முதுகலை தாவரவியல் பட்டதாரிகளின் தேர்வு பட்டியல் TRB அலுவலக விளம்பர பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் TRB இணைய தளத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
8, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் பெயர், பிறந்ததேதி, மையம், பதிவெண்ணை சரிபார்த்துக் கொள்ளவும்.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
09.8.1989 அன்று தமிழக அரசு ஓர் அரசாணையை
வெளியிட்டது. 1.6.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பணியிலிருந்து
ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் அதிகபட்சம் 13 % மட்டுமே
ஓய்வூதியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசாணையில்
கூறப்பட்டிருந்தது. எனினும் 1.1.1996ஆம் தேதியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு
இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது.
ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்த தற்போது 7.50
ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை 10 ரூபாயாக உயர்த்த வேண்டும். தன் பங்கேற்பு
ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்.
1.6.2006க்கு முன்பு
தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த அனைவரையும்
பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க
வேண்டும். அடுத்த மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள் நடந்து
வருகிறது.
அறிவியல் தேர்வும் தப்பவில்லை : ஒரு மதிப்பெண் விடையில் பாதி, "மிஸ்சிங்' - News Paper
தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தேர்வுகளில் நடந்த பல
குளறுபடிகளைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த
அறிவியல் தேர்விலும், குளறுபடி ஏற்பட்டது. கேள்வித்தாளில், ஒரு மதிப்பெண்
பகுதியில், விடையின் பாதி வார்த்தைகள், "மிஸ்சிங்' ஆனதால், இதற்குரிய
மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தானியங்கி டஸ்டர்: மதுரை கல்லூரி மாணவர்கள் சாதனை
கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தானே அழிக்கும்
இயந்திரத்தை (டஸ்டர்) மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்கள்
உருவாக்கியுள்ளனர்.
விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர, மாணவ,
மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ,
மாணவியர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி, சென்னை நேரு விளையாட்டு
அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு
துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சேரும்
மாணவ, மாணவியருக்கு விளையாட்டுக்களில் சிறப்பான முறையில் பயிற்சி
அளிப்பதுடன், சத்தான உணவும், உறைவிடமும் வழங்கப்படுகிறது.
CCE GRADING SHEET WITH FORMULA FOR YEAR END RESULTS 2012-2013
கல்வி ஆண்டின் முடிவில் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை தயார் செய்யவும்
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புதல் பெறவும் தயார் செய்ய வேண்டிய படிவத்தை பெற இங்கே சொடுக்கவும். படிவத்தை முழுவதுமாக படிக்க இஸ்மாயில்மற்றும் வானவில் எழுத்துருக்களை பயன்படுத்தவும்
அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்
தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை
மேம்படுத்தும் வகையில், சதுரங்கம் (செஸ்) பலகைகள் விரைவில் மாணவர்களுக்கு
வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி
மாணவ, மாணவியரின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் தூண்டும் வகையில்
மாணவர்களுக்கு "செஸ்' விளையாட்டு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்
"அப்ஜெக்டிவ் டைப்' தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாக,'' டி.என்.பி. எஸ்.சி., செயலர் விஜயகுமார் கூறினார். உதவி
புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு "ஆன்லைன்' மூலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான
தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி.,
கல்லூரி வந்த அவர் கூறியதாவது: உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு நாளை
(இன்று) 28 மையங்களில், ஆன்லைன் மூலம் நடக்கிறது.