பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ,
மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பயிலும்
மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச
புத்தகங்கள், சீருடை, சைக்கிள், புத்தக பை, காலணி போன்ற பல்வேறு பொருட்கள்
வழங்கப்படுகின்றன.
இரட்டை பட்டப்படிப்பு குறித்த வழக்கு மீண்டும் இடைக்கால தீர்ப்பை இரத்து
செய்ய கோரி மனு செய்யப்பட்டு, வரிசை எண்.26-வது இடத்தில் நீதியரசர்கள்
K.N.பாஷா மற்றும் S.நாகமுத்து ஆகயோரின் முன்னிலையில் இன்று (30.04.2013) "சிறப்பு வழக்கு" (SPECIALLY ORDERED CASE) ஆக விசாரணை நடைப்பெற்றது.
நாங்கள்
காரைக்கால் பகுதியிலிருந்து சமீபத்தில்தான் நாகப்பட்டினம் குடிபெயர்ந்து
இருக்கிறோம். எம்.எஸ்சி., பி.எட் வரையிலான என்னுடைய பள்ளி, கல்லூரிப்
படிப்புகளை புதுவை அரசின் கீழ் முடித்திருக்கிறேன். தற்போது தமிழக அரசின்
ஆசிரியர் பணிக்கான டி.இ.டி தேர்வு எழுத முடியுமா? டி.இ.டி தேர்வெழுத என்ன
மாதிரியான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்?''
பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குநர், நேஷனல் இன்ஸ்டிட்யூட், மதுரை:
இந்த 2013ம் ஆண்டிற்கான கேட் தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இதை அறிவித்துள்ளன.
ஓய்வு பெறும் வயதை எட்ட, இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பெண்ணுக்கு,
அரசுப் பணி கிடைத்துள்ளது. அவர், சென்னை மாநகராட்சியில், டைபிஸ்ட் பணியில்
நேற்று சேர்ந்தார்.சென்னை மாநகராட்சியில், 3,189 பணியிடங்களை நிரப்ப, அரசு
அனுமதித்தது.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய இளநிலை,
முதுகலை பட்டப்படிப்பு தேர்வுகள், சான்றிதழ் படிப்புகள் தேர்வு
ஆகியவற்றின் முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) இணையதளத்தில்
வெளியிடப்படுகிறது.
பள்ளி படிப்பை, இடையில் நிறுத்திய குழந்தைகள்
மற்றும் பள்ளிக்கே செல்லாமல் உள்ள குழந்தைகள், 51 ஆயிரம் பேர் இருப்பது,
கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களை, வரும் கல்வி ஆண்டில், பள்ளியில்
சேர்க்க கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.
குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக
செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக
அரசு, உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா தலைநகர் புபனேஷ்வரிலுள்ள இயற்பியல் கல்வி
நிறுவனம், ஒரு சுயாட்சி ஆராய்ச்சி நிறுவனமாகும். அணு ஆற்றல் துறை மற்றும்
ஒடிசா மாநில அரசு ஆகிய இரண்டும் இணைந்து இதற்கு நிதியளிக்கின்றன. இக்கல்வி
நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1972ம் ஆண்டு நிறுவப்பட்டது.
புதிதாக துவங்கப்படும் மற்றும் புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள், மே 30க்குள் அங்கீகாரம் பெறுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரட்டைப்
பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற
பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இந்த இடைக்கால தீர்ப்பால் பாதிக்கப்படும் 3
வருட பட்டப்படிப்பை படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால்,
மாநில அரசு ஊழியர்களும்,எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு
ஊழியர்களுக்கு, ஆண்டு தோறும் இரு முறை அகவிலைப்படி உயர்வு (டி.ஏ.,)
வழங்கப்படும்
* இவ்வாண்டு மாறுதல் / பதவி உயர்வுக்கான
கலந்தாய்வு ஆன்லைனிலும் நடக்கலாம் அல்லது வழக்கமான முறையிலும் நடக்கலாம்.
எப்படியாயினும் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை உரிய முறையில்
சமர்ப்பிப்பதும் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியலில் தகுதியானவர்களின்
பெயர்கள் வரிசை முறைப்படி உள்ளதைச் சரிபார்த்துக் கொள்வதும் ஆசிரியர்களின்
கடமையாகும்.
"இரட்டைப் பட்டம் செல்லாது" என்று
விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால
தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 3 வருடம் படித்த ஆசிரியர்கள்
ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர். அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப்
தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று
விசாரணைக்கு வருகிறது.
