அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார்
5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4 தேர்வு நடத்தப்பட
உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பாடநூல் கழக
விற்பனை மையத்தில் இன்று பள்ளி பாடப்புத்தகங்கள் வாங்க மாணவர்களின்
பெற்றோர் கூட்டம் அலைமோதியது. பிளஸ்–1 பாடப்புத்தகம் இருப்பு இல்லாததால்
பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அரசு நலத்திட்ட உதவிகளை முன்னிறுத்தி
தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை
அதிகப்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக்கல்வி இயக்குனர்
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள
42 மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு
கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
பி.இ., ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை, இன்று
(12ம் தேதி) காலை வெளியிடுகிறது. வரும் 21ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை
கலந்தாய்வு துவங்குகிறது. ஜூலை, 30ம் தேதி வரை கலந்தாய்வை நடத்தி, ஆகஸ்ட்
1ம் தேதி, வகுப்புகளை துவக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய்
விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர்
வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்
மாணவர்கள் எவ்விதமான கட்டணமும் வசூலிக்க கூடாது என கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால்
அரசுப்பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு
என்.டி.வெங்கடாச்சலம் கூறினார்.
பிளஸ் 2 படிப்பை முடித்தப்பிறகு, உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதென்பது மிகவும்
முக்கியமான ஒரு செயல்பாடாக கருதப்படுவதைப் போல், பத்தாம் வகுப்பை
முடித்து, மேல்நிலைப் படிப்பிற்கான பிரிவைத் தேர்ந்தெடுப்பதும்
முக்கியத்துவம் பெறுகிறது.
2 மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம்
முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், இடமாற்றம்
செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு ஆதரவு தெரிவித்து, பிள்ளைகளை பள்ளிக்கு
அனுப்பாமல், பெற்றோர் புறக்கணித்தனர்.
சோமனூர், கருகம்பாளையத்தை சேர்ந்தவர்
முத்துக்குமாரசாமி, 39; விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி விஜயா, 34,
இவர்களுக்கு பிரவீன் சந்தர், 8, என்ற மகனும், தீப்தி 5, என்ற மகளும்
உள்ளனர். மகன், சாமளாபுரத்தில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு
படிக்கிறான்.
காரைக்குடியில், உண்டு, உறைவிடப் பள்ளிக்கு
கட்டமைப்பு வசதி இல்லை என்ற காரணத்தால், மூடப்பட்டது. அங்கு படித்த
குழந்தைகள், பள்ளியை விட்டு செல்ல மறுத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 20 நர்சரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, "நோட்டீஸ்" வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்,
211 மாணவர்கள், முதல் மூன்று இடங்களை பிடித்திருப்பதால், இவ்வளவு பேரையும்,
முதல்வர் அலுவலகத்திற்கு, எப்படி அழைத்துச் செல்வது என, தெரியாமல்,
கல்வித்துறை அதிகாரிகள், தவித்து வருகின்றனர்.
ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட
குழந்தைகளுக்கு, மகுடம் அணிவித்து, "இளவரசர், இளவரசி" பட்டம் சூட்டி, அரசு
துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் மகிழ்வித்தனர்.
தனியார் பள்ளிகள், இட பிரச்னை குறித்து ஆய்வு
செய்து வரும் நிபுணர் குழு, இம்மாத இறுதிக்குள், தமிழக அரசிடம், அறிக்கையை
சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி., என்ற மத்திய பணியாளர்
தேர்வாணையம், ஐ.ஏ.எஸ், - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., .உட்பட உயர் பதவிகளுக்கு
சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்துகிறது. முதல் நிலை , பிராதான தேர்வு,
நேர்முகத்தேர்வு என 3 கட்டமாக நடக்கிறது.
இரட்டைப்பட்டம் எனும் முறையில் ஓராண்டு
பட்டப்படிப்பு மற்றும் மூன்றாண்டு பட்டம் படித்தவர்களுக்கு இடையேயான வழக்கு
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் இன்று
மாலைக்குள் தற்காலிக முடிவு தெரியவரும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும்
தகவல்கள் தெரிவித்தன.
அரசு கல்லூரி முன்னாள் முதல்வர்கள்
ப.சிவகுமார், மு.திருமாவளவன் மற்றும் முன்னாள் பேராசிரியர் அ.மார்க்ஸ்
ஆகியோர் இணைந்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது
அவர்கள் கூறியதாவது:
அரசு அலுவலகம் என்றாலே நமக்கு நினைவுக்கு
வருவது நூலாம்படை படர்ந்த சுவர்கள்; வெற்றிலை பாக்கு உமிழ்ந்த இடங்கள்;
அங்குமிங்குமாக கிடக்கும் மேஜைகள், நாற்காலிகள்; குவிக்கப்பட்ட கோப்புகள்;
உடைந்த நாற்காலியில் ஒரு காலை சம்மணமிட்டு தூங்கி வழியும் அலுவலர்.
பரபரப்போ அவசரமோ இல்லாத நிதானமான தாமதமான சூழல், அரசு அலுவலகத்துக்கான முத்திரை என்றாகிவிட்டது. இந்தியாவில் எங்கு சென்றாலும் இதே நிலைதான்.
அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை
குறைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இன்மையை காரணம் காட்டி, 900 நர்சரி
பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்தாண்டு பிறப்பித்துள்ள "விருப்ப கடிதம்"
உத்தரவால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை
விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை
முடிந்து ஜூன் 03ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அரசு
அறிவித்திருந்தது. இருப்பினும் கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில்
தொடர்ந்து அதிகமாக இருந்ததன் காரணமாக இந்த விடுமுறை ஜூன் 09 வரை
நீடிக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லவ்லி
புரொபஷனல் பல்கலைக்கழக துணைவேந்தர் ரமேஷ் கன்வர் தினமலர் கல்விமலருக்கு
அளித்த பிரத்யேக பேட்டி:
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி
துவங்குகிறது. அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஆசிரியர்கள் , வாழ்க்கையில்
சாதிக்கும் ஆசை கொண்ட மாணவர்கள் இவைதான் முக்கிய கருப்பொருள்கள் இங்கு.
"முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு
விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்துடன் வருகைப்பதிவேடு உள்ளிட்ட சான்றுகளை
சமர்பிக்க வேண்டும்" என, ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ள, புதிய
நிபந்தனையால், முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக விண்ணப்பிப்போர் கலக்கம்
அடைந்து உள்ளனர்.
பள்ளிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம்
ஆசிரியர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணிமாறுதல் பெற்றுக் கொள்ளலாம் என
பள்ளிக் கல்வி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
வைகைச்செல்வன் தெரிவித்தார்.
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும்
உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்படுகின்றன. கோடை வெப்பம்
காரணமாக பள்ளிகள் ஜூன் 3-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ஆம் தேதி
திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு
ஏப்ரல் 20-ஆம் தேதியோடு நிறைவடைந்தன. ஏப்ரல் 21 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை
கோடை விடுமுறை விடப்பட்டது.
ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசாணை எண். 252
இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது. எனவே, அந்த அரசாணையைத் திரும்பப் பெற
வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கருத்தரங்கில்
வலியுறுத்தப்பட்டது.
ஜூன்/ஜூலை 2013, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்புத் துணைத் தேர்விற்குத் தனித்தேர்வர்களை ‘சிறப்பு அனுமதித் திட்டத்தின்’ கீழ் தேர்வெழுத அனுமதித்தல்
செய்திக்குறிப்பு
ஜூன்/ஜூலை 2013 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்புத் துணைத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் Online-ல் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் டீn-டiநே-ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:
1. மார்ச் 2013, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.
2013 – 2014 ஆம் கல்வியாண்டில் நாளை பள்ளி திறக்கப்படவுள்ளது. இந்நாளில் தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும்
பணிகளை மற்றவர்களும் தெரிந்துகொள்ள
நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
1. அரசின்
நலத்திட்டங்களான விலையில்லா புத்தகங்களையும், நோட்டுகளையும், சீருடைகளையும்,
காலணிகளையும், புத்தகப்பைகளையும், . . . மாணவ, மாணவியர்க்கு வழங்க பதிவேடுகளைத்
தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு விலையில்லா திட்டதிற்கும்
தனித்தனி பதிவேடுகளை வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.