Half Yearly Exam 2024
Latest Updates
கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது என்று
வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
வழங்கியுள்ளது. சென்ற பதவியுயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற
பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று
அதற்கு பதவியுயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.
PG Botany Candidate's List Published to TRB Office.
முதுகலை தாவரவியல் பட்டதாரிகளின் தேர்வு பட்டியல் TRB அலுவலக விளம்பர பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் TRB இணைய தளத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் பெயர், பிறந்ததேதி, மையம், பதிவெண்ணை சரிபார்த்துக் கொள்ளவும்.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
09.8.1989 அன்று தமிழக அரசு ஓர் அரசாணையை
வெளியிட்டது. 1.6.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பணியிலிருந்து
ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் அதிகபட்சம் 13 % மட்டுமே
ஓய்வூதியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசாணையில்
கூறப்பட்டிருந்தது. எனினும் 1.1.1996ஆம் தேதியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு
இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது.
ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்த தற்போது 7.50
ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை 10 ரூபாயாக உயர்த்த வேண்டும். தன் பங்கேற்பு
ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்.
1.6.2006க்கு முன்பு
தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த அனைவரையும்
பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க
வேண்டும். அடுத்த மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள் நடந்து
வருகிறது.
அறிவியல் தேர்வும் தப்பவில்லை : ஒரு மதிப்பெண் விடையில் பாதி, "மிஸ்சிங்' - News Paper
தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தேர்வுகளில் நடந்த பல
குளறுபடிகளைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த
அறிவியல் தேர்விலும், குளறுபடி ஏற்பட்டது. கேள்வித்தாளில், ஒரு மதிப்பெண்
பகுதியில், விடையின் பாதி வார்த்தைகள், "மிஸ்சிங்' ஆனதால், இதற்குரிய
மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.