Half Yearly Exam 2024
Latest Updates
ஜப்பானிய தமிழ் அறிஞருக்கு பத்மஸ்ரீ விருது
ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், சர்தேச தமிழ்
ஆராய்ச்சி சங்கத்தின் முன்னாள் தலைவர், நொபொரு கராஷிமாவுக்கு, பத்ம ஸ்ரீ
விருது வழங்கி கவுரவித்தார்.
காதுகேளாத குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்? ஆய்வில் தகவல்
தமிழகத்தில், 1,000 குழந்தைகளில், ஆறு பேருக்கு செவித்திறன் குறைபாடு
உள்ளது. இது, தேசிய அளவைவிட, மூன்று மடங்கு அதிகம் என, ஆய்வு மூலம் தெரிய
வந்துள்ளது.
செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க உத்தரவு
இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வு எழுத உள்ளோர், செய்முறை
பயிற்சிக்கு, பதிவு செய்து கொள்ள, அரசு தேர்வுகள் இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம்
சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளியில் படித்து, அதிக
மதிப்பெண் பெற்ற, 200 மாணவர்களுக்கு, தலா, ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு
வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மருத்துவ சீட்டுக்கு ரூ.30 லட்சம்: மோசடி செய்த இருவர் கைது
மருத்துவப் படிப்பிற்கு, சீட் வாங்கித் தருவதாக, 30 லட்சம் ரூபாய்
பெற்று, மோசடி செய்த இருவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது
செய்தனர்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் 27ம் தேதி முதல் வழங்கப்பட்டன.
பிளஸ் 1 துணை தேர்வு ஜூன் 5ம் தேதி ஆரம்பம்
நெல்லை மாவட்டத்தில் மூன்று மையங்களில் பிளஸ் 1 துணை தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி ஆரம்பமாகிறது.
தேவைதானா ஆசிரியர் தகுதித் தேர்வு? - முனைவர் மணி.கணேசன்
மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபால
கிருஷ்ண கோகலே 1910-ஆம் ஆண்டிலேயே இலவச கட்டாயக் கல்விக்காகக் கொடுத்த
குரல் பல்வேறு படிநிலைகளைக் கடந்து அண்மையில்தான் மத்திய அரசால் இலவசக்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 என ஜம்மு-காஷ்மீர் தவிர நாடு முழுவதும்
ஏப்ரல்1, 2010 முதல் நடைமுறைப்படுத்தப் பெற்றுள்ளது.
வாட்டி வதைக்கும் கோடை வெயில்... ஜூன் 10ம் தேதி தான் பள்ளிகள் திறப்பு : தமிழக கல்வித் துறை அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளிகளின் கோடை விடுமுறையை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தமிழக கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 3ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதியன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் கடுமை தொடர்வதால் விடுமுறை நீட்டிக்கப்படுவதாக கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
கற்பது கற்கண்டா? கசப்பா?byஉதயசங்கர்
கற்றலின் இனிமை என்ற செயல்முறைக்கல்விமுறைக்கு முன்னோடி கிஜூபாய் பகேக. இன்றும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இந்த முறை உவப்பானதாகத் தெரியவில்லை.
அரசாணை எண்.216 நடைமுறைப்படுத்த - விரைவில் உரிய அரசாணை
அரசாணை எண்.216 நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை, விரைவில் உரிய அரசாணை வெளியிடப்பட உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் திரு.முத்துசாமி அவர்கள் தகவல்
அண்ணாபல்கலைக்கழகத்தில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு என்ஜினீயரிங் கட் ஆப்
சி.பி.எஸ்.இ. 12–வது படித்த மாணவர்கள்
என்ஜினீயரிங் படிப்பில் பி.இ. அல்லது பி.டெக். சேர அண்ணாபல்கலைக்கழகத்தில்
விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக கல்லூரிகளில் உள்தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் 27ம் தேதி முதல் வழங்கப்பட்டன.
ஆசிரியர் பயிற்சி படிப்பு: விண்ணப்ப வினியோகம் துவக்கம்
ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் 27ம்
தேதி துவங்கியது. ஜூன், 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
"வேலை தேடாதீர்... வேலை தருவோராக மாறுங்கள்..."
"பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பை தேடாமல், வேலைவாய்ப்பு தரும்
தொழில்முனைவோராக மாற வேண்டும். முன்னதாக, அதற்கான தகுதியை உருவாக்கிக்
கொள்ள வேண்டும்" என்று அண்ணா பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு)காளிராஜ்
பேசினார்.
"மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க": பேனர் வைத்து அழைப்பு
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆண்டு
தோறும் "பிளக்ஸ் பேனர்" வைத்து, மாணவர்களை அழைக்கிறது, அரசூரில் உள்ள
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
தலைமை ஆசிரியருக்கான இடமாறுதல் கலந்தாய்வு துவக்கம்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் பதவி உயர்வு
கவுன்சிலிங் இன்று துவங்குவதாக, திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்
(பொ) ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
"விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும்"
"இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும்" என அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தர் ராஜாராம் கூறினார்.
ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்
"ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பு, ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை மட்டுமே
கொண்டுள்ளது; அந்த அமைப்பிடம், எம்.பி.ஏ., கல்லூரிகள் அனுமதி பெறத்
தேவையில்லை" என சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால், அதிகாரம்
இழந்துள்ள அந்த அமைப்புக்கு, அதிகாரத்தை மீட்டுக் கொடுப்பதற்காக, அவசர
சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்க வேண்டுகோள்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை போல, பச்சையப்பன் அறக்கட்டளையையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு: சென்னை மண்டலம் முதலிடம்
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 27ம் தேதி வெளியாயின. இந்தியா
முழுவதும், 82 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சென்னை
மண்டலம் முதல் இடம் பிடித்துள்ளது.
தகவல் தர மறுத்ததால் கிடுக்கிப்பிடி: மதுரை பல்கலைக்கு அபராதம்
ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான, ஆவணங்கள் வழங்க மறுத்த, மதுரை காமராஜ்
பல்கலைகழகத்திற்கு, மாநில தகவல் ஆணையம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம்
விதித்துள்ளது.
புதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு
வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் ஜுன்
3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி
அமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை துவக்கம்
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 28) தொடங்குகிறது.
ஊதிய நிர்ணயக் குளறுபடி - பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் ஓர் ஒப்பாய்வு
M.A/M.Sc., B.Ed., முடித்துவிட்டு ஒருவர்
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான TET தேர்வு, முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களுக்கான TRB தேர்வு ஆகிய இரண்டிலுமே தேர்ச்சி பெற்றால் அவர்
பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேர்வதே சிறந்தது.