Half Yearly Exam 2024
Latest Updates
அரசு பள்ளிகளுக்கு அள்ளி கொடுக்கும் விவசாயி
அரசு பள்ளிகளை பராமரிக்கவும், தரம் உயர்த்தவும்
தேவையான நிதி உதவியை செய்வதில் மேடவாக்கத்தை சேர்ந்த விவசாயி தாராளமாக
செய்து வருகிறார்.
அறிமுகம் - "பாடசாலை - சுயம்வரம்"
பாடசாலை - சுயம்வரம்
Visit Once - www.Padasalai-Suyamvaram.blogspot.in
அன்புள்ள வாசகர்களே,
வணக்கம். கல்விச்செய்திகள் மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு பயன்படும் பல்வேறு Study Materials களும், ஆசிரியர்களுக்குப் பயன்படும் பல்வேறு படிவங்கள், கருத்துருக்கள், போட்டித்தேர்வு வினாத்தாள்கள், துறைத்தேர்வு வினாத்தாள்கள், செயல்முறைகள், அரசாணைகள், தமிழ் எழுத்துருக்கள், RTI தகவல்கள் போன்ற பயனுள்ள பல தகவல்களையும் உடனுக்குடன் நமது பாடசாலை வலைதளத்தில் பதிவேற்றி வருகிறோம்.
தற்போது மேலும் ஒரு புதிய இலவச சேவையாக ஆசிரியர் சமூகத்திற்கு மட்டும் பயனளிக்கும் வகையில் "பாடசாலை-சுயம்வரம்" எனும் புதிய வலைதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தளத்தில் ஆசிரியர் கல்வி பயின்ற அனைத்து வாசகர்களின் சுயவிவரப் படிவமும் (Biodata) தாங்களே நேரிடையாக தொடர்பு கொள்ளும் வகையில் முழுத்தகவல்களுடன் இலவசமாகப் பதிவிடப்படுகிறது. தேவைப்படும் ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி!
என்றும் அன்புடன் - பாடசாலை.
(குறிப்பு: இது ஒரு முழுமையான இலவச சேவையாகும்)
3 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை - தேசிய ஆசிரியர் கல்வி கழகம்
ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தை கட்டாய
பாடமாக்க உத்திர பிரதேச அரச உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல்
போதிய அளவு ஆங்கில பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.
கருணை அடிப்படை வேலை ; உரிமையல்ல: டெல்லி உயர்நீதிமன்றம்
"கருணை அடிப்படையில் வேலை அளிப்பதை, உரிமையாக
கருத முடியாது' என, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனம்
ஒன்றில், பணியாற்றிய தொழிலாளர்கள், ஐந்து பேர், திடீரென இறந்து விட்டனர்.
அவர்களின் வாரிசுகள், கருணை அடிப்படையில் வேலை கேட்டு, அந்த நிறுவனத்தில்
மனு செய்தனர்; மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு: 9ம் தேதி முதல் விண்ணப்பம்
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள், வரும், 9ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும்
முறை, கட்டணம், இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை, http://www.tnhealth.org,
www.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் பெறலாம்.
பொறியியல் சேர்க்கை: முதல் நாளில் 80,064 விண்ணப்பங்கள் விற்பனை
தமிழகம் முழுவதும், பி.இ., விண்ணப்பம் வினியோகம், நேற்று துவங்கியது.
சென்னை, அண்ணா பல்கலையில், காலை, 6:30 மணிக்கே, மாணவர்கள் குவிந்தனர்.
சென்னை உள்ளிட்ட அனைத்து மையங்களிலும், மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை
வாங்க குவிந்ததால், முதல் நாள், 80,064 விண்ணப்பங்கள் விற்பனை ஆயின.
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் பகுதிநேர வேலை செய்யலாமா?
நான் ஒரு பி.காம்., பட்டதாரி. விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்
துறையில் ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் உண்டு. அதனால், அமெரிக்காவில்
எம்.பி.ஏ., (சந்தைப்படுத்துதல்) படிக்க விரும்புகிறேன். ஐந்தாண்டு பணி
அனுபவம் இருந்தால்தான் அமெரிக்காவில் எம்.பி.ஏ., படிக்க இடம் தருவார்களா?
அப்படியெனில், அங்குள்ள நல்ல பல்கலைக்கழகத்தில் நான் சேருவது எப்படி?
Moblie Calls without Balance
பேலன்ஸ் இல்லாத சமயத்திலும் மொபைலில் Call செய்ய முடியுமா....?
மொபைலில் பேலன்ஸ் இல்லாத தருவாயிலும் எப்படி
போன்கால் செய்வது என்பதன் தகவலை இங்கே பார்க்காலம். அதற்கு குறிப்பிட்ட
எண்கள் கொடுக்கப்படுகின்றன.
ஆசிரியர் தகுதி தேர்வான, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும்' என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த
ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த,ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம், 22
ஆயிரத்து 500 பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 32 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவு - இந்த 32 பேரும் 2015 மார்ச் 31-க்குள் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இறப்பு / இயலாமையால் ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை பெற தற்காலிகமாக அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவு
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்
ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை குறித்து மக்களவையில்
எழுப்பப்பட்ட கேள்வியின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மாண்புமிகு
ஸ்ரீ நமோ நாராயன் மீனா அவர்கள் அளித்த பதில் உரையில், ஏற்கெனவே பழைய
ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய விதிகளின் படியே புதிய
பங்களிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்களில் இறப்பு / இயலாமை
ஆகிய காரணங்களால் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறும் ஊழியர் / ஊழியர்
குடும்பங்களுக்கு பணிக்கொடை தற்காலிகமாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது
என்றும், ஓய்வூதியத்தில் மட்டும் தான் மாற்றம் கொண்டுவரப்பட்டதே தவிர
பணிக்கொடை மற்றும் ஏனைய பலன்களில் எவ்வித மாற்றமும் மத்திய அரசு
செய்யவில்லை என்று நேற்று மக்களவையில் தெரிவித்தார். இது குறித்த மத்திய
அரசு சுற்றறிக்கை எண்.38/41/06-P & PW(A) நாள்.5.5.2009 அன்றைய
தேதியில் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்., பி.இ.
ஆகிய தொழில் படிப்புகளில் சேரும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் (முதல்
தலைமுறை) பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக்
கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விலக்கு அளித்து
வருகிறது.
பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவதில் இழுபறி: இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம் - Dinamalar
தமிழகத்தில் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக
உட்படுத்த வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்
சங்கம் முடிவு செய்துள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று வினியோகம்
நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்,
இன்று (மே 4) முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் பொறியியல் இடங்கள்
இருப்பதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.