Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு


                சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 13.04.2013 இன்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அமராவதி ஹாலில் (A/C) காலை 09.00 மணியளவில் 
       "ஓய்வூதியம்  - ஒரு கனவோ ? , கானல் நீரோ ?" என்ற தலைப்பில் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. இதில் ஓய்வூதிய வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின் பயனற்ற தன்மை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து விரிவாக விளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்க கேள்வி - பதில் விவாதங்களும் நடைபெற இருக்கின்றன. 


சி.பி.எஸ்.இ., மேம்பாட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றம்


           சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல், ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், இம்ப்ரூவ்மென்ட் மற்றும் கம்பார்ட்மென்ட் தேர்வுகளை எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கையை, வாரியம் குறைக்க முடிவு செய்துள்ளது.


பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு?


          தனியார் நடத்தும் பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் விளக்கம் அளித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, அரூர் தொகுதி எம்.எல்.ஏ. தில்லிபாபு எழுப்பிய துணைக் கேள்விக்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:

போதிய மாணவர்கள் இல்லை - விற்பனைக்கு வரும் தனியார் கல்லூரிகள்


           தமிழகத்தில், குறிப்பாக கோவை பிராந்தியத்தில், பல கல்லூரிகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பொறியியல் கல்லூரிகள். மாணவர் பற்றாக்குறையே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2012-13 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு



            தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2012-13 ஆண்டிற்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்களை உரிய படிவத்தில் 12.04.2013க்குள் அனுப்ப மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 

10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு


          பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், அனைத்து வினாக்களும் எளிதாக கேட்கப்பட்டிருந்ததால், சுமாராக படிக்கும் மாணவர்களும், 50 மதிப்பெண்ணிற்கு மேல் பெறலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள், "சென்டம்" பெற, அதிக வாய்ப்புள்ளது என, மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர்.

சமூக அறிவியலில் பிட்: 16 பேர் பிடிபட்டனர்


          பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், 16 மாணவர்கள், "பிட்" அடித்து, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைந்தது


 
           கடந்த மார்ச், 27ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து வந்தன. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய தேர்வுகளில், வித விதமான குளறுபடிகள் நடந்தன. குறிப்பாக, விடைத்தாள் கட்டுகள் மாயமான விவகாரமும், 10 லட்சம் மாணவர்களுக்கும், கேள்வி தாளுடன், விடை எழுத வேண்டிய, வங்கி செலான் வழங்காத விவகாரமும், தேர்வு துறையை அதிர்ச்சி அடைய வைத்தது.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?


           தமிழக அரசு ஊழியர்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்த ஆண்டு ஓய்வுபெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன் அளிப்பதன் மூலம் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். இதை தவிர்க்க, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆகஉயர்த்துவது குறித்து தமிழ அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து இந்த சட்டசபை கூட்டத்  தொடரிலேயே அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிகிறது.
 
 

முதுகலை தாவரவியல் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு


           முதுகலை தாவரவியல் ஆசிரியர், தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.
 
          கடந்த டிசம்பரில், 2,000 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்கள், பணி நியமனமும் செய்யப்பட்டு விட்டனர். கோர்ட் வழக்கு காரணமாக, தாவரவியல் ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியலை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது.

பள்ளிக்கல்வி இயக்குநர்கள் தொடர்பு எண்கள்


1. DIRECTOR OF SCHOOL EDUCATION
கே.தேவராஜன்
044-28278796, 044-28232580 (Fax)
dse@tn.nic.in
2. DIRECTOR OF GOVERNMENT EXAMINATIONS
தண்.வசுந்தர தேவி
044-28278286, 9444216250
dge@tn.nic.in

பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை


           தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013 -14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசின் மற்ற துறைகளை காட்டிலும், பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.
 
 

மூலத்துறை,கோவை மாவட்டம் மாணவர்களின் வருகை சதவீதத்தினை அதிகப்படுத்திய அரசுப் பள்ளியின் புது முயற்சி


           பெரும்பாலான அரசுப்பள்ளிகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனை, மாணவர்களின் தொடர்ச்சியற்ற வருகை என்பது அனைவரும் அறிந்ததே.கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் அதேவகையான பிரச்சினை தொடர்ந்து வந்தது. பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு மூலமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டும் சரியான முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இதற்குத் தக்க தீர்வு காண பள்ளியின் ஆசிரியர் குழு ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்தது.அதாவது மாதந்தோறும் விடுப்பு எடுக்காமல் வரும் மாணவ,மாணவியரை அடுத்த மாதத்தொடக்கத்தில் நிகழும் பொது வழிபாட்டில் கௌரவிப்பது என்றும்,அவர்களை புகைப்படம் எடுத்து பள்ளியின் முன்புறம் உள்ள "FLANNEL BOARD" இல் காட்சிப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
 

பொறியியல் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் மும்முரம்


          நடப்பு ஆண்டில், பொறியியல் சேர்க்கையை நடத்துவதற்கான பணியை, அண்ணா பல்கலை துவக்கி உள்ளது. சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பிக்க உள்ள மாணவ, மாணவியர், அதற்குரிய சான்றிதழ்களை பெறுமாறு அண்ணா பல்கலை. வலியுறுத்தி உள்ளது.

தொலைநிலை கல்வியின் குரல்வளை நசுக்கப்படுகிறதா? கல்வி கவுன்சில் உத்தரவுக்கு எதிர்ப்பு


            தொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கு, அதிகார எல்லையை நிர்ணயித்து, தொலைநிலை கல்வி குழு அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்


              "கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு), மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை, பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 
 

How to Unlock Data Card-Internet Modems? for use any network sim ?

      

     நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால்அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?


தரமான ஆசிரியர்கள் பற்றாக்குறை - காரணம் என்ன?


         தனியார் மற்றும் பொதுத்துறைகளில் அதிகளவில் உயர்கல்வி நிறுவனங்கள் பெருகிவரும் இந்தியாவில், தரமான ஆசிரியர் பற்றாக்குறை என்பது பெரிய சிக்கலாக தொடர்ந்து வருகிறது. பல புதிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கு, திறமையான ஆசிரியர்களை எப்படி கையாள்வது என்றே தெரிவதில்லை.
 
 

ஜனவரி 2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை



              ஜனவரி 2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க கோரி அகில இந்திய இரயில்வே சங்கம் சார்பில் அதன் பொது செயலாளர் திரு.சிவ கோபால் சர்மா மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அகவிலைப்படி உயர்வானது வழக்கமாக பல வருடங்களாக மார்ச் 31ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட்டுவிடும் எனவும், இது காலங்காலமாக நடந்து வருகிறது என்றும், ஆனால் தற்பொழுது ஏப்ரல் தொடங்கியும் இதுவரை அகவிலைப்படி அறிவிக்கப்படாதது துரதிருஷ்டமானது என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

ஓராண்டில் பெறும் பட்டம்: தனி நீதிபதி தீர்ப்புக்கு இடைக்காலத் தடை


            ஏற்கெனவே பட்டம் பெற்றவர் இன்னொரு பட்டம் பெறுவதற்காக ஓராண்டு காலம் மட்டுமே படித்திருந்தால் அந்த ஓராண்டில் பெறும் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நாளையுடன் முடிகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு


                    கடந்த மாதம், 27ம் தேதி துவங்கிய, 10ம் வகுப்பு பொது தேர்வு, நாளை, 12ம் தேதி நடக்கும் சமூக அறிவியல் தேர்வுடன் முடிகிறது.
 

மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு


                ஊதிய முரண்பாடு தொடர்பான, மூவர் குழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தும், அதை வெளியிட தாமதம் செய்வதை கண்டித்து, மே 4 ல் அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த, அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
 
 

விடைத்தாள் திருத்த ஆசிரியர் இல்லை: வேறு மையத்திற்கு மாற்றம்


           சிவகங்கை மையத்தில், பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்த, ஆசிரியர்கள் போதிய ஆர்வம் காட்டாததால், குறிப்பிட்ட சில பாடத்திற்கான விடைத்தாள்கள், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
 
 

கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு


               கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவியுயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவியுயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. 

மே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி


          "அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துவதற்காக, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில், மே மாதம் பள்ளிக்கு வரவேண்டும்" என, நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
 

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இன்று ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு


              மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இன்று (10ம் தேதி) மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடக்கிறது.
 
 

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இந்த வாரத்துடன் நிறைவு


          பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. இதையடுத்து, "டேட்டா சென்டரில்" மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.
 
 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சட்ட பாடம் அறிமுகப்படுத்த திட்டம்


           மத்திய இடைநிலை கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், விருப்பப் பாடமாக, சட்டப்பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
 
 

பள்ளி, கல்லூரி வளாகங்களில் 100 ஆவின் பாலகங்கள்


          ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, கணினிமயமாக்கும் திட்டம், 10 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக சட்டசபையில், பால்வளத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு:
 
 

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கும் திட்டத்தைத் தமிழக‌ அரசு கைவிட தமிழார்வலர்கள் கோரிக்கை


           வரும் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 3500 அரசால் நடத்தப்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 34871 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 8500 பள்ளிகள் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளாக உள்ளன.
 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive