பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம்
ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 21 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை
விநியோகிக்கப்பட உள்ளன.
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதிகளை அண்ணா
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு முதல் கட்ட
தேர்வான, "ஜே.இ.இ., முதன்மை" , தேர்வில் பீகாரின் "சூப்பர் 30" நிறுவனம்,
நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்த 2013ம் ஆண்டிற்கான டேன்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ,
மாணவியருக்கு, தேர்வு முடிவுகள் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே, 20ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்களை அனைத்துப் பாடத்திட்ட
மாணவர்களும் மே 20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாநில பாடத்திட்ட
மாணவர்கள் விண்ணப்பத்தில் கோரியுள்ள மாற்றுச் சான்றிதழை (டி.சி.) வரும் மே
30-க்குள் அளித்தால் போதும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம்
தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி 75 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
"கல்வித்துறை மூலம் வழங்கப்படும், விலையில்லா பொருள்களை
கொள்முதல் செய்து வினியோகிக்க, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம்
என்ற ஒருங்கிணைப்பு மையம் உருவாக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா
கூறினார்.
மேல்நிலைக்கல்வி
- உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வில் 50% க்கு
குறைவாக மதிப்பெண் பெற்று ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்று பள்ளிகளில்
பணியாற்றி வரும் 652 கணினி பயிற்றுனர்களுக்கு பணியிலிருந்து நீக்க காரணம்
கேட்கும் தாக்கீது (show cause notice) அனுப்பப்பட்டுள்ளது.
பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம் என்பது
குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கும் வகையில் 3 மையங்களில் ஆலோசனை
கூட்டம் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை., பாளை கல்வி மையத்தில் பி.எட் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
"டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப்-1
முதன்மைத் தேர்வில், 1,330 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு
பெற்றவர்கள், தகுதிச் சான்றிதழ்களை, தபால் மூலமாகவோ, தேர்வாணைய
இணையதளத்திலோ, ஜூன், 7ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்" என
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆறு வயது முதல், 14 வயதுக்கு உட்பட்ட
குழந்தைகள், கல்வி கற்பதை கட்டாயமாக்கும் வகையில், கல்வி உரிமை சட்டத்தை,
மத்திய அரசு கொண்டு வந்தது. அதே நேரத்தில், "நர்சரி பள்ளிகளில், மாணவர்
சேர்க்கைக்கு, பள்ளிகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்" என, மத்திய மனிதவள
மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரியாகும் கனவுடன்,
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற,
மத்திய பணியாளர் தேர்வாணையம் தயாராகி வருகிறது. தேர்வில் பங்கேற்பவர்களின்
விடைத்தாள்களை, ஆன் லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது.
திறந்தவெளி பல்கலையில் பட்டப்படிப்பு
படித்தாலும், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அந்த தகுதி
அங்கீகரிக்கப்படும் என்று 2012ல் அரசாணை வெளியிடப்பட்டாலும், திறந்தநிலை
பல்கலை தகுதியுடையோருக்கு, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு அளிக்க முடியாது
என்று அமைச்சர் முனுசாமி அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வகைசெய்யும் சட்டமசோதா, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஒவ்வொரு பள்ளியும், மாணவர்களிடம் எவ்வளவு
கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது
.இந்த விவரத்தை வெளியிடுவதற்கு முன், பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம்
இருந்து கட்டணத்தை வசூலித்தால், குறிப்பிட்ட பள்ளியின் அங்கீகாரம்,
உடனடியாக ரத்து செய்யப்படும் என, மாவட்ட கல்வி துறை எச்சரித்துள்ளது.
பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள
நிலையில், எதிர்கால வேலை வாய்ப்புக்கு தகுதியான பாடங்களை பெற்றோர்களும்,
மாணவர்களும் தொலை நோக்கு பார்வையுடன் தேர்வு செய்ய வேண்டும்; பெற்றோர்
மாணவர்களை வற்புறுத்தியும், மாணவர்கள் பெற்றோர்களிடம் அடம் பிடித்தும்,
படித்தால் எதிர்கால வாழ்வு இருளில் மூழ்கும் நிலை ஏற்படும், என
கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல்
ஆன்-லைன் கவுன்சிலிங் பணிகளுக்கு சென்று விடுவதால் மாணவ, மாணவிகள்
தலைமையாசிரியர் கையெழுத்து பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
அரசு, நகராட்சி பள்ளி ஆசிரியர் கலந்தாய்வுக்கான
ஆன்லைன் விண்ணப்ப பதிவு, சர்வர் பிரச்னையால் ஒரு நாள் தாமதத்துக்கு பிறகு
தொடங்கியது.வரும் 2013&14ம் கல்வி ஆண்டுக்கு ஆசிரியர்களுக்கான
இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி படி முதல்வர்
மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும்
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுதலைவர்
அ.சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார்.
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில்
பங்கேற்கும் ஆசிரியர் அனைவரும், நாளை(17ம் தேதி), மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்பதற்கு, ஆசிரியர் மத்தியில், எதிர்ப்பு
எழுந்துள்ளது. இந்த முறையால், ஒரே நாளில், 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்,
நீண்ட வரிசையில், காத்திருக்க நேரிடும் என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பி.இ., விண்ணப்பம் விற்பனை, நேற்றுடன், 2.26
லட்சமாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 1.86 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே
விற்பனை ஆயின. இந்த ஆண்டு, விண்ணப்பம் விற்பனை துவங்கிய முதல் நாளே, 80
ஆயிரம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தன.
மகாராஷ்டிரா மாநில, 10ம் வகுப்பு பாட
புத்தகத்தில் இடம் பெற்றுள்ள, இந்திய வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம் இடம்
பெறவில்லை. அதுமட்டுமின்றி, அம்மாநிலம், சீனாவுக்கு சொந்தமானதாக
காட்டப்பட்டுள்ளது.
மலேசிய கல்வித்துறையின் முன்னாள் டைரக்டர்
ஜெனரல் அப்துல் ரஹ்மான், சமீபத்தில் கூறுகையில், "மலேசியாவில் மலாய் மொழி
பள்ளிகள் மட்டுமே செயல்பட வேண்டும். தமிழ் மற்றும் சீன மொழி பள்ளிகளை தடை
செய்ய வேண்டும். அப்போது தான் தேச ஒற்றுமை ஏற்படும்" என்றார்.
சி.ஏ., படிப்பிற்கான, குரூப் - 2, 7ம் தாள் தேர்வு, இம்மாதம், 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
"பிரபல, நிகர்நிலை பல்கலைகள், மருத்துவ மற்றும்
பொறியியல் கல்லூரிகளில், இடம் வாங்கித் தருவதாக கூறும், புரோக்கர்களிடம்
பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" என போலீசார் எச்சரித்துள்ளனர்.
வாசகர்களே தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து, இக்கட்டுரை ஆரோக்கியமான விவாதமாக அமைய ஒத்துழையுங்கள்.
( நினைவில் கொள்ளுங்கள் - இன்று பிற்பகல் 9 மணியுடன் வாக்கெடுப்பு முடிவடைகிறது )
அன்பான பாடசாலை வாசகர்களே,
- ஆங்கில வழிக்கல்வி திட்டதின் மூலமாக அரசுப்பள்ளிகளில் எந்தளவிற்கு சேர்க்கை
அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
- ஆங்கில வழிக்கல்வி எனும் ஒரு காரணம் மட்டுமே கிராமத்து பெற்றோர்களை சுண்டியிழுத்து
விடுமா?
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183
கற்பித்தல் நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2013-14ம் கல்வி
ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விபரத்தை கல்வித் துறை அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், இதுவரை பள்ளியில்
இருந்து இடையில் நின்ற மாணவர்கள், 4,826 பேர் என, கண்டுபிடிக்கப் பட்டு
உள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து,
அனைத்து சிறுவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
"தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கணினித்
தமிழுக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோருக்கு, புதிய விருதுகள்
வழங்கப்படும்," என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக முதல்வர் கல்வித்துறைக்கு கூடுதல்
முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிளஸ் 2
முடித்த மாணவர்கள் மேல் படிப்பு என்ன படிக்கலாம் என்பது குறித்து
அவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.
அரசு
பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கும் முடிவை தமிழக முதல்வர் கைவிட
வேண்டும் என வலியுறுத்தி தமிழக மாணவர் முன்னணியினர் ஊர்வலமாக சென்று
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உதவி
ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சிதம்பரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன்
பிளஸ் 2 தேர்வில் 1108 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் துறையில் சேர்ந்து
படிக்க விரும்புகிறார். ஆனால் சீட் கிடைத்தாலும் கட்டணம் செலுத்த முடியாத
நிலையில் உள்ளார்.