Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவுகள் 27ம் தேதி வெளியீடு


            சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 27ம் தேதி வெளியாகிறது. எனினும், சென்னை மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும், முன்கூட்டியே, இன்று காலை வெளியாகலாம் என, பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ.

         "தமிழகத்தில், புதிதாக, 17 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன" என ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் மான்தா கூறினார். ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை பல்கலை விண்ணப்பம்: 27ம் தேதி கடைசி நாள்

               அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நுழைவு தேர்வு விண்ணப்பம் 27ம் தேதி வரை மட்டுமே வினியோகிக்கப்படும்.

வேலூர் மாவட்டம், காட்பாடி தேர்வு மையத்தில் எழுதிய, அண்ணாமலை பல்கலை கழக தேர்வு விடைத்தாள்கள் சாலையில் இருந்தன


           சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக விடைத்தாள் பண்டல்கள், விருத்தாசலம் அருகே சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளி களுக்கு காலிபர் 'SHOE' இலவசமாக வழங்கும் அன்பரின் கைபேசி எண்கள் +91 89253 73001 , 98422 93774


மாற்றுத்திறனாளி களுக்கான இலவசக் கல்வி, இலவச விடுதி குறித்துத் தகவலைப்பெற‌ 9842062501 & 9894067506 எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்...
 

இங்கிலாந்தில் சீக்கியர்களுக்கு இலவச பள்ளி

         இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டரில், சீக்கியர்களின் வசதிக்காக இலவச பள்ளிக்கு அனுமதி கிடைத்துள்ளது. இத குறித்து 9 குருத்வாரா தலைவர்கள் ‌தொடர்ந்து வலியுறுத்தியதை தொ‌டர்ந்து தற்போது அனுமதி கிடைத்துள்ளது.  இப்பள்ளி 2014 செப்டம்பரில் துவக்கப்படும் என தெரியவந்துள்ளது.

மருத்துவக் கல்வியில் முன்னேறிவரும் இந்தியா!

          நவீன தொழில்நுட்பம் மற்றும் விரிவான முறையிலான ஆராய்ச்சி போன்ற காரணங்களால், உலகளாவிய மருத்துவ கல்வியில், இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு, நூற்றுக்கணக்காக மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் உள்ளதும் ஒரு காரணம்.

ஆக.17, 18 தேதிகளில் நடப்பதாக அறிவிப்பு - ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 87 நாட்கள் அவகாசம்




           ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் தகுதி தேர்வு நடப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு சுமார் 3 மாத அவகாசம் இருக்கும் நிலையில், இம்முறை தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  


TET-ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?


            ''தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள்.

பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்?


          பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றுவது குறித்து, 50 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.


சட்டப்படிப்பு: 2,700 விண்ணப்பங்கள் விற்பனை

          சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 2,700ஐ தாண்டியது. மூன்றாண்டு பி.எல்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகிக்கப்பட உள்ளன.


கால்நடை மருத்துவ படிப்பு: 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

           கால்நடை மருத்துவ படிப்பிற்கு, 13,450 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. கால்நடை மருத்துவ படிப்பில் மொத்தம், 360 இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம், மாநிலம் முழுவதும், 18 மையங்களில், கடந்த, 13ம் தேதி துவங்கியது; 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!


          அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்ற விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3600 அரசுத் தொடக்கப் பள்ளிகள் ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றம்


            தமிழ்நாட்டில் 3600அரசுத் தொடக்கப் பள்ளிகளில் வரும் சூன் மாதம் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பி.இ., மற்றும் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.


              சென்னை: பி.., மற்றும் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. பி..,க்கு விண்ணப்பித்தமாணவர்களின் எண்ணிக்கை, இறுதியாக, 1.89 லட்சமாக உயர்ந்தது. கடந்த மூன்று நாளில் மட்டும், 89 ஆயிரம் விண்ணப்பங்களை, அண்ணா பல்கலை பெற்றுள்ளது. 
 

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் கலந்தாய்வு -கோர்ட் தடையால் நிறுத்தி வைப்பு


           உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி  உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் பாதிக்கும்படியான உத்தரவால், கோர்ட் தடை விதித்தது; இதையடுத்து, கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர் உட்பட பல்வேறு ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

          பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மே 24 மற்றும் 25ல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால், பின் ஒத்திவைப்பதாக தகவல் வெளியானது. 

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் - மாவட்டங்களுக்குள் 1,496 பேருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு 600-க்கும் மேற்பட்டவர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

            தமிழகம் முழுவதும் 5,340 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் மாவட்டங்களுக்குள் 1,496 பேருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு 600-க்கும் மேற்பட்டவர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

          பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மாறுதல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கலந்தாய்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - இயக்குநர்

              இன்று (மே 24) நடப்பதாக இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்', தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
 

புது வகை ஹைடெக் இந்தியன் பாஸ்போர்ட் நேற்று முதல் வினியோகம் ஆரம்பம்

          நேற்று முதல் புது வகை பாஸ்போர்ட் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் இந்தியாவின் அத்தனை பாஸ்போர்ட் அலுவுகங்களிலும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உள் அட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படம் இனிமேல் மூன்றாம் பக்கம் இருக்கும்.
 

தனியார் பள்ளிகளில் இட பரப்பளவிற்கு ஏற்ப மாணவர் எண்ணிக்கை


               தனியார் பள்ளிகளில் உள்ள இட பரப்பளவிற்கு ஏற்ப, எத்தனை மாணவ, மாணவியர் வரை அனுமதிக்கலாம் என்பதை, வரையறுக்க வேண்டும்' என, தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழுவிடம், பள்ளி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.


சி.டி.இ.டி.,(CTET) தேர்வு நேரம் 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிப்பு

           சி.டி.இ.டி., எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம், 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை அனுப்ப உத்தரவு

            பிளஸ் 2 மாணவர்களுக்கான, மதிப்பெண் பட்டியல், வரும், 27ம் தேதி வழங்கவுள்ள நிலையில், அதன் பின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்போர், அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை மட்டுமே அனுப்ப வேண்டும் என, கால்நடை பல்கலை அறிவித்துள்ளது.
 
 

மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்

          மருத்துவ பட்டமேற்படிப்பு குறித்த கலந்தாய்‌வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்கம் தெரிவி்த்துள்ளது.
 

உண்மைத் தன்மைச் சான்று பெற அசல் பட்டச் சான்றை மட்டுமே அனுப்ப வேண்டும் - கல்வியியல் பல்கலை

         ஆசிரியர்கள் பயின்ற உயர்கல்வியைப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் ஊக்க ஊதிய உயர்வு சுதந்தரித்து வழங்கவும் பதவி உயர்வுக்குத் தகுதிவாய்ந்தோர் பட்டியலில் சேர்க்கவும் உயர்கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை அறியும் பொருட்டு அவற்றின் நகல்கள் (Xerox) சார்ந்த
பல்கலைக்கழகங்களுக்கு தொடக்கக் கல்வித்துறை எனில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராலும் பள்ளிக் கல்வித் துறை எனில் தலைமையாசிரியராலும் அனுப்பப்பட்டு மெய்த்தன்மைச் சான்று (Genuinneness) பெறுவது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் உள்ளது.
 

உதயமாகும் புதிய படிப்புகள்

          சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இன்ஜினியரிங் படிப்பு என்பது வசதி படைத்த மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களும் மட்டும் படிக்கும் படிப்பாக இருந்தது. இன்று நிலை தலைகீழாக உள்ளது.
 

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013-ஓர் ஆய்வு - 1

தகுதிகள்

PAPER-2
=>B.Ed with B.A,BSc,B.lit
=>B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE.
=>10+2+3 கல்விமுறை அவசியம்
=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை
=> தற்போது தனியார் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்- 23/8/2010 அன்றோ அதற்கு பிறகு நியமன ஆனண பெற்றிருப்பின் தேர்வு எழுதி கட்டாயம் 5 ஆண்டுக்குள் தேற வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - ஓர் ஆய்வு-2


       ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல் 01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
 
தேர்வு கட்டணம்  >ஒவ்வொரு தாளுக்கும் ரூ-500,
>எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ-250
>மாற்றுதிரனாளிகளுக்கு ரூ-250-

ஆன்-லைன் பதிவால் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேட்டிற்கு இடமில்லை


           கவுன்சிலிங்கில், ஆசிரியர் விபரத்தை "ஆன்-லைனில்" பெற்று, மாநில பதிவு மூப்பு படி, முறைகேடின்றி இடமாறுதல் வழங்குவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
 

Draft Syllabus For 2014-15 (XI-Std) and 2015-16 (XII-Std)


New Draft Syllabus 2017 Published on 20.11.2017 - Click Here & Download

This is a draft syllabus for 2014-15 (XI std) and 2015-16 (XII std)
kindly give us your feedback at scerttn@gmail.com 
or dtert@tn.nic.in          

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive