Half Yearly Exam 2024
Latest Updates
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மே 21 பிற்பகலும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மே 20 பிற்பகலும் நடத்த உத்தரவு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2013-14ஆம் கல்வியாண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 21.05.2013 அன்று முற்பகலும்,
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 20.05.2013 முற்பகல் நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டது.
தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - நெறிமுறை கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.
*13.05.2013 முதல் 17.05.2013 - ஆசிரியர் மாறுதல் விண்ணப்பங்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
*18.05.2013 முதல் 20.05.2013 - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், தங்களது ஒன்றியத்திலுள்ள அனைத்து மாறுதல் விண்ணபங்களையும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
நாளை முதல் ப்ளஸ் 2 பாடபுத்தகம் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ப்ளஸ் 2 பாட புத்தகம் நாளை முதல் விநியோகம்
செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தாவரவியல், விலங்கியல்
புத்தகங்கள் மட்டும் பின்னர் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி
உள்ளது.
ஆங்கில வழி கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுமா?
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி
விரிவுபடுத்தும் அரசின் அறிவிப்பு பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள
நிலையில், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வகுப்புகள் நடத்த அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உலகை சிறு
கிராமம் போல் ஆக்கிவிட்டது. இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில், ஆங்கில அறிவு
மிக முக்கியமானது ஆகும். வலைதளங்களில் கொட்டிக்கிடக்கும் அறிவு
களஞ்சியங்களை, ஆங்கிலம் அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நம்மால் எடுத்துக்
கொள்ள முடியும்.
2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.
# தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின்
செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண் 183 /ஏ1/இ2/2013 நாள்:11.05.2013
ன் படி பள்ளிக்கல்வித்துறை அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப்
பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு
2013-2014ம் கல்வியாண்டில் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல்
சார்ந்தான அறிவுரை கிழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது .
தொடக்கக்கல்வித் துறை பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 விண்ணப்பங்கள் நாளை (13.05.2013) முதல் சமர்பிக்கலாம்
*விண்ணப்பம் சமர்பித்தல் தொடங்கு தேதி: 13.05.2013
*கடைசி நாள் : 17.05.2013
*சென்ற ஆண்டு வழி காட்டு நெறிமுறைகளே இந்த ஆண்டும் பின்பற்றப்படுகிறது.
*சென்ற ஆண்டு பயன்படுத்திய விண்ணப்ப படிவமே இந்த ஆண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
*2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம்
செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் மாவட்டம் விட்டு மாவட்ட
மாறுதல் பெற முடியாத நிலை நீடிக்கிறது என்று அறியப்படுகிறது.
அரசு கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்
அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக மாணவர்கள் சேர்வதற்கு வசதியாக,
எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிப்பது குறித்த ஆய்வு முடிவை, இந்திய
மருத்துவ கவுன்சில் அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கணிதமேதை ராமானுஜம் வாழ்க்கை திரைப் படமாகிறது
கணிதமேதை ராமானுஜமின் வாழ்க்கை, "ராமானுஜன்" என்ற பெயரில் திரைப்படமாகிறது.
குறைந்த மார்க் வாங்கியதற்காக தற்கொலை செய்வதா: கலெக்டர் அட்வைஸ்
குறைந்த மார்க் வாங்கியதற்காக மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவை
எடுக்கக் கூடாது என கலெக்டர் சமயமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிளஸ் 2 விடைத்தாள் மறு கூட்டல்: ஆன்-லைன் முறையால் தவிப்பு
பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, ஆன்-லைன் மூலம்
பதிவு செய்ய வேண்டும் என்ற முறையால், கிராமப்புற மாணவர்கள் பரிதவித்து
வருகின்றனர். இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, மேலும் சில
தினங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சட்ட பல்கலையில் புதிய படிப்பு: மே 20ல் விண்ணப்பம்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், பி.காம்.,- பி.எல்.,
(ஹானர்ஸ்) என்ற ஐந்தாண்டு பட்டப் படிப்பை, இந்தாண்டு அறிமுகப்படுத்தி
உள்ளது. சட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், 20ம் தேதி துவங்குகிறது.
Dir. of Minorities Welfare Pre Matric Scholarship 2011-12 - Beneficiaries (Renewal)
Schemes
for the Welfare of Backward
Classes, Most Backward Classes and Denotified Communities
Minorities Welfare
Pre-Matric Scholarship for 2012-2013 (Renewal)
Chennai | Coimbatore | |
Nagapattinam | ||
Tirunelveli | ||
Kanniyakumari - II | Virudhunagar | |
Kanniyakumari - III | Ariyalur | |
Tiruppur | ||
Theni | ||
Madurai | Thiruvallur |
Dir. of Minorities Welfare Pre Matric Scholarship 2011-12 - Beneficiaries (Fresh)
Schemes
for the Welfare of Backward
Classes, Most Backward Classes and Denotified Communities
Minorities Welfare
Pre-Matric Scholarship for 2012-2013 (Fresh)
Chennai | Coimbatore | Tiruppur |
Nagapattinam | ||
Tirunelveli | ||
Kanniyakumari II | ||
Kanniyakumari III | ||
Virudhunagar | ||
Theni | Ariyalur | |
Madurai |
ஆங்கில வழிக் கற்பித்தலும் அட்டை வழிக் கற்றலும் - நாளிதழ் செய்தி
தமிழக அரசு வரும் ஆண்டு முதல் ஒன்றாம்
வகுப்பிலிருந்து படிப்படியாக ஆங்கில வழிக் கல்வி முறையை மாநிலம் முழுவதும்
நடைமுறைப் படுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான பணிகள் துரிதமாக
முடுக்கி விடப் பட்டுள்ளன.
பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை
பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால்
பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி
அமைச்சர் வைகைச் செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.
பள்ளி மானியக் கோரிக்கை - அறிவிப்பு முழு விவரம்
மானியக்கோரிக்கை விவாதம் : சட்டசபையில் கேள்வி
நேரம் முடிந்தம், பள்ளிக்கல்வி, விளையாட்டுகள், இளைஞர் நலம் மற்றும்
தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம்
நடைபெற்றது.
தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பட்டியலை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார்.
தொடக்க கல்வி துறையில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பட்டியலை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன்
வெளியிட்டுள்ளார்.
இரத்த குரூப் சான்றிதழ் இருந்தால் மட்டுமே டிசி:புதிய சிக்கலில் பிளஸ் டூ மாணவர்கள்
பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்று
சான்றிதழில் (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்- டிசி) ரத்த குரூப் பற்றி தெரிவிக்க
வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாணவர்கள்,
பெற்றோர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஒன்பதாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல், முப்பருவ கல்வி முறை அமுல்
மூன்று தொகுதிகளாக, புத்தகங்கள் வழங்கப்படும்.
மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கவும், கற்கும் திறனை அதிகப்படுத்தவும்,
இக்கல்வி முறை அமலாகிறது.