கலந்தாய்வில்
பங்கேற்க குறைந்தபட்சம் ஒரு முழுமையான கல்வியாண்டு பணியாற்றியிருக்க
வேண்டும். இருப்பினும் புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள் மற்றும் பதவியுயர்வு பெற்றவர்களுக்கு இதில்
விலக்க அளித்து அரசாணையில் குறிப்பிடப்படும். ஆயினும் இந்த
கல்வியாண்டிற்கான அரசாணை எண் 129ல் பதவியுயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே
விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில் TET மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையில் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் அவர்களால் 15 நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதில் 13வது நிபந்தனையாக "TET மூலம் தேர்வான சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமனம்
செய்யப்பட்டுள்ள பள்ளியில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும்”
என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே TET மூலம் தேர்வான ஆசிரியர்கள் இவ்வாண்டு நடைபெறும் பணிமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.