Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல் கல்விக்கான Random No வெளியிடப்பட்டு உள்ளது.



Assigning Random Number 05.06.2013
Publication of Rank list 12.06.2013
Commencement of Counselling 21.06.2013
End of Counselling 30.07.2013

விருப்பக் கடிதம் அளிக்காத PG Panel இல் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல இயலாது


           01.01.2013 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல தகுதிவாய்ந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அது குறித்த செயல்முறைகளில் பத்தி எண்.3ல் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா என்பதற்கான விருப்பக் கடிதத்தினை சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

பதவி உயர்வில் செல்ல விருப்ப கடிதம்




Sl.No 
Promotion Option
 Word 
Format 
PDF 
Format  
 1
PGஆக செல்ல விருப்ப கடிதம்.
2


            பள்ளி கல்வி துறையில் பணிபுரியும் பதவி உயர்வில் செல்ல இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்க்கண்ட விருப்ப கடிதத்தினை உடனடியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். (01.01.2013 - PG Promotion Panel இல் உள்ளவர்கள் மட்டும்)

குறிப்பு: இங்கு தரப்பட்டு உள்ளது மாதிரி விருப்ப கடிதம் மட்டுமே. 
விருப்ப கடித மாதிரி மாவட்டங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்? அமைச்சர் கேள்வி


      அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து, அதிகாரிகளிடம், கல்வி அமைச்சர் வைகைச் செல்வன், கேள்வி எழுப்பினார்.

புள்ளியியல் துறை ஆணை: கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பு பறிப்பு?


       தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், சமீபத்தில் போடப்பட்ட அரசாணை, பொருளியல், கணிதவியல் படித்த, கிராமப்புற மாணவர்கள், பணியில் சேரும் வாய்ப்பை தடுப்பது, மாணவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.இ.இ., நுழைவு தேர்வு: தமிழக மாணவர்களிடையே ஆர்வமின்மை ஏன்?


     பாடப்பளு, போதிய பயிற்சி மையங்கள் இல்லாத நிலை உள்ளிட்ட காரணங்களால், ஜெ.இ.இ., எனப்படும் ஒரே நுழைவு தேர்வில், தமிழக மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதில்லை என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கல்லூரி தேர்வு கட்டணம் உயர்வு: மாணவர்கள் எதிர்ப்பு


         கல்லூரி தேர்வு கட்டணம், ஒரு பாடத்துக்கு, 45 ரூபாயிலிருந்து, 65 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு, நடப்பு கல்வியாண்டில், முதல் பருவ தேர்வில் அமலுக்கு வருகிறது.

அரசு கலை கல்லூரிகளில் 398 புதிய பாடப்பிரிவுகள் துவக்கம்


     தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக, 398 பாடப் பிரிவுகள், நடப்பு கல்வியாண்டில் துவங்கப்படுகின்றன. புதிதாக துவங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளில், வேலைவாய்ப்பு சந்தையில், தற்போது நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் அரசியல் தலையீடு: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு - Dinamalar


     அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், அரசியல் தலையீடு அதிகரித்து உள்ளதால், மாணவர் சேர்க்கையை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

எம்,ஏ., தொல்லியல் படிப்பு: துணைவேந்தர் உறுதி


     "எம்.ஏ., பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் பட்டப் படிப்பு, எம்.ஏ., வரலாறு பட்ட படிப்புக்கு இணையானது அல்ல என்ற அரசாணை, மறுபரிசீலனை செய்யப்படும்" என சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் தெரிவித்தார்.

மாவட்ட கல்விப்பிரிவுகளில் தலைமை பணியிடங்கள் காலி


    கல்வித் துறையில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் என, தலைமை பணியிடங்கள் பல, காலியாக கிடப்பதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


தொல்லியல் முதுகலை படிப்பு: முதல்வர் கவனத்துக்கு செல்லாத உத்தரவு


          எம்.ஏ., பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் படிப்பு, எம்.ஏ., வரலாறுக்கு இணையான படிப்பு கிடையாது எனவும், இவர்களை, உதவிப் பேராசிரியர்களாகப் பணி நியமனம் செய்ய முடியாது எனவும், தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, தொல்லியல் படிப்பை முடித்தவர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பள்ளி மாணவன் சாதனை


          உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவன், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, சாதனை படைத்துள்ளான்.

சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கிலம் கட்டாயமா? மத்திய அரசுக்கு உத்தரவு


         "ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில், ஆங்கில திறன் அறியும் தேர்வு அவசியம் என்ற, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முடிவை, ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்" என மத்திய அரசுக்கு, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தோற்காதவர்கள் ஜெயிப்பதில்லை


         "பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவியரின் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை. தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற பிள்ளைகளை, பெற்றோர் கவனமாக கையாளவேண்டும்" என்கின்றனர், மனநல மருத்துவர்கள்.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி?

         எந்த ஒரு மதிப்பீட்டு ஆண்டிற்கும் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியே கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 1,2012 முதல் 31 மார்ச் 2013 வரையிலான அனைத்து வருமானங்களுக்கும், வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2013 ஆகும்.

கல்வி துறையிலும் நடக்குமா ? பணி ஓய்வுக்குப் பின் மன நிம்மதி

THANKS TO - By முகவை.க.சிவகுமார்

          உயர்கல்வித் துறையின் சென்னை மண்டலத்தில் உள்ள அரசு உதவி பெறும் 25 கல்லூரிகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய 62 பேராசிரியர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு கிடைக்க வேண்டிய அனைத்தும்
ஒரே நாளில் வழங்கப்பட்டன.

கல்லூரி நேர்முகத்தேர்வுக்கு தயாராவது எப்படி?


          விருப்பமான கல்லூரியில் விண்ணப்பத்தை அளித்துவிட்டு வீட்டிற்கு மகிழ்வுடன் திரும்பினாலும், மனதிற்குள் இந்த மதிப்பெண்ணிற்கு இங்கு இடம் கிடைக்குமா? என்ற மனக்கலக்கம் நமக்குள் இருக்கும். இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பத்தில், வேறு சில கல்லூரிகளுக்கும் நமது விண்ணப்பங்களை அனுப்பியிருப்போம்.

+2 உயிரியல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய இன்று கடைசி


            பிளஸ் 2 உயிரியல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய இன்று கடைசி நாளாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி

Online Tatkal Apply Starts Now for 12th Sup. Exam.



          ஜூன்/ஜூலை 2013, மேல்நிலை சிறப்புத் துணைத்  தேர்விற்கு தனித்தேர்வர்களை ‘சிறப்பு அனுமதித்   திட்டத்தின்’ கீழ் தேர்வெழுத அனுமதித்தல்
   
செய்திக்குறிப்பு

    ஜூன்/ஜூலை 2013 மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் Online-ல் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் Online-ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12ஆம் வகுப்பு மார்ச் பொது தேர்வு எழுதியவர்களில் நகல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை கீழ்க்கண்ட பாடங்களுக்கு விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டு உள்ளது.

Subject Code Subject Name Candidates are allowed to apply for revaluation/re-totalling for the following subjects ONLY
007 Chemistry From 29.05.2013 to 01.06.2013 ONLY @ dge.tn.nic.in
009 Biology From 01.06.2013 to 04.06.2013 ONLY @ dge.tn.nic.in
011 Botany From 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in
013 Zoology From 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in
005 Physics From 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in
041 Mathematics From 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in

MEETING ON TRB EXAM FOR PG TEACHERS




NO PROMOTION SCOPE FOR AEEOS



TET - அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர்கள் - Dinathandhi

           என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில், ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்...’’ என்று, மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ஒரு திரைப்படத்தில் பாடுவார். 

பிளஸ் 2 கணிதம் உட்பட 4 பாட விடைத்தாள் வெளியீடு


        பிளஸ் 2 கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய, நான்கு பாடங்களின் விடைத்தாள் நகல்கள், இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன. நாளை வரை, விடைத்தாள் நகல்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது.

பிளஸ் 1 சேர்க்கை: பள்ளிகளில் மாணவர் கூட்டம் அலைமோதல்


          மாநிலம் முழுவதும், பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கை, நேற்று துவங்கியது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், அதிக மதிப்பெண்களை குவித்ததால், அனைத்து மாணவர்களும், இன்ஜினியர், மருத்துவம் சார்ந்த குரூப்களை கேட்டு, நச்சரிப்பதால், தலைமை ஆசிரியர்கள், திண்டாடி வருகின்றனர்.