உலகின் உயரிய விருதாக கருதப்படும், "நோபல்" பரிசுடன் வழங்கப்படும்
தொகையை விட, மூன்று மடங்கு அதிக தொகை கொண்டது, "ரஷ்ய நோபல்" பரிசு. இந்த
ஆண்டில் தான், இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளுக்கு சொந்தமான நிலங்களுக்கு, பட்டா வாங்கும் முயற்சியில்,
மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டா
இல்லாததால், இதுவரை திருப்பி அனுப்பப்பட்ட நிதியை, இதன் மூலம் தக்க வைக்க
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மாணவர்களிடம் சட்ட விரோதமாக கட்டண கொள்ளையடிக்கும் கல்லூரிகள் மீது
கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என "மூட்டா"
பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவின் கல்வி முறை ஒரு தனி நபரின் ஆளுமைத் தன்மையை
மேம்படுத்துவதற்கென்று எந்தவித பிரத்யேக முயற்சியையும் செய்யும் விதத்தில்
வடிவமைக்கப்படவில்லை. எனவே, மென்திறன்கள் குறித்த விழிப்புணர்வை
பெறுவதுதான் நிறுவனத்தில் அடுத்த நிலைகளை எட்டுவதற்கு உதவும் என்பது
வல்லுனர்களின் கருத்தாகும்.
"கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி, நாட்டின்
வளர்ச்சிக்கான முதலீடு ஆகும்," என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர்,
பல்லம் ராஜூ பேசினார்.
காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரியில், உயர் கல்வியில்
அந்நிய முதலீடு, உள்நாட்டு தனியார் முதலீடு, அரசு கல்லூரிகளின் இன்றைய
நிலைப்பாடு குறித்த மாநில கருத்தரங்கம் நடந்தது.
"சுட்டெரிக்கும் வெயிலால் தாகத்தில்
தவிக்கும் பறவைகளுக்கு, தண்ணீர் கொடுத்து உதவுங்கள்," என, இயற்கை
ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப்பள்ளியில், உலக
புத்தக தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.
குணசேரன், ஆர்.டி.ஓ., மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பகவதி முன்னிலை
வகித்தனர்.
மாநகராட்சி தொழிற்பயிற்சி மையத்தில் படிக்கும்
மாணவர்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல், இலவசமாகப் பேருந்து பயண அட்டை
வழங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மதுரை விவசாயக் கல்லூரி வளாகத்தில் உள்ள மனையியல்
கல்லூரியில், 7 - 12 வயதுள்ள மாணவர்களுக்கு, சத்தான, ஆரோக்கிய உணவுகள்
குறித்த பயிற்சி, மே 6,7ல் நடத்தப்படுகிறது.
சிங்கப்பூரில் நடந்த ஆங்கில உச்சரிப்பு போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர், "சாம்பியன்ஷிப்" பட்டத்தை வென்றுள்ளார்.
"பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை கூறுவது தான், அகில இந்திய தொழில்நுட்பக்
கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் பணி. பல்கலைகளால் அங்கீகாரம் பெற்ற
கல்லூரிகள், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., பாடங்களுக்கான அங்கீகாரம்
பெறுவதற்கு, தொழில்நுட்பக் கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை"
என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
"உலக அறிவை வளர்த்துக் கொள்ள, பொதுமக்கள் அனைவரும், நூலகத்தை
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,' என, அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேசினார்.
பள்ளிக்கல்வி
- த.ப.க.சா.நி.பணி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வின்றி
பணியாற்றி 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடைநிலை (5வது
ஊதியக்குழு காலகட்டத்தில்) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள
தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் படி தொடக்கப்பள்ளி
தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை / சிறப்பு நிலை ஊதியம் வழங்குதல் -
உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட உள்ள மறு ஆய்வு / சிறப்பு விடுப்பு மனுவில்
வழங்கப்படும் தீர்ப்பிற்குட்பட்டு ஆணை வெளியீடு.
கல்வி கற்றவர்களின் எண்ணிக்கைதான் ஒரு நாட்டு
வளர்ச்சியின் அளவுகோல். கடந்த பத்து ஆண்டுகளில் தொடக்கக் கல்வியிலிருந்து
உயர் கல்விவரை குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே இதற்குச் சான்று.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க
ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு
என்.டி.வெங்கடாச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு வேலைவாய்ப்புகளில், எம்.டெக்., -
சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பட்டம், எம்.இ., -
சுற்றுச்சூழல் பொறியியல் பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என, தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண், ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை : தமிழக அரசு பரிசீலனை
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத்
தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து
தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர்
பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.