பெட்ரோல் விலை மதிப்புக் கூட்டு வரி தவிர்த்து,
லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது. இந்த விலைக் குறைப்பு, இன்று
நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
திருச்சிக்கு ஏப்.16-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி
ஏப்.16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது
தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள தகவலில்,
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு தேரோட்டம்
நடக்கவிருப்பதையொட்டி, வரும் ஏப்.16-ம் தேதி, மாவட்டத்திற்கு உள்ளூர்
விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
CTET சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு
CTET சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு
மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை ஆசிரியர்களாகப் பணியில் சேர சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வை எழுதுவதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது
ஐ.நா.சபையை அசர வைத்த சென்னை மாணவி
ஐ.நா.சபையை அசர வைத்த சென்னை மாணவி
ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறார் பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவி சொர்ணலட்சுமி
மாணவன் மனநிலை பாதித்த விவகாரம்: திண்டிவனம் பள்ளியில் விசாரணை நடத்தப்படும் தமிழக அரசு தகவல்னநிலை பாதித்த விவகாரம்: திண்டிவனம் பள்ளியில் விசாரணை நடத்தப்படும் தமிழக அரசு தகவல்
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த 12–ம் வகுப்பு மாணவன் விநாயகத்தை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியர் ஒருவர் தலையில் அடித்ததால் படுகாயம் அடைந்து மனநிலை பாதிக்கப்பட்டதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், அந்த மாணவனையும், சம்பந்தப்பட்டவர்களையும் விசாரிக்க கடந்த 10–ந்தேதி ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?
மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், புதிய ஆசிரியர்களை, மே மாதத்திற்குள் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், காலியாக உள்ள, 20 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்தகட்ட ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்துவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், டி.ஆர்.பி., மவுனம் காத்து வருகிறது.
12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு NCERTஆல் 18 & 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் , சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் 250 தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NCERTஆல் 2013 ஏப்ரல் 18 & 19ஆம் தேதி தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு நடைபெற உள்ளது.
பள்ளி அளவில் நடை பெறும் போட்டிதேர்வுகளும் விவரங்களும்.
பள்ளி அளவில் பலவித போட்டி தேர்வுகளும் அதற்கு ஸ்காலர்ஷிப்களும் உள்ளன. பல பள்ளிகள் அதற்காக மாணவர்களை தயார்
செய்து அனுப்புகின்றன. ஆனால் பல மாணவர்கள் அதை பற்றி தெரியாததால் அதன்
மூலம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் மாணவர்கள் கூட எப்படி கலந்து கொளவது
என்று அறியாததால் நல்ல வாய்ப்புகளை இழக்கின்றனர். இதில் முடிந்தவரை போட்டி
தேர்வுகளின் விவரங்களும் அதன் இணையதள முகவரியும் தொகுத்து இருக்கிறேன்.
மலைவாழ் மக்கள் கல்வி பெற "இக்னோ" புதிய திட்டம்
"மலைவாழ் மக்களிடம், உயர்கல்வியை கொண்டு செல்லும் வகையில், மழைவாழ்
பகுதியில், தொலைதூரக் கல்வி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, இக்னோ
சென்னை மண்டல இயக்குனர் அசோக்குமார் கூறினார்.
அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் (2013-14) சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
1.துவக்க/ நடுநிலைப்பள்ளி மாணவர்களை முழுமையாக உரிய வகுப்புகளில் சேர்த்தல்.
2. 14 வகை நலத்திட்டங்களை அதன் நன்மைகளை மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு விளக்கி சேர்க்கையை கூட்டுதல்.
தேர்வு பணியின் போது ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மட்டுமே அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குனர்.
பொதுத் தேர்வு நடைபெறும் காலங்களிலும், விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் போதும் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பது மற்றும் பிற பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். மேலும் தேவைப்பட்டால் ஈட்டிய விடுப்பு மட்டுமே எடுக்கலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
CPS பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 13.04.2013 இன்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அமராவதி ஹாலில் (A/C) காலை 09.00 மணியளவில்
"ஓய்வூதியம் - ஒரு கனவோ ? , கானல் நீரோ ?" என்ற தலைப்பில் புதிய தன்
பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை
குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. இதில் ஓய்வூதிய
வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின்
பயனற்ற தன்மை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து
குறித்து விரிவாக விளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்க கேள்வி -
பதில் விவாதங்களும் நடைபெற இருக்கின்றன.
சி.பி.எஸ்.இ., மேம்பாட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றம்
சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல், ஒரு அதிர்ச்சி
காத்திருக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், இம்ப்ரூவ்மென்ட்
மற்றும் கம்பார்ட்மென்ட் தேர்வுகளை எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கையை,
வாரியம் குறைக்க முடிவு செய்துள்ளது.
போதிய மாணவர்கள் இல்லை - விற்பனைக்கு வரும் தனியார் கல்லூரிகள்
தமிழகத்தில், குறிப்பாக கோவை பிராந்தியத்தில், பல கல்லூரிகள் விற்பனை
செய்யப்படவுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பொறியியல் கல்லூரிகள். மாணவர்
பற்றாக்குறையே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2012-13 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு
தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க/
நடுநிலைப்பள்ளிகளில் 2012-13 ஆண்டிற்கான இடைநிலை / பட்டதாரி
ஆசிரியர் காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட
விவரங்களை உரிய படிவத்தில் 12.04.2013க்குள் அனுப்ப மாவட்ட தொடக்கக்கல்வி
அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.