Revision Exam 2025
Latest Updates
மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள்
* இவ்வாண்டு மாறுதல் / பதவி உயர்வுக்கான
கலந்தாய்வு ஆன்லைனிலும் நடக்கலாம் அல்லது வழக்கமான முறையிலும் நடக்கலாம்.
எப்படியாயினும் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை உரிய முறையில்
சமர்ப்பிப்பதும் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியலில் தகுதியானவர்களின்
பெயர்கள் வரிசை முறைப்படி உள்ளதைச் சரிபார்த்துக் கொள்வதும் ஆசிரியர்களின்
கடமையாகும்.
"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
"இரட்டைப் பட்டம் செல்லாது" என்று
விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால
தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 3 வருடம் படித்த ஆசிரியர்கள்
ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர். அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப்
தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று
விசாரணைக்கு வருகிறது.
உலகின் கோடீஸ்வர பேராசிரியர்களில் ஒருவர்
உலகின் உயரிய விருதாக கருதப்படும், "நோபல்" பரிசுடன் வழங்கப்படும்
தொகையை விட, மூன்று மடங்கு அதிக தொகை கொண்டது, "ரஷ்ய நோபல்" பரிசு. இந்த
ஆண்டில் தான், இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி நிலங்களுக்கு பட்டா பெற முயற்சி: நிதி திரும்புவதை தடுக்க திட்டம்
அரசு பள்ளிகளுக்கு சொந்தமான நிலங்களுக்கு, பட்டா வாங்கும் முயற்சியில்,
மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டா
இல்லாததால், இதுவரை திருப்பி அனுப்பப்பட்ட நிதியை, இதன் மூலம் தக்க வைக்க
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கட்டண கொள்ளையடிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்
மாணவர்களிடம் சட்ட விரோதமாக கட்டண கொள்ளையடிக்கும் கல்லூரிகள் மீது
கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என "மூட்டா"
பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பயின்றதை பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே இலக்கை அடைய முடியும்
இந்தியாவின் கல்வி முறை ஒரு தனி நபரின் ஆளுமைத் தன்மையை
மேம்படுத்துவதற்கென்று எந்தவித பிரத்யேக முயற்சியையும் செய்யும் விதத்தில்
வடிவமைக்கப்படவில்லை. எனவே, மென்திறன்கள் குறித்த விழிப்புணர்வை
பெறுவதுதான் நிறுவனத்தில் அடுத்த நிலைகளை எட்டுவதற்கு உதவும் என்பது
வல்லுனர்களின் கருத்தாகும்.
கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு
"கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி, நாட்டின்
வளர்ச்சிக்கான முதலீடு ஆகும்," என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர்,
பல்லம் ராஜூ பேசினார்.
அந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது
காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரியில், உயர் கல்வியில்
அந்நிய முதலீடு, உள்நாட்டு தனியார் முதலீடு, அரசு கல்லூரிகளின் இன்றைய
நிலைப்பாடு குறித்த மாநில கருத்தரங்கம் நடந்தது.
தாகத்தில் தவிக்கும் பறவைகள்; தண்ணீர் கொடுத்து உதவுங்கள்
"சுட்டெரிக்கும் வெயிலால் தாகத்தில்
தவிக்கும் பறவைகளுக்கு, தண்ணீர் கொடுத்து உதவுங்கள்," என, இயற்கை
ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாணவர்களிடம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர் வைகைச் செல்வன்
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப்பள்ளியில், உலக
புத்தக தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.
குணசேரன், ஆர்.டி.ஓ., மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பகவதி முன்னிலை
வகித்தனர்.
தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
மாநகராட்சி தொழிற்பயிற்சி மையத்தில் படிக்கும்
மாணவர்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல், இலவசமாகப் பேருந்து பயண அட்டை
வழங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு பயிற்சி
மதுரை விவசாயக் கல்லூரி வளாகத்தில் உள்ள மனையியல்
கல்லூரியில், 7 - 12 வயதுள்ள மாணவர்களுக்கு, சத்தான, ஆரோக்கிய உணவுகள்
குறித்த பயிற்சி, மே 6,7ல் நடத்தப்படுகிறது.
ஆங்கில உச்சரிப்பு போட்டி: இந்திய மாணவருக்கு பரிசு
சிங்கப்பூரில் நடந்த ஆங்கில உச்சரிப்பு போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர், "சாம்பியன்ஷிப்" பட்டத்தை வென்றுள்ளார்.
ஏ.ஐ.சி.டி.இ.,யின் பணி என்ன? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
"பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை கூறுவது தான், அகில இந்திய தொழில்நுட்பக்
கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் பணி. பல்கலைகளால் அங்கீகாரம் பெற்ற
கல்லூரிகள், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., பாடங்களுக்கான அங்கீகாரம்
பெறுவதற்கு, தொழில்நுட்பக் கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை"
என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
"அறிவை வளர்க்க நூலகங்களை பயன்படுத்த வேண்டும்"
"உலக அறிவை வளர்த்துக் கொள்ள, பொதுமக்கள் அனைவரும், நூலகத்தை
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,' என, அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேசினார்.
GO issued.
பள்ளிக்கல்வி - த.ப.க.சா.நி.பணி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வின்றி பணியாற்றி 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடைநிலை (5வது ஊதியக்குழு காலகட்டத்தில்) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் படி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை / சிறப்பு நிலை ஊதியம் வழங்குதல் - உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட உள்ள மறு ஆய்வு / சிறப்பு விடுப்பு மனுவில் வழங்கப்படும் தீர்ப்பிற்குட்பட்டு ஆணை வெளியீடு.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க
ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு
என்.டி.வெங்கடாச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
TET - Marks Relaxation by Community wise soon?
வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண், ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை : தமிழக அரசு பரிசீலனை
Social Science BT's Request
சமூக அறிவியல் பாடத்திற்கும் வாரத்திற்கு 7 பாடவேளைகள் வீதம் ஒதுக்கிதந்து சம அந்தஸ்து வழங்க கோரி தருமபுரி மாவட்ட சமூக அறிவியல் பட்டதாரி உதவி ஆசிரியர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
New Admission Works starts on 29.05.2013 in High & Higher Secondary Schools.
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிக்கு அருகிலுள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் நர்சரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களை 29.05.2013 அன்றே பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் அளித்து மறுநாள் 30.05.2013 அன்று பெற்றோர் அனுமதியுடன் அம்மாணவர்களை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
1,400 புதிய பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற கவுன்சலிங் : பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
2013-14ஆம் கல்வியாண்டில் சுமார் 1,400
பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் புதிதாக உருவாகும் நிலையில் ஒளிவுமறைவின்றி
கலந்தாய்வு நடத்தி சொந்த மாவட்டத்தில் பணிபுரிய தங்களுக்கு வாய்ப்பளிக்க
வேண்டும் என வெளி மாவட்டங்களில் காத்திருக்கும் ஆசிரியர்கள்
எதிர்பார்க்கின்றனர். நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்விப்பணிகள் இம்மாத
இறுதியுடன் நிறைவு பெறுகின்றன.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்
ஒரே கோரிக்கையை வலியுறுத்தி, மே 4 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்க இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் SSTA சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில்....
இன்டெர்நெட் ஃபில் அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த .....
இன்டெர்நெட் பில் அதிகம் ஆகிறதா ? சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜிபி ,1 ஜிபி .500 எம்பி போட்டு பயன்படுத்துவார்கள் அது எப்போது முடியும் ? மீதம் எவ்வளவு உள்ளது ? என்று தெரியாமல் பயந்து... பயந்து ....பயன்படுத்துவார்கள் இனி அந்த பயம் வேண்டாம்
மூளையின் வலிமைக்கு வெள்ளரிக்காய்
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும்.
10th & 12th Result Date Announced.
+2 Result - May 9 = Time: 10.00 a.m
10th Result - May 31 = Time: 9.15 a.m
Tamil Nadu Govt Announced
மே 9ல் பிளஸ் 2 ரிசல்ட்- மே 31ல் 10ம் வகுப்பு ரிசல்ட்: தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 9-ந் தேதியன்றும்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 31-ந்
தேதியன்றும் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான "நெட்"
தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண்
பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும்
என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.