Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை முதல் ப்ளஸ் 2 பாடபுத்தகம் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


         ப்ளஸ் 2 பாட புத்தகம் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தாவரவியல், விலங்கியல் புத்தகங்கள் மட்டும் பின்னர் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் வெளி மாநிலங்களுக்கு மாற்றம்


            அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், புரோக்கர்களாகச் செயல்பட்ட இரண்டு ஊழியர்கள், வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
 

லண்டனில் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்

        
             சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எச்டி., பட்டம் பெற்ற ராஜேந்திரகுமார், தற்போது லண்டனில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஆசிரியராக, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.
மேலும் 2012ம் ஆண்டு கார்டிப் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதை வழங்கி உள்ளது.

ஆங்கில வழி கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுமா?


          அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தும் அரசின் அறிவிப்பு பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வகுப்புகள் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உலகை சிறு கிராமம் போல் ஆக்கிவிட்டது. இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில், ஆங்கில அறிவு மிக முக்கியமானது ஆகும். வலைதளங்களில் கொட்டிக்கிடக்கும் அறிவு களஞ்சியங்களை, ஆங்கிலம் அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நம்மால் எடுத்துக் கொள்ள முடியும்.

2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.


             # தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின்   செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண்  183 /ஏ1/இ2/2013 நாள்:11.05.2013 ன் படி பள்ளிக்கல்வித்துறை அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான அறிவுரை கிழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது .
 
 

தொடக்கக்கல்வித் துறை பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 விண்ணப்பங்கள் நாளை (13.05.2013) முதல் சமர்பிக்கலாம்


*விண்ணப்பம் சமர்பித்தல் தொடங்கு தேதி: 13.05.2013
*கடைசி நாள் : 17.05.2013
*சென்ற ஆண்டு வழி காட்டு நெறிமுறைகளே இந்த ஆண்டும் பின்பற்றப்படுகிறது.
*சென்ற ஆண்டு பயன்படுத்திய விண்ணப்ப படிவமே இந்த ஆண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
*2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் பெற முடியாத நிலை நீடிக்கிறது என்று அறியப்படுகிறது. 

அரசு கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்


            அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக மாணவர்கள் சேர்வதற்கு வசதியாக, எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிப்பது குறித்த ஆய்வு முடிவை, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


கணிதமேதை ராமானுஜம் வாழ்க்கை திரைப் படமாகிறது


          கணிதமேதை ராமானுஜமின் வாழ்க்கை, "ராமானுஜன்" என்ற பெயரில் திரைப்படமாகிறது.

குறைந்த மார்க் வாங்கியதற்காக தற்கொலை செய்வதா: கலெக்டர் அட்வைஸ்


                 குறைந்த மார்க் வாங்கியதற்காக மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவை எடுக்கக் கூடாது என கலெக்டர் சமயமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிளஸ் 2 விடைத்தாள் மறு கூட்டல்: ஆன்-லைன் முறையால் தவிப்பு


           பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்ற முறையால், கிராமப்புற மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, மேலும் சில தினங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சட்ட பல்கலையில் புதிய படிப்பு: மே 20ல் விண்ணப்பம்


           தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், பி.காம்.,- பி.எல்., (ஹானர்ஸ்) என்ற ஐந்தாண்டு பட்டப் படிப்பை, இந்தாண்டு அறிமுகப்படுத்தி உள்ளது. சட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், 20ம் தேதி துவங்குகிறது.

ஆங்கில வழிக் கற்பித்தலும் அட்டை வழிக் கற்றலும் - நாளிதழ் செய்தி

 
     தமிழக அரசு வரும் ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து படிப்படியாக ஆங்கில வழிக் கல்வி முறையை மாநிலம் முழுவதும் நடைமுறைப் படுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான பணிகள் துரிதமாக முடுக்கி விடப் பட்டுள்ளன. 
 

பிளஸ் 2 மறுகூட்டல்: சலானை பதிவிறக்கம் செய்யத் தவறியவர்களுக்கு மாற்று வழி


           பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில், ஆன்-லைனில் சலானை பதிவிறக்கம் செய்யத் தவறியவர்களுக்கு மாற்று வழியை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.
 

பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை


                பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.
 

பள்ளி மானியக் கோரிக்கை - அறிவிப்பு முழு விவரம்



                 மானியக்கோரிக்கை விவாதம் : சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தம், பள்ளிக்கல்வி, விளையாட்டுகள், இளைஞர் நலம் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
 
          

தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பட்டியலை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார்.


             தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பட்டியலை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். 
 

எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்க திட்டம்: அமைச்சர் தகவல்



              "அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது" என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார். சட்டசபையில், நேற்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்...

ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கூடாது: இந்திய கம்யூனிஸ்ட்



                 "ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில வழி கல்வியை அமல்படுத்தக்கூடாது, தாய் மொழியான தமிழ்வழி கல்வியைத் தான் அமல்படுத்த வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரன் வலியுறுத்தினார்.

மார்க் குறைவு; மாணவி தற்கொலை... இதுவல்ல தீர்வு


             பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், திண்டுக்கல்லில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறையும் என்ற பயத்தில், ஒரு மாணவி தலைமறைவானார்.
 
 

அரசுப் பள்ளிகளில் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும்


              "அரசுப் பள்ளிகளில், 3,711 ஆசிரியர்களும், 1,146 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும், நடப்பு கல்வி ஆண்டில் நிரப்பப்படும்" என பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.

இரத்த குரூப் சான்றிதழ் இருந்தால் மட்டுமே டிசி:புதிய சிக்கலில் பிளஸ் டூ மாணவர்கள்


           பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்று சான்றிதழில் (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்- டிசி) ரத்த குரூப் பற்றி தெரிவிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 
 

ஒன்பதாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல், முப்பருவ கல்வி முறை அமுல்


              மூன்று தொகுதிகளாக, புத்தகங்கள் வழங்கப்படும். மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கவும், கற்கும் திறனை அதிகப்படுத்தவும், இக்கல்வி முறை அமலாகிறது. 
 

பொறியியல் விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடியாது: உயர்கல்வி அமைச்சர்


               "சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாகாததால், அண்ணா பல்கலைக் கழகத்தில் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க முடியாது" என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
 

பிளஸ் 2 தேர்வு: முக்கிய பாடங்களில் 90% மாணவர்கள் தேர்ச்சி


          மொழித்தாள் பாடங்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பாடங்களில், 90 சதவீதத்திற்கும் அதிமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
 

பி.சி., - எம்.பி.சி., கல்வி உதவி தொகை: வருவாய் வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு


            "கல்வி உதவித் தொகை பெறும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினரின் ஆண்டு வருவாய் வரம்பு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்" என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 

3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்


           பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அறிவித்தார். மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப் போட்டி விளையாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 

மாற்றுத் திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்வு


            "ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி வரை பயிலும், மாற்றுத் திறனாளி மாணவர்களின், கல்வி உதவித் தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும்" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த சில ஐயங்களும், TNPTF மாநில பொது செயலாளரின் விளக்கமும்


1. இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு உண்டா?
        இரட்டை பட்டம் பதவியுயர்விற்கு தகுதி சார்ந்து வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளதாலும், அதன் விசாரணை ஜுன் 10ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாலும், அதுவரை பதவியுயர்வு நடத்த மாட்டோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், தற்போதைய அட்டவணையில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு இல்லை. வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு பின்பே இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive