கள்;
அங்குமிங்குமாக கிடக்கும் மேஜைகள், நாற்காலிகள்; குவிக்கப்பட்ட கோப்புகள்;
உடைந்த நாற்காலியில் ஒரு காலை சம்மணமிட்டு தூங்கி வழியும் அலுவலர்.
பரபரப்போ அவசரமோ இல்லாத நிதானமான தாமதமான சூழல், அரசு அலுவலகத்துக்கான முத்திரை என்றாகிவிட்டது. இந்தியாவில் எங்கு சென்றாலும் இதே நிலைதான்.
தமிழகத்தில் 900 நர்சரி பள்ளிகளை மூட அரசு உத்தரவு
அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை
குறைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இன்மையை காரணம் காட்டி, 900 நர்சரி
பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது.