அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க
ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு
என்.டி.வெங்கடாச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
TET - Marks Relaxation by Community wise soon?
வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண், ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை : தமிழக அரசு பரிசீலனை
Social Science BT's Request
சமூக அறிவியல் பாடத்திற்கும் வாரத்திற்கு 7 பாடவேளைகள் வீதம் ஒதுக்கிதந்து சம அந்தஸ்து வழங்க கோரி தருமபுரி மாவட்ட சமூக அறிவியல் பட்டதாரி உதவி ஆசிரியர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
New Admission Works starts on 29.05.2013 in High & Higher Secondary Schools.
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிக்கு அருகிலுள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் நர்சரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களை 29.05.2013 அன்றே பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் அளித்து மறுநாள் 30.05.2013 அன்று பெற்றோர் அனுமதியுடன் அம்மாணவர்களை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
1,400 புதிய பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற கவுன்சலிங் : பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
2013-14ஆம் கல்வியாண்டில் சுமார் 1,400
பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் புதிதாக உருவாகும் நிலையில் ஒளிவுமறைவின்றி
கலந்தாய்வு நடத்தி சொந்த மாவட்டத்தில் பணிபுரிய தங்களுக்கு வாய்ப்பளிக்க
வேண்டும் என வெளி மாவட்டங்களில் காத்திருக்கும் ஆசிரியர்கள்
எதிர்பார்க்கின்றனர். நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்விப்பணிகள் இம்மாத
இறுதியுடன் நிறைவு பெறுகின்றன.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்
ஒரே கோரிக்கையை வலியுறுத்தி, மே 4 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்க இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் SSTA சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில்....
இன்டெர்நெட் ஃபில் அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த .....
இன்டெர்நெட் பில் அதிகம் ஆகிறதா ? சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜிபி ,1 ஜிபி .500 எம்பி போட்டு பயன்படுத்துவார்கள் அது எப்போது முடியும் ? மீதம் எவ்வளவு உள்ளது ? என்று தெரியாமல் பயந்து... பயந்து ....பயன்படுத்துவார்கள் இனி அந்த பயம் வேண்டாம்
மூளையின் வலிமைக்கு வெள்ளரிக்காய்
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும்.
10th & 12th Result Date Announced.
+2 Result - May 9 = Time: 10.00 a.m
10th Result - May 31 = Time: 9.15 a.m
Tamil Nadu Govt Announced
மே 9ல் பிளஸ் 2 ரிசல்ட்- மே 31ல் 10ம் வகுப்பு ரிசல்ட்: தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 9-ந் தேதியன்றும்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 31-ந்
தேதியன்றும் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான "நெட்"
தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண்
பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும்
என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசு
சத்துணவுக்கான மானியத்தை, தமிழக அரசு 69.50 பைசாவிலிருந்து ரூ.1.30
உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு, 54 ஆயிரம் மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது.
பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு
பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச்
சேர்ந்த மாணவர்கள், கட்டணமின்றி, விடுதிகளில் தங்கி படிக்க, 178 கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு
எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பார்மசி மாணவர்கள் பாரம்பரிய மருத்துவமும் கற்க அறிவுரை
"பாரம்பரிய மருத்துவத்தை கற்றுக்கொள்ள பார்மசி மாணவர்கள் முன்வர வேண்டும்" என, கல்லூரி விழாவில் அறிவுறுத்தப்பட்டது.
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய
மாவட்டங்களில், பிரமலை கள்ளர் வகுப்பினர் அதிகளவில் வசிக்கின்றனர்.
கல்லூரி விடுதி மாணவர்களுக்கு உதவித் தொகை உயர்வு
கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கான
உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க மொபைல் கவுன்சிலிங் வழங்க 10 வேன்கள் வாங்கப்பட்டுள்ளது.
தற்போதைய கல்வி கற்கும் சூழல் மாணவர்களுக்கு மன
அழுத்தத்தை தரக்கூடியதாக அமைந்துள்ளது. மாணவர்கள் உளவியல் ரீதியாக
பாதிக்கப்படுகிறார்கள். அதனால் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கி ஆரோக்கியமாக கல்வி கற்க வழிவகுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
CEO's Meeting
பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் 25.04.2013ல் தொடங்கி 30.04.2013 வரை நடைபெறுகிறது
அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்
வரும், 2013-14ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்
பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,
மாணவியருக்காக, 9.67 லட்சம், ஜியாமெட்ரி பெட்டிகளை கொள்முதல் செய்ய, பள்ளி
கல்வித் துறை, டெண்டர் வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு
"எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான
மதிப்பெண் தர வரிசை பட்டியல், ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும்" என,
மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பொது கலந்தாய்வு எப்போது? கல்லூரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
"கல்லூரி ஆசிரியர்களுக்கான, இட மாற்ற பொது கலந்தாய்வு தேதியை, உடனே
அறிவிக்க வேண்டும்" என, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
விடுத்துள்ளது.
கோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், கோடை கால பயிற்சி
முகாம் துவங்குகிறது. மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்க்க, தமிழ்நாடு
அறிவியல் தொழில்நுட்ப மையம், பயிற்சிகளை நடத்துகிறது.
மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி
தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160
விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும்
இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சு திறனை வளர்க்க, ஆங்கில பேச்சு
பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடத்த, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
முடிவு செய்தது.
குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29ல் கவுன்சிலிங்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு,
இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, இம் மாதம் 29ம் தேதி கவுன்சிலிங்
நடக்கிறது.