புகழ் பெற்ற அறிவியல் எழுத்தாளரும் ரபீந்திரா புரஸ்கார் விருது பெற்றவருமான ஆருப் ரத்தன் பட்டாச்சார்யா காலமானார்.
Half Yearly Exam 2024
Latest Updates
"ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாணவர்கள் சேர்க்கை"
"பொறியியல் கல்லூரிகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர்
சேர்வதற்கான, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம்
கோர்ட்டில், தமிழக அரசு, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த
வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என,
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 20ம் தேதி திறப்பு
மாணவர்களின் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 20ம் தேதி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
8% அகவிலைப்படி உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்
இன்று உத்தரவிட்டார். இதையடுத்து தற்பொழுது 72% ஆக உள்ள அகவிலைப்படியானது
80% ஆக உயர்ந்துள்ளது.
"அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை வரும் ஆண்டு துவங்கும்"
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, ஏ.ஐ.சி.டி.இ.,யின், கொள்கையால்,
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி துவங்க, கால தாமதம் ஏற்படுகிறது, என,
வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
6 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை ஜாமின்ட்ரி பாக்ஸ்: கல்வித்துறை தீவிரம்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் கல்வி பயிலும், ஆறு முதல்
எஸ்.எஸ்.எல்.ஸி., வரையிலான மாணவ, மாணவியருக்கு, "ஜாமின்ட்ரி பாக்ஸ்" வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி மாவட்டம் வாரியாக, பள்ளிக்கல்வித்துறை
சார்பில் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் 6ம் தேதி முதல் விண்ணப்பம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மே 6ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும் - உயர்கல்வித் துறை அமைச்சர்
திறந்த நிலை பல்கலையில் பட்டம்
பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க, கோர்ட் தடை
விதித்துள்ளது,'' என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை
அமைச்சர் முனுசாமி கூறினார்.
பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும்: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எளிதாக ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கெ.விஸ்வநாதன் தெரிவித்தார்.
எழுத்தாளர்களுக்கு கட்டுரைப் போட்டி மதுரை ஏக்தா நிறுவனம் அறிவிப்
சரோஜினி நாயுடு நினைவு பரிசை பெற பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரை வெளிவந்த படைப்பாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த மதுரை உயர்நீதிமன்றம் அறிவுரை
நெல்லை கேடிசி நகரில் குடியிருக்கும் ஆசிரியர்
வையணன் ராமதநாதபுரம் மாவட்டம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில்
முதுகலை பட்டதாரி ஆசிரியராக (உயிரியல்) கடந்த 17,7,12 முதல் பணியாற்றி
வருகிறார்.
அன்று தையல் ஆசிரியை: இன்று மண் சுமக்கிறார் "வயிற்றை கழுவ" கவுரவம் பார்க்காத எலிசபெத்
குஜிலியம்பாறை அருகே, அரசு மேல்நிலை பள்ளியில், தையல் ஆசிரியையாக
பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியை எலிசபெத், பென்ஷன் கிடைக்காததால், நூறு
நாள் வேலைக்கு சென்று வருகிறார். திண்டுக்கல், சாமிமுத்தன்பட்டியை
சேர்ந்தவர், எலிசபெத், 60; திருமணமாகதவர்.
அரசு அலுவலகங்களில் ஒப்புகைச் சீட்டு (ACKNOWLEDGE -MENT) பெறும் வழிமுறைகள்
ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நாம் கடிதம்,
புகார் கடிதம், போன்ற எந்த வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள்
அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகளை பார்ப்போம்.
பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மோசமாக இருப்பதால், பாக்கெட் உணவுகளை வழங்க அரசுக்கு பரிந்துரை
பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின்
கீழ் வழங்கப்படும் உணவுகளை, மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னான்டஸ்
தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.
அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை
மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த இயலும் என்று சென்னை உயர்
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?
"குரூப்-1 தேர்வை எழுதுவதற்கான, வயது வரம்பை,
35ல் இருந்து, 45ஆக அதிகரிப்பது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து,
முடிவை அறிவிப்பார்,'' என, அமைச்சர் முனுசாமி கூறினார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத மெட்ரிக்
பள்ளிகள் குறித்த விபரங்களை பள்ளிகல்வித்துறை இணையதளத்தில் வெளியிட
வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
DTEd 2nd Year Exam starts from June 24th.
2–ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் ஜூன் 24–ந்தேதி தொடங்குகிறது
பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு
பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ,
மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பயிலும்
மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச
புத்தகங்கள், சீருடை, சைக்கிள், புத்தக பை, காலணி போன்ற பல்வேறு பொருட்கள்
வழங்கப்படுகின்றன.