Half Yearly Exam 2024
Latest Updates
ராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்
நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியல் வல்லுநரான சி.வி.ராமனால், கடந்த
1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்தான், ராமன்
ஆராய்ச்சி கல்வி நிறுவனம்.
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவு
தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற
ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு
114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப்
புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட
பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.
ஆங்கில நுழைவு தேர்வில் மதுரை கல்லூரி மாணவி சாதனை
வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான, தேசிய அளவில் நடந்த ஆங்கில நுழைவுத் தேர்வில் (டோபல்), மதுரை மாணவி எம்.சிவகாமி வெற்றி பெற்றார்.
அமெரிக்கப் பல்கலையில், உதவித்தொகையுடன் மேற்படிப்பு (எம்.எஸ்.,)
படிப்பதற்கான, ஆங்கில நுழைவுத் தேர்வு நடந்தது. இந்தியா, சீனா, தைவான்,
கொரியாவில் இருந்து, தலா 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 30 பேரில்
ஒருவராக, மதுரை சிவகாமி தேர்வானார்.
அரசுப் பள்ளிக்குப் பரிசு
சிறப்பான சேவை செய்த பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்றம் இரண்டாம் பரிசை பெற்றது.
மாணவர்கள் அறிவியல் திறனை வளர்க்க வேண்டும்: இஸ்ரோ இயக்குனர் பேச்சு
"மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்,"
என இஸ்ரோ இந்திய விமானவியல் ஆராய்ச்சி நிறுவன (மிஷன்) இயக்குனர்
சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி
"அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் தற்போது
படித்து வருகின்றனர்" என சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனிபர் மெக்
இன்டையர் தெரிவித்தார்.
மாணவர்களிடையே துப்பாக்கிக் கலாச்சாரம்; தேவை விழிப்புணர்வு
சென்னையில் மாணவர்கள் துப்பாக்கியுடன் மோதிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரம்: மறுதேர்வு கிடையாது
செஞ்சி அருகே, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் விடைத்தாள்கள் மாயமான
விவகாரத்தில், அஞ்சலக புறநிலை ஊழியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
மாயமான விடைத் தாள்களுக்கு மறுதேர்வு கிடையாது.
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேடு: தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு
பிளஸ் 2, இயற்பியல் பொதுத் தேர்வின் போது, முறைகேட்டில் ஈடுபட்ட,
நாமக்கல் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மீது, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு
"ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி
குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்&' என, தமிழக
அரசு அறிவித்துள்ளது.
"டான்செட்" நுழைவு தேர்வு: தகவல் அறிய மையங்கள் அமைப்பு
முதுகலை தொழில்நுட்ப படிப்புகளுக்கு, தமிழக அரசின் பொது நுழைவுத் தேர்வு
(டான்செட்), வரும் 6, 7ம் தேதிகளில் நடக்கிறது. தேர்வு பற்றி தகவல்களை, 15
மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் மாணவர்கள் பெறலாம் என,
டான்செட் செயலர் கூறியுள்ளார்.
கல்லூரி கோடை விடுமுறை நாட்கள் குறைய வாய்ப்பு
கல்லூரிகளில், குறைந்த அளவு வேலை நாட்கள் உள்ளதால், சிறப்பு வகுப்புகள்
மூலம், வேலை நாட்களை ஈடு செய்ய, ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால்,
கோடை விடுமுறை காலம் குறையும் என, கூறப்படுகிறது.
பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கும் லேப்டாப்: ஐகோர்ட் உத்தரவு
பல்கலை கல்லூரி மாணவர்களுக்கும் இலவச "லேப்டாப்" வழங்க, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மாயமான விடைத்தாள்களை தேடும் அதிகாரிகள்
நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 10-ம் வகுப்பு
ஆங்கில தேர்வு விடைத்தாள் அடங்கிய பார்சல் மாயமானது. இதற்கு
அஞ்சல்துறையினரின் அலட்சியப்போக்கு காரணம் என கூறப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு சார்பான முடிவு, நிதி அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
மத்திய அரசு
ஊழியர்களுக்கான ஜனவரி 2013 முதல் 8% அகவிலைப்படி உயர்வு, ஏப்ரல் 2ந்
தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்றும்,
இதற்கான முடிவு அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்தன. ஆனால் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நேற்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் 3 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளதால்,
அகவிலைப்படி உயர்வு பற்றிய முடிவு அடுத்த நடைபெற உள்ள அமைச்சரவை
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று செய்தி மற்றும்
ஒளிப்பரப்பு துறை அமைச்சர் மனீஷ் திவாரி தெரிவித்தார்.