ஐந்தாவது
ஊதியக் குழுவின் காலமான 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளின் தலைமையாசிரியராக பதவியுயர்வு பெற்ற
இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.06.1988 முந்தைய பணிக்காலத்தை தொடக்கப்பள்ளி
தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை/ சிறப்பு நிலை நிர்ணயிக்க விவரம்
கோரியுள்ளதாக அறியப்படுகிறது.
Revision Exam 2025
Latest Updates
நாசா அறிவியல் போட்டி: இந்திய மாணவர்கள் சாதனை
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா சார்பில் நடத்தப்பட்ட, "கிரேட்
மூன்பக்கி ரேஸ்" எனப்படும், அறிவியல் போட்டிகளில், இரு பிரிவுகளில்
பங்கேற்ற இந்திய மாணவர்கள், முதல் பரிசை வென்றுள்ளனர். அத்துடன், இந்திய
மாணவர் வடிவமைத்த வாகனத்திற்கு, சிறப்பு பரிசும் கிடைத்துள்ளது.
ஓவிய கலையில் விருப்பமா? காத்திருக்கிறது அரசு கவின் கலை கல்லூரி
நன்றாக ஓவியம் வரையும் திறன் உடைவர்கள் தங்கள் திறமையை மேலும்
வளர்த்துக் கொள்ள, சென்னை, அரசு கவின் கலை கல்லூரியில் பட்ட படிப்புகள்
காத்திருக்கின்றன.
மே 24ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு
சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி இளங்கலை தேர்வுகள், இம்மாதம், 24ம் தேதி துவங்குகிறது.
அடுத்த கல்வியாண்டு புத்தகங்கள்: பள்ளி வாரியாக அனுப்பும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் அடுத்த கல்வியாண்டில் கல்வி பயிலும்,
எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பினருக்கு பள்ளி வாரியாக இலவச
புத்தங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
2013-14ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு சேர்கை அறிவிப்பு
விண்ணப்பம் விநியோகம் : மே13-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை
விண்ணப்பக்கட்டணம் : பொது: ரூ.600, எஸ்.சி/எஸ்.டி: ரூ. 300
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 3ந்தேதி
விண்ணப்பக்கட்டணம் : பொது: ரூ.600, எஸ்.சி/எஸ்.டி: ரூ. 300
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 3ந்தேதி
இந்தியாவிலேயே முதன்முறையாக "ஏசி" வசதியுடன் நிழற்குடை
இந்தியாவிலேயே முதன்முறையாக, குளிர் சாதன வசதி செய்யப்பட்ட பயணிகள் நிழற்குடை, கும்பகோணத்தில் திறக்கப்பட்டுள்ளது.
31.05.2013 நிலவரப்படி ஆசிரியர் பயிற்றுநர்கள் காலிப் பணியிட விவரம் சேகரிக்க - அனைவருக்கும் கல்வி இயக்கம்
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE / CRTE) 31.05.2013 அன்றைய நிலவரப்படி காலிப் பணியிட விவரம் பாடவாரியாக சேகரிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டார மையங்களும் இன்று மாலைக்குள் காலிப்பணியிட விவரம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பள்ளிகளுக்கு அள்ளி கொடுக்கும் விவசாயி
அரசு பள்ளிகளை பராமரிக்கவும், தரம் உயர்த்தவும்
தேவையான நிதி உதவியை செய்வதில் மேடவாக்கத்தை சேர்ந்த விவசாயி தாராளமாக
செய்து வருகிறார்.
அறிமுகம் - "பாடசாலை - சுயம்வரம்"
பாடசாலை - சுயம்வரம்
Visit Once - www.Padasalai-Suyamvaram.blogspot.in
அன்புள்ள வாசகர்களே,
வணக்கம். கல்விச்செய்திகள் மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு பயன்படும் பல்வேறு Study Materials களும், ஆசிரியர்களுக்குப் பயன்படும் பல்வேறு படிவங்கள், கருத்துருக்கள், போட்டித்தேர்வு வினாத்தாள்கள், துறைத்தேர்வு வினாத்தாள்கள், செயல்முறைகள், அரசாணைகள், தமிழ் எழுத்துருக்கள், RTI தகவல்கள் போன்ற பயனுள்ள பல தகவல்களையும் உடனுக்குடன் நமது பாடசாலை வலைதளத்தில் பதிவேற்றி வருகிறோம்.
தற்போது மேலும் ஒரு புதிய இலவச சேவையாக ஆசிரியர் சமூகத்திற்கு மட்டும் பயனளிக்கும் வகையில் "பாடசாலை-சுயம்வரம்" எனும் புதிய வலைதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தளத்தில் ஆசிரியர் கல்வி பயின்ற அனைத்து வாசகர்களின் சுயவிவரப் படிவமும் (Biodata) தாங்களே நேரிடையாக தொடர்பு கொள்ளும் வகையில் முழுத்தகவல்களுடன் இலவசமாகப் பதிவிடப்படுகிறது. தேவைப்படும் ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி!
என்றும் அன்புடன் - பாடசாலை.
(குறிப்பு: இது ஒரு முழுமையான இலவச சேவையாகும்)
3 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை - தேசிய ஆசிரியர் கல்வி கழகம்
ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தை கட்டாய
பாடமாக்க உத்திர பிரதேச அரச உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல்
போதிய அளவு ஆங்கில பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.
கருணை அடிப்படை வேலை ; உரிமையல்ல: டெல்லி உயர்நீதிமன்றம்
"கருணை அடிப்படையில் வேலை அளிப்பதை, உரிமையாக
கருத முடியாது' என, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனம்
ஒன்றில், பணியாற்றிய தொழிலாளர்கள், ஐந்து பேர், திடீரென இறந்து விட்டனர்.
அவர்களின் வாரிசுகள், கருணை அடிப்படையில் வேலை கேட்டு, அந்த நிறுவனத்தில்
மனு செய்தனர்; மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.