Half Yearly Exam 2024
Latest Updates
விடைத்தாள் மாயமான பள்ளிகளில் ஆங்கிலம் முதல் தாளில் "ஆல் பாஸ்"
பத்தாம் வகுப்பு தேர்வில், மிகப்பெரிய அளவிற்கு, தேர்வு முடிவுகள் வந்திருப்பது, பலரது
மத்தியிலும், வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி சதவிகிதம் குறைவு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, பாடம்
வாரியாக ஆய்வு செய்யும்போது, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி விகிதம்
உயர்ந்துள்ளது; சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் தேர்ச்சி விகிதம், 3.51
சதவீதம் சரிவடைந்துள்ளது தெரியவருகிறது.
புதிதாக சேரும் மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்க ஏற்பாடு
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2
வரை, புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு மட்டும், தமிழக அரசின், இலவச
புத்தக பை வழங்கப்படும். ஏற்கனவே பை வாங்கியவர்களுக்கு, மீண்டும்
வழங்கப்படாது.
26 ஆண்டு சாதனையை இழந்த விருதுநகர்
பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், 26 ஆண்டுகளாக முதலிடம் பெற்று விருதுநகர்
மாவட்டம், கடந்த இரு ஆண்டுகளாக பின் தங்கி வருகிறது. இந்தாண்டு தேர்ச்சி
சதவீதத்தில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
முதலிடம் பிடித்த 9 மாணவிகளின் சிறப்பு பேட்டிகள்
10ம் வகுப்பு தேர்தவில் முதலிடம் பிடித்த மாணவிகள் 9 பேர் தங்களின் ஆசைகளையும், எதிர்கால லட்சியங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இவர்கள் அளித்த பேட்டிகள் விவரம் வருமாறு:
ஐகோர்ட் தலையீட்டால் பள்ளி மாணவிக்கு வெளிநாட்டு பல்கலையில் வாய்ப்பு
சிங்கப்பூர் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்த, சென்னை மாணவிக்கு,
பாஸ்போர்ட் எண் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. ஐகோர்ட் தலையீட்டால்,
பறிபோகும் நிலையில் இருந்த வாய்ப்பு, கைகூடியது.
பள்ளி சேர்க்கைக்கு மாணவர்களை தேடும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்
அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி
ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் மாணவர்களை சேர்க்க, கிராமம் கிராமமாக
மாணவர்களை தேடி அலைகின்றனர்.
குழந்தை தொழிலாளர் மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், பல்வேறு மாணவர்களின் சாதனைகளுக்கு
மத்தியில், குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் படைத்துள்ள
சாதனையும், முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இம்மாணவர்கள், மூவர் முறையே,
480, 475, 473 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சமஸ்கிருதத்தில் முதலிடம்: 499 மதிப்பெண் பெற்ற மாணவி ரக்ஷனா
மாநில அளவில் சமஸ்கிருதம் மொழி பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி
ரக்ஷனா, "இருதய சிறப்பு மருத்துவர் ஆவதே எனது லட்சியம்" என
தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ் மொழி பாடம் எடுக்காததால், 500க்கு, 499
மதிப்பெண்கள் பெற்றும் மாநில அளவில் முதலிடம் பெறமுடியவில்லை.
இணைப்பு பெற ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் தேவையா? அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.ஐ.,) ஒப்புதல் வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து
செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், பொறியியல் கல்லூரி மனு தாக்கல்
செய்துள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அண்ணா பல்கலை, தொழிற்கல்வி
கமிஷனருக்கு, நோட்டீஸ் அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது.
சுயநிதி பள்ளிகளில் விண்ணப்பங்கள் இலவசமாக பெறலாம்
சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில், நலிவுற்ற மாணவர்கள் சேர, விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
கல்லூரி ஆசிரியரான காவலர்
"சல்யூட்" அடித்து 20 ஆண்டுகள்
பழக்கப்பட்டு போன கைகள், இனி இரு கைகளையும் கூப்பி "வணக்கம்" வைக்க
போகிறது. ரோந்து சென்ற பூட்ஸ் கால்கள், இனி கரும்பலகை மேடையில் அங்கும்,
இங்குமாய் நடை போட போகிறது.
வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
"வாழ்க்கைத்தரம் உயர வாய்ப்புக்
கிடைக்கும் போது அதை மாணவர்கள்பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என பாரதியார்
பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறினார்.
PG - New Appointment Joining Date - 10.06.2013
தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி - 2011-12ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனம் ஆணை 03.06.2013 என்பதற்கு பதிலாக 10.06.2013 அன்று பணியில் சேர அறிவுரை வழங்கி உத்தரவு
5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை
தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டு அங்கன் -வாடிகளில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவு.
தொடக்கக் கல்வி - 2013-14ம் ஆண்டு பொது மாறுதல் 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் அனுப்ப இயக்குனர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண். 02898 / டி1 / 2013, நாள்.31.05.2013ன் படி
2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல், 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின்
ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை 31.05.2013
மாலைக்குள் இமெயில் மூலம் அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Proceedings
SSLC துணைத் தேர்வெழுத Online மூலம் 03.06.2013 முதல் 05.06.2013 விண்ணப்பிக்கவும், தேர்வு கட்டணம் : ஒரு பாடத்திற்கு ரூ.125/-, தேர்வுகள் 24.06.2013 முதல் 01.07.2013 வரை நடைபெறும்
SSLC மதிப்பெண் மறுகூட்டலுக்கு Online முறையில் 07.06.13 முதல் 10.06.13 வரை விண்ணபிக்கலாம், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ரூ.305/- மற்ற பாடங்களுக்கு ரூ.205/- கட்டணம் நிர்ணயம்
Click Here 4 Download Instructions
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 9 பேர் முதலிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று
காலை வெளியிடப்பட்டது.
இதில் 498 மதிப்பெண்கள் பெற்று 9 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். 497
மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை 52 பேர் பெற்றுள்ளனர்.496
மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை 137 பெற்றனர். மதிப்பெண் சான்றிதழ்கள்
வரும் 20-ம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சதமடித்தவர்கள்: கணிதம்:29,905
சமூக அறிவியல்:19,680
பத்தாம் வகுப்பு, தேர்வு முடிவு: மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்
இன்று வெளியாகும் பத்தாம் வகுப்புதேர்வு
முடிவையொட்டி, 32 மாவட்டங்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள்
அனுப்பப்பட்டுள்ளனர். தனியார் வெப்சைட்கள் இல்லாமல்,தேர்வுத் துறை இணைய
தளங்கள் மற்றும் நூலகங்களில் உள்ள இணைய தளங்கள் மூலமாக,தேர்வு முடிவுகள்
வெளியிடப்படுகின்றன.