ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக
உயர்த்திக் கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி அளித்து
உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த
எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,245 ஆக உயர்ந்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
எம்.ஜி.ஆர்., திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை
எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில்,
புதிதாக துவக்கப்பட்ட, நவீன தொழில் நுட்ப பட்டயப் படிப்பில், சேர
விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பி.இ., முதல் ஆண்டு மாணவர்களுக்கு கணித பாடத்தில் சிறப்பு பயிற்சி
பி.இ., முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு, கணிதப் பாடம்
துவங்குவதற்கு முன், 15 மணி நேரம் பயிற்சி அளிக்க, அண்ணா பல்கலை, ஏற்பாடு
செய்துள்ளது. இதற்காக, முதலில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி
ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி குறித்து, வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
முதுகலை ஆசிரியர் தேர்வு: 82 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, நேற்றுடன், 82 ஆயிரம் விண்ணப்பங்கள்,
விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி, கடைசி நாள்.
ஜூன் 8ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு
சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி முதுகலை தேர்வுகள், ஜூன், 8ம்
தேதி துவங்குகிறது. இதுகுறித்து சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள
அறிக்கை:
சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் வழங்கப்படும், எம்.ஏ., -
எம்.காம்., உள்ளிட்ட முதுகலை, தொழில் படிப்புகளுக்கான தேர்வுகள், ஜூன், 8ம்
தேதி துவங்கி, ஜூலை, 28ம் தேதி வரை நடக்கிறது.
கட்டாய படிப்பு கரை சேர்க்குமா?
பள்ளிக் கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை,
சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? மேற்படிப்பு என்பதே அடுத்து
தொழில், வேலை செய்யும் துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பயிற்சி
பெறுவதற்கும் தான்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தகவல் 28 மையங்கள் மூடப்பட்டன
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கத்தின் 28 தகவல் மையங்களை மூட பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் உத்திரவிட்டுள்ளார்.
கல்வி அலுவலர்களுக்கான மாநில ஆலோசனைக் கூட்டம்
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படவுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தொடர்பாக கல்வி அலுவலர்கள் பங்கேற்ற மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் பிஷப் ஹீபர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீத விவரம்
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்ச்சி விகித
அடிப்படையில் 97.29 சதவீத தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் மாநில அளவில்
முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடத்தில்
உள்ளது. வழக்கமாக முதலிடம் வகிக்கும் விருதுநகர் 5ம் இடத்துக்கு
தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் 32 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீத
விவரம்:
1. கன்னியாகுமரி 97.29%
2. தூத்துக்குடி 95.42%
TET – Paper 1 ( Expected Cut Off)
ஆசிரியர் தகுதித் தேர்வில் 150
க்கு 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் அனைவருமே ஆசிரியர் பணிக்கு
தகுதியுள்ளவர்கள்.
இருப்பினும் தமிழகத்தை
பொறுத்தவரை இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யும் முறை குறித்த வழக்கு நீதிமன்றத்தில்
நிலுவையில் இருப்பதால் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு
வேலை வாய்ப்பில் உள்ள முன்னுரிமை அடிப்படையில் ரேங்க் எண் வழங்கப்படும்.
TNTET - Paper 2 (Expected Cutoff)
ஆசிரியர் தகுதி தேர்வு 2013-ம் ஆண்டு தாள் - 2 எழுதிய (4௦௦௦௦௦) பேரில் 7 சதவிகிதம் பேர் அதாவது மொத்தம் 28000 பேர் வெற்றியடைய வாய்ப்புள்ளது. அவர்களில்
தமிழ்,ஆங்கிலம் மற்றும் சமூகஅறிவியல் பாடத்தில் 18000 பேறும் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் 10000 பேறும் வெற்றிபெற
வாய்புள்ளது.இதில் தனித்தனியாக பார்த்தால் தமிழ் - 4000,ஆங்கிலம் -8000,கணிதம் - 6000, அறிவியல் - 4000, சமூகஅறிவியல் - 6000. இவ்வாறு எதிர்பார்க்கலாம்.
ஃபுட் பாய்சனை தவிர்ப்பதற்கான 12 வழிகள்!!!
மாசுபட்ட உணவு உட்கொண்ட எல்லோருக்கும் ஃபுட்
பாய்சன் ஏற்படுகிறது. அதிலும் சில நேரங்களில் உண்ணும் உணவை உற்பத்தி
செய்யும் பொழுது அல்லது செயலாக்கத்தின் பொழுது உணவானது தூய்மைக்கேடு
அடைகிறது.
TET - ஆசி ரியர் தகுதித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
TET - ஆசி ரியர் தகுதித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தொடக்கக் கல்வி - 2013-2014ம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல், பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண். 02898 / டி1 / 2013, நாள்.01.06.2013ன் படி
2013-2014 ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல், பதவி உயர்வு பெற்ற
இடைநிலை ஆசிரியர், தொடக்ககப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்,
நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர் விவரங்களை 01.06.2013 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம். இவ்வகை படிப்புகள் அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் தொடர்ந்து இவற்றை மீண்டும் தெரிந்துக்கொள்வது அவசியமே.
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)
விடைத்தாள் மாயமான பள்ளிகளில் ஆங்கிலம் முதல் தாளில் "ஆல் பாஸ்"
பத்தாம் வகுப்பு தேர்வில், மிகப்பெரிய அளவிற்கு, தேர்வு முடிவுகள் வந்திருப்பது, பலரது
மத்தியிலும், வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி சதவிகிதம் குறைவு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, பாடம்
வாரியாக ஆய்வு செய்யும்போது, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி விகிதம்
உயர்ந்துள்ளது; சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் தேர்ச்சி விகிதம், 3.51
சதவீதம் சரிவடைந்துள்ளது தெரியவருகிறது.
புதிதாக சேரும் மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்க ஏற்பாடு
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2
வரை, புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு மட்டும், தமிழக அரசின், இலவச
புத்தக பை வழங்கப்படும். ஏற்கனவே பை வாங்கியவர்களுக்கு, மீண்டும்
வழங்கப்படாது.
26 ஆண்டு சாதனையை இழந்த விருதுநகர்
பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், 26 ஆண்டுகளாக முதலிடம் பெற்று விருதுநகர்
மாவட்டம், கடந்த இரு ஆண்டுகளாக பின் தங்கி வருகிறது. இந்தாண்டு தேர்ச்சி
சதவீதத்தில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
முதலிடம் பிடித்த 9 மாணவிகளின் சிறப்பு பேட்டிகள்
10ம் வகுப்பு தேர்தவில் முதலிடம் பிடித்த மாணவிகள் 9 பேர் தங்களின் ஆசைகளையும், எதிர்கால லட்சியங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இவர்கள் அளித்த பேட்டிகள் விவரம் வருமாறு:
ஐகோர்ட் தலையீட்டால் பள்ளி மாணவிக்கு வெளிநாட்டு பல்கலையில் வாய்ப்பு
சிங்கப்பூர் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்த, சென்னை மாணவிக்கு,
பாஸ்போர்ட் எண் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. ஐகோர்ட் தலையீட்டால்,
பறிபோகும் நிலையில் இருந்த வாய்ப்பு, கைகூடியது.
பள்ளி சேர்க்கைக்கு மாணவர்களை தேடும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்
அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி
ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் மாணவர்களை சேர்க்க, கிராமம் கிராமமாக
மாணவர்களை தேடி அலைகின்றனர்.
குழந்தை தொழிலாளர் மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், பல்வேறு மாணவர்களின் சாதனைகளுக்கு
மத்தியில், குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் படைத்துள்ள
சாதனையும், முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இம்மாணவர்கள், மூவர் முறையே,
480, 475, 473 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சமஸ்கிருதத்தில் முதலிடம்: 499 மதிப்பெண் பெற்ற மாணவி ரக்ஷனா
மாநில அளவில் சமஸ்கிருதம் மொழி பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி
ரக்ஷனா, "இருதய சிறப்பு மருத்துவர் ஆவதே எனது லட்சியம்" என
தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ் மொழி பாடம் எடுக்காததால், 500க்கு, 499
மதிப்பெண்கள் பெற்றும் மாநில அளவில் முதலிடம் பெறமுடியவில்லை.
இணைப்பு பெற ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் தேவையா? அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.ஐ.,) ஒப்புதல் வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து
செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், பொறியியல் கல்லூரி மனு தாக்கல்
செய்துள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அண்ணா பல்கலை, தொழிற்கல்வி
கமிஷனருக்கு, நோட்டீஸ் அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது.
சுயநிதி பள்ளிகளில் விண்ணப்பங்கள் இலவசமாக பெறலாம்
சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில், நலிவுற்ற மாணவர்கள் சேர, விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
கல்லூரி ஆசிரியரான காவலர்
"சல்யூட்" அடித்து 20 ஆண்டுகள்
பழக்கப்பட்டு போன கைகள், இனி இரு கைகளையும் கூப்பி "வணக்கம்" வைக்க
போகிறது. ரோந்து சென்ற பூட்ஸ் கால்கள், இனி கரும்பலகை மேடையில் அங்கும்,
இங்குமாய் நடை போட போகிறது.
வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
"வாழ்க்கைத்தரம் உயர வாய்ப்புக்
கிடைக்கும் போது அதை மாணவர்கள்பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என பாரதியார்
பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறினார்.