போக்குவரத்து குழுக்களை அமைக்காத பள்ளிகளுக்கு 6 நாள் கெடு


         போக்குவரத்து துறை ஆய்வில், 3,084 பள்ளிகளில், போக்குவரத்து குழுக்கள் அமைக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆறு நாட்களுக்குள் போக்குவரத்து குழுக்களை அமைக்க வேண்டும் என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

எம்.ஐ.டி.,யில் எம்.எஸ்., படிக்க என்ன செய்ய வேண்டும்? - FAQ


          அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.

ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்ட இளைஞர்கள்


          "இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களிடம், ஸ்மார்ட் போன் இல்லாமல் போய்விடுமோ" என, மனதளவில் பயப்படுவதாக, ஆஸ்திரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லூரியை தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்


           மாணவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நேரமிது. மாணவர்கள் பதறாமல் நிதானமாக யோசித்து நல்ல கல்லூரி எது என்று தேர்வு செய்து, அதன் பிறகு சேரலாம். 
 
கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில..........
* கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அங்குள்ள ஆசிரியர்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளைப் பார்க்க வேண்டும்.

EAMCET நுழைவுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


           ஆந்திரா மாநிலத்தில் பொறியியல், விவசாயம் மற்றும் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர EAMCET என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. APSCHE சார்பில் ஹைதராபாத்தில் உள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மூலம் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
 

சிமேட் தேர்வு முடிவுகள் வெளியீடு


         மேலாண்மை படிப்பில் சேருவதற்கான சிமேட் நுழைவுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 

"ஆசியர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன" - சிறப்பு கட்டுரை


ஆசிரியரை தண்டிக்கும் மாணவர்கள்!

      மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிச்ச காலம் மலையேறிப் போச்சு."படி,படி "ன்னு சொல்ற காலத்துல படிக்கறது இல்ல.படிக்கச் சொல்லி ஆசிரியர் வற்புறுத்துனா கூட , ஆசிரியர் "என்னை கொடுமைப்படுத்துறார், அடிக்கிறார்,
பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்" அப்படின்னு கொடி பிடிச்சு போராட ஒரு கூட்டமே இருக்கு.

          சொல்லுங்க சார்.நாமெல்லாம் அந்த ஆசிரியர்கிட்ட தானே படிச்சு வளந்தோம்.நாமெல்லாம் நல்ல நிலைமையில இல்லையா?

                யாராவது ஆசிரியர்கள் தவறு செய்திருந்தால் தயவு தாட்சண்யம் இன்றி பணி இடைநீக்கம்,பணி நீக்கம் செய்யுங்கள்.வேண்டாம் என்று கூறவில்லை.

நல்லோர் உதவியால் UPS கிடைத்தது. 60 இரவுகள் பள்ளியிலேயே மாணவர்களுடன் கழித்தேன் - சிறப்பு கட்டுரை

எங்கள் பள்ளியின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்: 62 %
தேர்வு எழுதியோர்: 99
தேர்ச்சி : 61
கடந்த ஆண்டைக் காட்டிலும் 13 % உயர்ந்துள்ளது. 
 
குறைந்தபட்சமாக எனது பாடமாகிய ஆங்கிலத்தில் 64% பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
(99 பேரில் ஆங்கிலப் பாடத்தில் 63 பேர் தேர்ச்சி 36 பேர் தோல்வி) 

        ஆறு மாதங்களுக்கு முன்பு இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 49. படிப்பில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள். ஏகத்துக்கும் கெட்ட பெயர் எடுத்திருந்த மாணவர்கள். ஏதாவது செய்தாலன்றி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்ற நிலையில் Night Class துவங்கினேன். நல்லோர் உதவியால் UPS கிடைத்தது. 60 இரவுகள் பள்ளியிலேயே மாணவர்களுடன் கழித்தேன். அதி அற்புத நிகழ்வுகளெல்லாம் அரங்கேறின. வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள். இனி எப்போது வாய்க்குமெனத் தெரியாது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive