Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதல்வரின் முயற்சியால் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வு: தோப்பு வெங்கடாச்சலம்


            முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் அரசுப்பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கூறினார்.
 

பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுக்க விருப்பமா?


          பிளஸ் 2 படிப்பை முடித்தப்பிறகு, உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதென்பது மிகவும் முக்கியமான ஒரு செயல்பாடாக கருதப்படுவதைப் போல், பத்தாம் வகுப்பை முடித்து, மேல்நிலைப் படிப்பிற்கான பிரிவைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.
 

குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? எதிர்கொள்வது எப்படி?


         2 மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 

தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளியை புறக்கணிக்கும் பெற்றோர்


           ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு ஆதரவு தெரிவித்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர் புறக்கணித்தனர்.
 

பள்ளியில் சேர்க்க மறுப்பு: பெற்றோர் உள்ளிருப்பு போராட்டம்


          சோமனூர், கருகம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, 39; விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி விஜயா, 34, இவர்களுக்கு பிரவீன் சந்தர், 8, என்ற மகனும், தீப்தி 5, என்ற மகளும் உள்ளனர். மகன், சாமளாபுரத்தில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.
 
 

மூடப்பட்ட உண்டு, உறைவிடப் பள்ளி: வெளியேற மறுத்த குழந்தைகள்


             காரைக்குடியில், உண்டு, உறைவிடப் பள்ளிக்கு கட்டமைப்பு வசதி இல்லை என்ற காரணத்தால், மூடப்பட்டது. அங்கு படித்த குழந்தைகள், பள்ளியை விட்டு செல்ல மறுத்தனர்.
 

திருப்பூர் மாவட்டத்தில் 20 பள்ளிகள் அங்கீகாரம் ரத்து


           திருப்பூர் மாவட்டத்தில், 20 நர்சரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, "நோட்டீஸ்" வழங்கப்பட்டுள்ளது.
 

தேர்வில் சாதித்த மாணவர்கள்: தவிக்கும் கல்வித்துறை அதிகாரிகள்


          பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 211 மாணவர்கள், முதல் மூன்று இடங்களை பிடித்திருப்பதால், இவ்வளவு பேரையும், முதல்வர் அலுவலகத்திற்கு, எப்படி அழைத்துச் செல்வது என, தெரியாமல், கல்வித்துறை அதிகாரிகள், தவித்து வருகின்றனர்.
 

அரசு பள்ளி மாணவர்களுக்கு மகுடம் சூட்டிய ஆசிரியர்கள்


              ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, மகுடம் அணிவித்து, "இளவரசர், இளவரசி" பட்டம் சூட்டி, அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் மகிழ்வித்தனர்.
 

தனியார் பள்ளிகள் இடப்பிரச்னை: இம்மாத இறுதிக்குள் அறிக்கை


           தனியார் பள்ளிகள், இட பிரச்னை குறித்து ஆய்வு செய்து வரும் நிபுணர் குழு, இம்மாத இறுதிக்குள், தமிழக அரசிடம், அறிக்கையை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.
 

இணையதளத்தில் யு.பி.எஸ்.சி., மதிப்பெண்


           யு.பி.எஸ்.சி., என்ற மத்திய பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ், - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., .உட்பட உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்துகிறது. முதல் நிலை , பிராதான தேர்வு, நேர்முகத்தேர்வு என 3 கட்டமாக நடக்கிறது.
 

இரட்டைபட்டம் வழக்கு வருகிற 12ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


          இரட்டைப்பட்டம் எனும் முறையில் ஓராண்டு பட்டப்படிப்பு மற்றும் மூன்றாண்டு பட்டம் படித்தவர்களுக்கு இடையேயான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் இன்று மாலைக்குள் தற்காலிக முடிவு தெரியவரும் என்று  பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்கள் தெரிவித்தன.

TET மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: இடஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு


          அரசு கல்லூரி முன்னாள் முதல்வர்கள் ப.சிவகுமார், மு.திருமாவளவன் மற்றும் முன்னாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் இணைந்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: 
 

அரசுப் பணியில் சேர என்ன தகுதி வேண்டும்? ஆர்.நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர்


          அரசு அலுவலகம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நூலாம்படை படர்ந்த சுவர்கள்; வெற்றிலை பாக்கு உமிழ்ந்த இடங்கள்; அங்குமிங்குமாக கிடக்கும் மேஜைகள், நாற்காலிகள்; குவிக்கப்பட்ட கோப்புகள்; உடைந்த நாற்காலியில் ஒரு காலை சம்மணமிட்டு தூங்கி வழியும் அலுவலர். பரபரப்போ அவசரமோ இல்லாத நிதானமான தாமதமான சூழல், அரசு அலுவலகத்துக்கான முத்திரை என்றாகிவிட்டது. இந்தியாவில் எங்கு சென்றாலும் இதே நிலைதான்.

தமிழகத்தில் 900 நர்சரி பள்ளிகளை மூட அரசு உத்தரவு


           அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இன்மையை காரணம் காட்டி, 900 நர்சரி பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

கல்வி துறை கேட்கும் "விருப்ப கடிதம்": ஆசிரியர்கள் எதிர்ப்பு


           தமிழகத்தில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்தாண்டு பிறப்பித்துள்ள "விருப்ப கடிதம்" உத்தரவால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
   

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: 20 சதவீதம் பள்ளி வாகனங்கள் இயங்குமா?


          தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 03ம் ‌தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து அதிகமாக இருந்ததன் காரணமாக இந்த விடுமுறை ஜூன் 09 வரை நீடிக்கப்பட்டது.
 

"அனைவருக்கும் தரமான உயர்கல்வி சாத்தியமாக வேண்டும்": எல்.பி.யு., துணை வேந்தர்


        பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக துணைவேந்தர் ரமேஷ் கன்வர் தினமலர் கல்விமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
 

ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வாழ்த்துக்கள்


         கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி துவங்குகிறது. அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஆசிரியர்கள் , வாழ்க்கையில் சாதிக்கும் ஆசை கொண்ட மாணவர்கள் இவைதான் முக்கிய கருப்பொருள்கள் இங்கு. 
 

தேர்வு வாரியம் புதிய நிபந்தனை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்


           "முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்துடன் வருகைப்பதிவேடு உள்ளிட்ட சான்றுகளை சமர்பிக்க வேண்டும்" என, ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ள, புதிய நிபந்தனையால், முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக விண்ணப்பிப்போர் கலக்கம் அடைந்து உள்ளனர்.
 

பள்ளிகளில் கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணிமாறுதல் பெற்றுக் கொள்ளலாம்: அமைச்சர் வைகைச்செல்வன்


          பள்ளிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் ஆசிரியர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணிமாறுதல் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
 

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு


          கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்படுகின்றன. கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 3-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதியோடு நிறைவடைந்தன. ஏப்ரல் 21 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது.
 

ஆசிரியர் நியமனம்: இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தல்


           ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசாணை எண். 252 இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது. எனவே, அந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
 

SSLC - Sup. Exam - Tatkal Apply Starts From 11.6.12 to 12.6.12 upto 12 p.m.




         ஜூன்/ஜூலை 2013, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்புத் துணைத்  தேர்விற்குத்  தனித்தேர்வர்களை ‘சிறப்பு அனுமதித்   திட்டத்தின்’ கீழ் தேர்வெழுத அனுமதித்தல்
   
செய்திக்குறிப்பு

    ஜூன்/ஜூலை 2013 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்புத் துணைத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் Online-ல் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் டீn-டiநே-ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:

1. மார்ச் 2013, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.


தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்


        2013 2014 ஆம் கல்வியாண்டில் நாளை பள்ளி திறக்கப்படவுள்ளது. இந்நாளில் தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகளை மற்றவர்களும்  தெரிந்துகொள்ள நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1.      அரசின் நலத்திட்டங்களான விலையில்லா புத்தகங்களையும், நோட்டுகளையும், சீருடைகளையும், காலணிகளையும், புத்தகப்பைகளையும், . . . மாணவ, மாணவியர்க்கு வழங்க பதிவேடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு விலையில்லா திட்டதிற்கும் தனித்தனி பதிவேடுகளை வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.

SSLC சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணை


           இந்த மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணையை தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
 
வ.எண் நாள் கிழமை தேர்வு
1 24.06.2013 திங்கள் மொழித்தாள் - I
2 25.06.2013 செவ்வாய் மொழித்தாள் - II
3 26.06.2013 புதன் ஆங்கிலம் முதல் தாள்
4 27.06.2013 வியாழன் ஆங்கிலம் இரண்டாம் தாள்
5 28.06.2013 வெள்ளி கணிதம்
6 29.06.2013 சனி அறிவியல்
7 01.07.2013 திங்கள் சமூக அறிவியல்


ஆசிரியர் தகுதி தேர்வு! தயாராவது எப்படி?


          தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
 

வெளிநாட்டில் கல்வி கற்க நுழைவுத்தேர்வு: 3 ஆண்டுகளில் 20% உயர்வு


         வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த, மூன்றாண்டுகளில், 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

குழந்தைகளின் மனச் சோர்வையும் தளர்ச்சியையும் போக்கும் வைட்டமின் “டி”


         உங்கள்குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பொத்திபொத்தி வளர்க்காதீர்கள், வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விளையாட விடுங்கள், பகலில் அதிக நேரம் வெயிலில் நடக்கட்டும் அல்லது ஓடட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பிரிட்டனில் கூறுகிறார்கள். என்ன காரணம்?
 

"அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் - ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர்” - சாதக, பாதகங்கள் குறித்த ஒரு ஆய்வு - சிறப்பு கட்டுரை


     பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் எனவும், ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர் எனவும், இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது.

     இது குறித்து சில சாதக பாதகமான விமர்சனங்கள் குறித்த அரசு ஓர் ஆய்வு. ஆணும், பெண்ணும் இணைந்துள்ள இந்த சமுதாயத்தில் இது தேவையா? அவசியமா? என்பதற்குள் புகு முன், இதை செயல்படுத்த கூறப்பட்டுள்ள காரணம், ஆண் ஆசிரியர்களை இச்சமுதாயம் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளைப் போல் சித்தரிக்கப்படுவதை எண்ணி வருத்தப்பட வேண்டும்.
    

கடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - சிறப்பு கட்டுரை


         கட்டுரையாசிரியர் திரு. எஸ். ரவிக்குமார் அவர்கள் நமது பாடசாலை வலைதளத்திற்காக வழங்கிய முந்தைய கட்டுரை - வாசகர்களின் மறு பார்வைக்காக.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive