Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பாலிடெக்னிக்குகளில் 579 புதிய ஆசிரியர் பணியிடங்கள்


              அரசு பாலிடெக்னிக்குகளில், 579 ஆசிரியர்கள் பணியிடங்களை உருவாக்கி, அரசு உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: இன்று அமைச்சரவை முடிவு - DINAMALAR


               மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்ய உள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த உள்ளது.
 
 

தொடக்க கல்வி பட்டயதேர்வு (D.El.Ed) விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கலாம்

 Click Here 4 DOWNLOAD APPLICATION  HERE...

              "தொடக்க கல்வி பட்டயத்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்," என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்தார்.
 
 

அகவிலைப்படி உயர்வு தாமதம், மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு ஏப்ரல் 23ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு


            இது குறித்து மத்திய அரசு ஊழியர் மற்றும் பணியாளர்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் திரு. K.K.N குட்டி அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில்  4வது ஊதிய குழு அறிவிப்பின் மூலம் 1986 முதல் 6 மாதத்திற்கு ஒரு முறை மார்ச் மற்றும் செப்டம்பரில் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்படும். இதை எக்காரணத்தை கொண்டும் இழக்க நாங்கள் விரும்பவில்லை, எனினும் எந்தவித அறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை.

8% அகவிலைப் படி உயர்வு 22.04.2013 தேதிக்கு முன் அறிவிக்க வாய்ப்பில்லை என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


            மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2013 மாத முதல் வழங்க வேண்டிய 8% அகவிலைப்படி உயர்வானது, மத்திய நிதி அமைச்சரின் வருகைக்கு பின் அறிவிக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
 

டி.என்.பி.எஸ்.சி., பாடத்திட்டங்கள் மீண்டும் மாற்றம்


              டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், மீண்டும் மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-4 தேர்வில், தமிழ் மொழிக்கான கேள்விகள் எண்ணிக்கை, முன்பு இருந்த படியே 100 ஆகவும், வி.ஏ.ஓ., தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான கேள்விகள் 30ல் இருந்து, 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
 

கிருஷ்ணகிரி மாவட்டம் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் சார்பில்விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம்

               புதன்  கிழமை (17.02.2013) காலை 9.00 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம்  அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்கழகத்தின் சார்பில்  விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.




முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 1591 பேர், பணி நியமனத்துக்கு அரசு அனுமதி


          தமிழகத்தில் புதியதாக 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரப்படி, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப, கூடுதலாக முதுகலையாசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.
 
 

பிளஸ் 2 கணிதம்: போனஸ் மதிப்பெண் இல்லை: தேர்வுத் துறை விளக்கம்


            பிளஸ் 2 கணிதத் தேர்வு புளூ பிரின்ட் அடிப்படையில் இருந்ததால் விடைத்தாள் மதிப்பீட்டில் இலவச மதிப்பெண் எதுவும் வழங்கப்படவில்லை என்று அரசுத் தேர்வுத் துறை கூறியுள்ளது.
 
 

பொறியியல் படிப்பு - விடைகாண வேண்டிய கேள்விகள்


            பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரை அழைத்து, நீ எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்புகிறாய் என்று கேட்டால், ஒன்று டாக்டர் அல்லது இன்ஜினியர் அல்லது ஐ.ஏ.எஸ்., ஆகிய மூன்றில் ஏதேனுமொன்றை சொல்வார். இந்த மூன்றை தாண்டிதான் வேறு அம்சங்களை பெரும்பாலான மாணவர்கள் சிந்திக்கிறார்கள்.

மாணவர்களுக்கு திருப்பூரில் கட்டுரை போட்டி


          திருப்பூரில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவையொட்டி, மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.


தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!


1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.


அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை


               அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை அளிக்கப்படும் என சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப்படும் எனவும், ஞாயிற்றுக்கிழமைக்கான உணவு கெட்டுப் போகாமல் சனிக்கிழமையன்றே வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
 

ஒரு கோடி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை


               வரும் ஜூன் 3ம் தேதி, பள்ளிகள் திறந்ததும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒரு கோடி மாணவ, மாணவியர்களுக்கு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் ஒரு, "செட்" சீருடை ஆகியவற்றை வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன.

பெண்கள் உயர்ந்த பதவி வகித்து சொந்த காலில் நிற்க வேண்டும்


              "ஒவ்வொரு பெண்ணும் கல்வி பயின்று மிக உயர்ந்த பதவி வகித்து சொந்தக் காலில் நிற்கும் வகையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்," என ஐ.ஜி., சைலேந்திரபாபு கல்லூரி விழாவில் பேசினார்.
.
 

பாழடைந்த பள்ளிகளுக்கு புதிய கட்டடம் உறுதித்தன்மை ஆய்வு செய்ய உத்தரவு


            அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு அறிவுறுத்தியுள்ளது. பழைய பள்ளி கட்டடங்களின், உறுதி தன்மையை ஆராயும் பணி விரைவில் துவங்கப்படுகிறது.
 
 

சிவன்மலையில் பென்சில் வைத்து பூஜை: பள்ளிக்கல்வி சிக்கலை சந்திக்குமா?



           சிவன்மலை முருகன் கோவிலில், ஆண்டவர் உத்தரவுப்படி, பென்சில் வைத்து பூஜை நடக்கிறது. இதனால், பள்ளிக்கல்வி சிறப்பானதாகவோ அல்லது பெரும் சிக்கலையோ சந்திக்க நேரிடும் என, சிவன் மலை முருக பக்தர்கள் தெரிவித்தனர்.



ஜூலை 1ல் வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு



             தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 2013-14ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை முதல் தேதி துவங்குகிறது. இக்கல்வியாண்டில் 10 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பல்கலை துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.



அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் 8.8%ல் இருந்து 8.7%ஆக குறைப்பு


               2013-14ஆம் நிதியாண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
 

இந்தியாவில் உள்ள சாதிகளின் பட்டியல்


ஆதிதிராவிடர் பட்டியல்

1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் முடிவு


            தமிழகம் முழுவதும், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வை 8.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இவர்களது விடைத்தாள் திருத்தம் பணி, மார்ச் 28 முதல் 55 மையங்களில் துவங்கியது.

விடைத்தாள்கள் மாயமாவதை தடுக்க 8ம் வகுப்பு தனித்தேர்வில் புதிய நடைமுறை - Paper News


           பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தைத் தொடர்ந்து, 8ம் வகுப்பு தனித் தேர்வர்களின் விடைத்தாளர்களை, தேர்வு மைய பொறுப்பாளர், விடைத்தாள்கள் திருத்தும் மையத்திற்கு, நேரடியாக கொண்டு வந்து, ஒப்படைக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை, உத்தரவிட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம் இழுபறி - நாளிதழ் செய்தி


            அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அரசாணை வெளியிட்டும், தேர்வு பணிகள் துவங்குவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
 
 

அறிவுசார் பூங்கா திட்டத்தை தரமணிக்கு மாற்ற ஆலோசனை: பள்ளி கல்வித் துறை முடிவு


            கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் கோட்டூர்புரம் நூலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, "அறிவுசார் பூங்கா" கட்டடத்தை, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் கட்டுவதற்கு பதிலாக, தரமணியில் கட்டுவது குறித்து, பள்ளி கல்வி துறை, ஆலோசித்து வருகிறது. டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டடங்களை இடித்தால், பழமை வாய்ந்த பல கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

11 ஆயிரம் அரசு அலுவலர் குடியிருப்புகள் சீரமைக்க நடவடிக்கை


                தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் வீட்டுவசதி தொடர்பான மான்‌ய கோரிக்கைக்கு பதி்ல் அளித்து அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியது, ரூ. 25 கோடியில், 27 மாவட்டங்களில் 11 ஆயிரத்தது 327 அரசு அலுவலர்கள் குடியிருப்புகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 
 

பொதுத் தேர்வு முடிவுகள் இனி அரசு இணையதளங்களில் மட்டுமே


              தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

சென்னைப் பல்கலை முதுகலை தேர்வு: விண்ணப்பிக்க 29ம் தேதி கடைசி நாள்


            சென்னைப் பல்கலை தொலை நிலை கல்வியில் வழங்கப்படும், முதுகலை பட்ட படிப்பு தேர்வுக்கு, வரும், 29ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

"மலை'யளவு பிரச்னை...


           நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கியுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சீரமைக்க, தமிழக அரசு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியைத்  தனிஅலுவலராக நியமித்ததும், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத் துணை

மே மாதத்துக்கும் ஊதியம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை


               அரசுப்பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிவோர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை மே மாதத்துக்கும் வழங்க வேண்டும் என்று தொகுப்பூதியம் பெறும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

கணிதம் நிஜமாகவே இனித்தது! - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்துக்கு 10 மார்க் போனஸ்


             பத்தாம் வகுப்பு கணித பாட தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 10  மதிப்பெண்  கூடுதலாக வழங்க ( Grace Mark ) பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive