Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விடுவிப்பு படிவம்

செப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

           ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
 

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 31ம் தேதி வெளியீடு


           பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை (31ம் தேதி), காலை, 9.15 மணிக்கு வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது.

மொத்தம் 2,881 காலி இடங்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளி முதல் விண்ணப்பம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


           முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.


சிறப்பு ஆசிரியர் பணி: உத்தேச பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு 7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்


         சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;– 

              ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள்) பணி காலி இடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். 


பொது மாறுதல் கலந்தாய்வு - ADW

           ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் 30.05.2013 காலை 10.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது

பள்ளிக்கல்வித் துறை - உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


            அரசாணை (1டி) எண்.129 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள் 09.05.2013 அரசாணையின்படி 20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம்




                  2013 - 14 ஆம் கல்வியாண்டு முதல் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண்ணாசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். 

பள்ளிக்கல்வித் துறை - மாறுதல் ஆணை பெற்ற முதுகலை/பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/இடைநிலை ஆசிரியர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


            மாறுதல் ஆணை பெற்ற முதுகலை/பட்டதாரி /ஆசிரியர் பயிற்றுநர் /இடைநிலை ஆசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


               2011-12ம் கல்வியாண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்றவர்கள் 3.6.2013 அன்று பணியில் சேர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. தற்போது அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து 10.6.2013 அன்று திறக்கப்பட உள்ளதால் மேற்கண்டவாறு புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் லிஸ்ட் விரைவில் வெளியீடு: இயக்குநர்


          தமிழகத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.

முதுகலை ஆசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு: மே 31 முதல் விண்ணப்பம்


           முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.

விடைத்தாள் திருத்தும் பணி; 700 ஆசிரியர்கள் புறக்கணிப்பு


          சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லூரி மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக, கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறைக்கு, 700 ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வை 2013ல் எழுதி தேறிய மாணவ-மாணவிகள்


சென்னை மண்டல விபரம் - 2013
தேர்வெழுதியோர் விபரம்
ஒட்டுமொத்தமாக தேர்வெழுதியோர் - 77,616
மாணவர்கள் - 42,253
மாணவிகள் - 35,363
தேர்ச்சி அடைந்தோர் விபரம்
மொத்தம் - 71,271
மாணவர்கள் - 38,057
மாணவிகள் - 33,214

சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு - சென்னை மண்டல தேர்ச்சி விகிதம் - 2013


          சமீபத்தில் வெளியிடப்பட்ட சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், சென்னை மண்டலம் முதலிடம் பெற்றது. கடந்த 2012ம் ஆண்டும், சென்னை மண்டலமே முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

எந்த சி.பி.எஸ்.சி., மண்டலம் எந்த இடத்தில்?


            இந்தியாவில் மொத்தம் 8 சி.பி.எஸ்.இ., வாரியங்கள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆஜ்மீர், ஹரியானா மாநிலத்திலுள்ள பஞ்ச்குலா, டெல்லி, அசாம் மாநிலத்தின் குவஹாத்தி, சென்னை, உத்திரபிரதேசத்தின் அலகாபாத், ஒடிசாவின் புபனேஷ்வர் மற்றும் பீகாரின் பாட்னா ஆகியவையே அந்த மண்டலங்கள்.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு


          எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், மாவட்ட அளவில், அதிக மதிப்பெண்கள் பெறும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உதவித்தொகை, அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் அமைவிடம்: கூட்டத்தில் வலியுறுத்தல்


           "மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் இடவசதி அமைவிடம் குறித்து தமிழக அரசு வரையறை செய்ய வேண்டும்" என மதுரையில் நேற்று நடந்த தென் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பேச்சு மற்றும் உச்சரிப்பு பயிற்சியாளர்


           இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ள பி.பி.ஓ., துறையானது பேச்சு மற்றும் உச்சரிப்புப் பயிற்சியாளர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. திறமைமிக்க தகவல் தொடர்பாளர்கள் இளம் பி.பி.ஓ., துறையினரோடு, திறமையை பகிர்ந்து கொண்டால் நல்ல வருமானம் ஈட்டலாம்.

அருங்காட்சியகங்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு: மத்திய அமைச்சர் ஆலோசனை


        "கற்றுக் கொள்ளும் இடமாக மட்டும் இல்லாமல், பார்வையாளர்கள் கவலைகளை மறந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளும் இடமாகவும், அருங்காட்சியகங்கள் இருக்க வேண்டும்," என, மத்திய கலாச்சார அமைச்சர் சந்தரேஷ் குமாரி கடோச் தெரிவித்தார்.

பொறியியல், மேலாண்மை பட்டதாரிகளுக்கு நல்ல பணி வாய்ப்புகள்


           உலகெங்கிலுமுள்ள பல பணியாளர்கள், ஒவ்வொரு மாதமும், தாங்கள் பெறுகின்ற ஊதிய காசோலைகளின் மீது எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள் என்பது இயல்பே. ஆனால், அமெரிக்காவிலுள்ள அஈக ஐணஞி என்ற நிறுவனம்தான், இதுபோன்ற ஊதிய காசோலை தொடர்பான செயல்பாடுகளுக்கு பொறுப்பான நிறுவனம் என்ற உண்மை பலருக்கும் தெரியாது.

அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு: ஜூன் 17ல் துவக்கம்


         கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 17ம் தேதி துவங்க உள்ளது.

அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு


          பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் 2013-14 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 3ம் தேதி முதல் நடக்கிறது. இப்பள்ளியில் குரலிசை, நாதசுவரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு பதிவுக்கு காரைக்காலில் சிறப்பு ஏற்பாடு


          காரைக்காலில் பிளஸ் 2 மதிப்பெண்கள் சான்றிதழ்கள், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத் ஐ.ஐ.டி.,க்கு ஜப்பான் கடன் உதவி


          ஐதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி.,க்கு ஜப்பான் ரூ.870 கோடி கடனாக வழங்க உள்ளது.

         இந்த கடன், ஐ.ஐ.டி.,யின் வளர்‌ச்சிக்காக ‌ஜப்பானிடம் இருந்து பெறப்பட்ட அதிகப்படியான கடன் தொகையாகும். இதனால் மாநிலத்தில் கல்வியை மேம்படுத்த ‌‌இத்தொகை உதவிகரமாக இருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளை மையப்படுத்தும் மாற்றுக் கல்விமுறை


                 பள்ளி மாணவர்களின் ஒருங்கிணைந்த அறிவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, சம்பிரதாய கற்பிக்கும் முறைகள், மறுஆய்வு செய்யப்படுகின்றன. வகுப்பறையோ, கரும்பலகையோ அல்லது வளாகமோ இல்லாத ஒரு பள்ளியை, உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
 

தேர்தல் பணியில் சிறுவர்களுக்கு தடை: தேர்தல் கமிஷன் உத்தரவு


              "வாக்காளர் விழிப்புணர்வு முகாம், தேர்தல் பிரசாரம் போன்றவற்றில், சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது" என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
 

ஆசிரியர்கள் கூறுவதையே குழந்தைகள் அதிகம் நம்புகிறார்கள்


          "ஆசிரியர்கள் கூறுவதையே குழந்தைகள் அதிகம் நம்புகிறார்கள்" என, பயிற்சி வகுப்பில் அண்ணாமலை பல்கலை பேராசிரியர் ஜோஸப் அலெக்ஸாண்டர் பேசினார்.
 

பி.எட்., எம்.எட்., தேர்வுகள் துவக்கம்


              தமிழகத்திலுள்ள கல்வியியல் கல்லூரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான தேர்வுகள் இன்று துவங்கின. இத்தேர்வுகள் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகின்றன.
 

வேளாண் பட்டதாரிகளுக்கு சென்னையில் பயிற்சி


          வேளாண்மை பட்டதாரிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபற்றி அரியலூர் கலெக்டர் ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை:
 
        அரியலூர் மாவட்டத்தில் 1,06,409 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவாக உள்ளது. இதில், 67 ஆயிரத்து, 155 ஹெக்டேர் மானாவரி பயிர் சாகுபடி பரப்பளவாகவும், 39 ஆயிரத்து, 254 ஹெக்டேர் இறவை சாகுபடி பரப்பளவாகவும் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சி.பி.எஸ்.இ.,10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு


             சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் காணலாம்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive