Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளி அளவில் நடை பெறும் போட்டிதேர்வுகளும் விவரங்களும்.
பள்ளி அளவில் பலவித போட்டி தேர்வுகளும் அதற்கு ஸ்காலர்ஷிப்களும் உள்ளன. பல பள்ளிகள் அதற்காக மாணவர்களை தயார்
செய்து அனுப்புகின்றன. ஆனால் பல மாணவர்கள் அதை பற்றி தெரியாததால் அதன்
மூலம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் மாணவர்கள் கூட எப்படி கலந்து கொளவது
என்று அறியாததால் நல்ல வாய்ப்புகளை இழக்கின்றனர். இதில் முடிந்தவரை போட்டி
தேர்வுகளின் விவரங்களும் அதன் இணையதள முகவரியும் தொகுத்து இருக்கிறேன்.
மலைவாழ் மக்கள் கல்வி பெற "இக்னோ" புதிய திட்டம்
"மலைவாழ் மக்களிடம், உயர்கல்வியை கொண்டு செல்லும் வகையில், மழைவாழ்
பகுதியில், தொலைதூரக் கல்வி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, இக்னோ
சென்னை மண்டல இயக்குனர் அசோக்குமார் கூறினார்.
அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் (2013-14) சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
1.துவக்க/ நடுநிலைப்பள்ளி மாணவர்களை முழுமையாக உரிய வகுப்புகளில் சேர்த்தல்.
2. 14 வகை நலத்திட்டங்களை அதன் நன்மைகளை மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு விளக்கி சேர்க்கையை கூட்டுதல்.
தேர்வு பணியின் போது ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மட்டுமே அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குனர்.
பொதுத் தேர்வு நடைபெறும் காலங்களிலும், விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் போதும் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பது மற்றும் பிற பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். மேலும் தேவைப்பட்டால் ஈட்டிய விடுப்பு மட்டுமே எடுக்கலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
CPS பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 13.04.2013 இன்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அமராவதி ஹாலில் (A/C) காலை 09.00 மணியளவில்
"ஓய்வூதியம் - ஒரு கனவோ ? , கானல் நீரோ ?" என்ற தலைப்பில் புதிய தன்
பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை
குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. இதில் ஓய்வூதிய
வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின்
பயனற்ற தன்மை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து
குறித்து விரிவாக விளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்க கேள்வி -
பதில் விவாதங்களும் நடைபெற இருக்கின்றன.
சி.பி.எஸ்.இ., மேம்பாட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றம்
சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல், ஒரு அதிர்ச்சி
காத்திருக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், இம்ப்ரூவ்மென்ட்
மற்றும் கம்பார்ட்மென்ட் தேர்வுகளை எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கையை,
வாரியம் குறைக்க முடிவு செய்துள்ளது.
போதிய மாணவர்கள் இல்லை - விற்பனைக்கு வரும் தனியார் கல்லூரிகள்
தமிழகத்தில், குறிப்பாக கோவை பிராந்தியத்தில், பல கல்லூரிகள் விற்பனை
செய்யப்படவுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பொறியியல் கல்லூரிகள். மாணவர்
பற்றாக்குறையே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2012-13 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு
தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க/
நடுநிலைப்பள்ளிகளில் 2012-13 ஆண்டிற்கான இடைநிலை / பட்டதாரி
ஆசிரியர் காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட
விவரங்களை உரிய படிவத்தில் 12.04.2013க்குள் அனுப்ப மாவட்ட தொடக்கக்கல்வி
அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், அனைத்து வினாக்களும் எளிதாக
கேட்கப்பட்டிருந்ததால், சுமாராக படிக்கும் மாணவர்களும், 50 மதிப்பெண்ணிற்கு
மேல் பெறலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள், "சென்டம்" பெற, அதிக
வாய்ப்புள்ளது என, மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர்.
சமூக அறிவியலில் பிட்: 16 பேர் பிடிபட்டனர்
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், 16 மாணவர்கள், "பிட்" அடித்து, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைந்தது
கடந்த மார்ச், 27ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து
வந்தன. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய தேர்வுகளில், வித விதமான
குளறுபடிகள் நடந்தன. குறிப்பாக, விடைத்தாள் கட்டுகள் மாயமான விவகாரமும், 10
லட்சம் மாணவர்களுக்கும், கேள்வி தாளுடன், விடை எழுத வேண்டிய, வங்கி செலான்
வழங்காத விவகாரமும், தேர்வு துறையை அதிர்ச்சி அடைய வைத்தது.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?
தமிழக அரசு ஊழியர்களில் ஒரு லட்சம் பேருக்கு
மேல் இந்த ஆண்டு ஓய்வுபெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன்
அளிப்பதன் மூலம் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். இதை தவிர்க்க, அரசு
ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆகஉயர்த்துவது குறித்து தமிழ அரசு
பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே
அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிகிறது.
மூலத்துறை,கோவை மாவட்டம் மாணவர்களின் வருகை சதவீதத்தினை அதிகப்படுத்திய அரசுப் பள்ளியின் புது முயற்சி
பொறியியல் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் மும்முரம்
நடப்பு ஆண்டில், பொறியியல் சேர்க்கையை நடத்துவதற்கான பணியை, அண்ணா
பல்கலை துவக்கி உள்ளது. சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பிக்க உள்ள மாணவ,
மாணவியர், அதற்குரிய சான்றிதழ்களை பெறுமாறு அண்ணா பல்கலை. வலியுறுத்தி
உள்ளது.
தொலைநிலை கல்வியின் குரல்வளை நசுக்கப்படுகிறதா? கல்வி கவுன்சில் உத்தரவுக்கு எதிர்ப்பு
தொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கு, அதிகார எல்லையை நிர்ணயித்து, தொலைநிலை
கல்வி குழு அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்
"கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு),
மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது; பணி நியமனம், பதவி
உயர்வுக்கு, இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த
உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. மூன்றாண்டு
பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை,
பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும்
என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
How to Unlock Data Card-Internet Modems? for use any network sim ?
நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால்அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?
ஜனவரி 2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை
ஜனவரி 2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக
வழங்க கோரி அகில இந்திய இரயில்வே சங்கம் சார்பில் அதன் பொது செயலாளர்
திரு.சிவ கோபால் சர்மா மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அகவிலைப்படி உயர்வானது வழக்கமாக பல வருடங்களாக மார்ச் 31ஆம்
தேதிக்குள் அறிவிக்கப்பட்டுவிடும் எனவும், இது காலங்காலமாக நடந்து வருகிறது
என்றும், ஆனால் தற்பொழுது ஏப்ரல் தொடங்கியும் இதுவரை அகவிலைப்படி
அறிவிக்கப்படாதது துரதிருஷ்டமானது என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
Latest Study Materials - 2013
12th Science-1 Mark Important Points - Prepared by Mr. C.Uma Sankar, Kanchipuram.
12th Science-1 Mark Test & Answer -EM- Prepared by Mr. C.Uma Sankar, Kanchipuram.
Prepared By Mr. C. Uma Sankar,
B.T.Asst.,
GHS,
Karai,
Kanchipuram.
நாளையுடன் முடிகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
கடந்த மாதம், 27ம் தேதி துவங்கிய, 10ம் வகுப்பு பொது தேர்வு, நாளை, 12ம் தேதி நடக்கும் சமூக அறிவியல் தேர்வுடன் முடிகிறது.