Half Yearly Exam 2024
Latest Updates
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி? - Poll Related Article.
வாசகர்களே தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து, இக்கட்டுரை ஆரோக்கியமான விவாதமாக அமைய ஒத்துழையுங்கள்.
( நினைவில் கொள்ளுங்கள் - இன்று பிற்பகல் 9 மணியுடன் வாக்கெடுப்பு முடிவடைகிறது )
அன்பான பாடசாலை வாசகர்களே,
- ஆங்கில வழிக்கல்வி திட்டதின் மூலமாக அரசுப்பள்ளிகளில் எந்தளவிற்கு சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
- ஆங்கில வழிக்கல்வி எனும் ஒரு காரணம் மட்டுமே கிராமத்து பெற்றோர்களை சுண்டியிழுத்து விடுமா?
பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் விபரம்: புதிய மென்பொருள் மூலம் கண்டுபிடிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில், இதுவரை பள்ளியில்
இருந்து இடையில் நின்ற மாணவர்கள், 4,826 பேர் என, கண்டுபிடிக்கப் பட்டு
உள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து,
அனைத்து சிறுவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் : தமிழக முதல்வர்
Employment Online Registration - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
தமிழகம்
முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர்
மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை
பட்டப்படிப்புகள்,பொறியியல் , மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும்
பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை
இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட
இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
பாடநூல் கழகம் பெயர் மாற்றம்
பாடநூல்கழகம் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக
முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர்
வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாடநூல் கழகம் இனிமேல்,கல்வியியல் கழகம் என்ற
பெயரில் செயல்படும் எனவும், மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்கும் பணியை, கல்வியியல் கழகம் செய்யும் எனவும் அறிவித்தார்.
2013-14ம் கல்வியாண்டில் புதியதாக 1408 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து தமிழக முதல்வர் உத்தரவு.
தமிழக சட்டமன்றத்தில் பேரவை விதி 110-ன் கீழ்
இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சிக்காக
அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் 2013-14ம் கல்வியாண்டில் புதியதாக 54
தொடக்கக் பள்ளிகள் துவக்கவும், அப்பள்ளிகளுக்கு தேவைகேற்ப ஒரு
தொடக்கப்பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் வீதம் 54 தொடக்கப்பள்ளி தலைமை
ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 54 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்
ஏற்படுத்தவும்.
Flash News : 2013-14 ஆம் ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவு
தமிழக முதலைமைச்சர் இன்று சட்டசபையில் வெளிட்ட
அறிக்கையில் 2013-14 ஆம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப்
பள்ளிகள் ஆகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம்
உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து வரும் பொது மாறுதல்
கலந்தாய்வில் இந்த புதிய பள்ளிகளில் உள்ள பணியிடங்களும் காலிப்
பணியிடங்களாக காட்டப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அறங்காவலர் வங்கியாக (Trustee Bank) 01.07.2013 முதல் Axis Bank என்ற தனியார் வங்கியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு
01.04.2004 முதல்
மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு
வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய
திட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமான
முடிவினை இடைக்கால ஓய்வூதிய
நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் (PFRDA) எடுத்துள்ளது.இது நாள் வரை
TRUSTEE BANK- (அறங்காவலர்
வங்கி) ஆக மத்திய அரசின்
பொதுத்துறை நிறுவன வங்கியான BANK OF INDIA ஓய்வூதிய
நிதியனை கையாண்டு வந்தது.
வருகின்ற
01.07.2013 முதல் TRUSTEE
BANK (அறங்காவலர் வங்கி) ஆக வெளிநாட்டு தனியார் வங்கியான AXIS BANK ஓய்வூதிய
நிதியை கையாளும் வங்கியாக தேர்வு செய்யபப்பட்டுள்ளது.NPS திட்டத்தில் ஏறக்குறைய
60 ஆயிரம் கோடி உள்ளது.அதை
கையாளும் உரிமை AXIS வங்கிக்கே உள்ளது.
கடந்த சிலஆண்டுகளுக்கு முன் பலஅமெரிக்கதனியார்வங்கிகளில்
3 லட்சம்கோடிரூபாய்ஓய்வூதியநிதிதிவால்ஆகிவுள்ளநிலையில்
PFRDA -ன் TRUSTEE
-BANK (அறங்காவலர்வங்கி) ஆக தேர்வுசெய்யபப்பட்டுள்ளது.ஓய்வூதியத்தில் தனியார் மயத்தின் முதல்
படியாகும் .பல்வேறுநாட்டுடைமைவங்கிகளுக்குபின்னடைவுஏற்படுத்தும்.
PG TRB 2012 தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 23, 24–ந்தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடப்பிரிவுகளில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 23, 24–ந் தேதிகளில் சென்னை உள்பட 7 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
ஒன்பதாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 2 நாள் பயிற்சி - ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்களில் நடைபெறும் எந்தஒரு பயிற்சி மையத்திலும் கலந்துகொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
click here to download the SCERT proceeding for cce std 9 - teachers traning
குறிப்பு : ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்களில் நடைபெறும் எந்தவொரு பயிற்சி மையத்திலும் ஆசரியர்கள் கலந்துகொண்டு பயிற்சியினை பெற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
மாவட்ட கல்வியியல் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் - 2013-14 முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு CCE முறை அறிமுகப்படுத்த ஒன்பதாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 2 நாள் பயிற்சி 3 சுற்றுகளாக (23&24 / 27&28 / 29&30.5.13) நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்களில் நடைபெறும் எந்தஒரு பயிற்சி மையத்திலும் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சியில் ஒரு சுற்றுக்கு 40 ஆசிரியர்கள் வீதம் அனுமதிக்கப்படுவர்.
மேலும் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 1 நாள் பயிற்சி 18.5.13 அன்று நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ்–2 முடிக்காமல் பட்டப்படிப்பை படித்ததாக குற்றச்சாட்டு, தலைமை ஆசிரியரின் பதவி உயர்வை திரும்பப் பெற்ற அதிகாரியின் நடவடிக்கை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பிளஸ்–2 படிக்காமல் பட்டப்படிப்பை
முடித்துள்ளதாக கூறி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை திரும்பப் பெற்ற கல்வி
அதிகாரியின் நடவடிக்கையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவில் தமிழைக் கௌரவித்த ரஷ்ய அதிபர் மாளிகை!
Great
Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர்
மாளிகை) தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ அவமானமாகப் பார்க்கும் நிலை
இன்றுள்ள தமிழர்களிடையே பரவியுள்ளது. நம் மொழியை நாம் பேசவே தயங்குகிறோம்
அந்த அளவுக்குப் போய்விட்டது நம் மொழி. ஆனால், Great Kremlin Palace,
Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை)
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம்
அரசுப்பணியாளர் தேர்வு வினாத்தாளில்,
திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. திருக்குறளில்
இருந்து, அடியை கொடுத்து, "மேற்கோள் காட்டுதல்" என்ற ரீதியில் கேள்வி
கேட்கப்படும். திருக்குறளில், ஆறு சீர்கள் கொடுத்து, விடுபட்ட சீர், கேள்வியாக கேட்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Directorate of Employment and Training Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu (March -2013)
Cut-off Seniority dates for Computer Instructor and Secondary Grade Teachers
List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
For further enquiry the
candidates may contact the Teachers Recruitment Board by referring
their Nomination ID in the list. Candidates who come within the Cut off
date and if their names are omitted may contact the District Employment
Office concerned.
TET மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இவ்வாண்டு நடைபெறும் பணிமாறுதலுக்கு தகுதியற்றவர்கள்.
கலந்தாய்வில்
பங்கேற்க குறைந்தபட்சம் ஒரு முழுமையான கல்வியாண்டு பணியாற்றியிருக்க
வேண்டும். இருப்பினும் புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள் மற்றும் பதவியுயர்வு பெற்றவர்களுக்கு இதில்
விலக்க அளித்து அரசாணையில் குறிப்பிடப்படும். ஆயினும் இந்த
கல்வியாண்டிற்கான அரசாணை எண் 129ல் பதவியுயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே
விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில் TET மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையில் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் அவர்களால் 15 நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதில் 13வது நிபந்தனையாக "TET மூலம் தேர்வான சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமனம்
செய்யப்பட்டுள்ள பள்ளியில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும்”
என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே TET மூலம் தேர்வான ஆசிரியர்கள் இவ்வாண்டு நடைபெறும் பணிமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.
மாறுதல், பதவியுயர்வு கலந்தாய்வு 2013 - ஓர் முன்னோட்டப் பார்வை
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறை
பொது மாறுதலுக்கான அரசாணை வழக்கம் போல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வரசாணையைக் கொண்டு இயக்குநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை
வகுத்தளித்துள்ளனர்.
1. மாறுதல் விண்ணப்ப மாதிரி வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு முறை என்பதால் ஆசிரியர் மாறுதல் கோரும் பள்ளியை விண்ணப்பத்தில் குறிப்பிடக் கூடாது என்று அரசாணை (பத்தி-8) திடமாகக் குறிப்பிடுகிறது. ஆனால் விண்ணப்ப மாதிரியில் ஆசிரியர் மாறுதல் பெற விரும்பும் பள்ளிகளை விருப்ப வரிசைப்படி அதிகபட்சம் (மூன்று பள்ளிகள்) குறிப்பிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
1. மாறுதல் விண்ணப்ப மாதிரி வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு முறை என்பதால் ஆசிரியர் மாறுதல் கோரும் பள்ளியை விண்ணப்பத்தில் குறிப்பிடக் கூடாது என்று அரசாணை (பத்தி-8) திடமாகக் குறிப்பிடுகிறது. ஆனால் விண்ணப்ப மாதிரியில் ஆசிரியர் மாறுதல் பெற விரும்பும் பள்ளிகளை விருப்ப வரிசைப்படி அதிகபட்சம் (மூன்று பள்ளிகள்) குறிப்பிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டுகளில் 546 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
2013-2014 ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின்
மானியக் கோரிக்கை "கொள்கை குறிப்பில்" (Policy Note) பக்கம் 137,138ல் 546
நடுநிலைப் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2012-2013 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள் தரம்
உயர்த்தப்பட மத்திய அரசு பரிசீலிக்காத போதும் 100 விழுக்காடு அருகாமையினை
(access) உறுதி செய்ய மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. இருப்பினும் 546
பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது,
இதற்கான முயற்சிகள் வரும் ஆண்டுகளில்
படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார்
என்ற எதிர்ப்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.