Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள் அறிவியல் திறனை வளர்க்க வேண்டும்: இஸ்ரோ இயக்குனர் பேச்சு


         "மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்," என இஸ்ரோ இந்திய விமானவியல் ஆராய்ச்சி நிறுவன (மிஷன்) இயக்குனர் சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.


அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி


          "அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்" என சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனிபர் மெக் இன்டையர் தெரிவித்தார்.


மாணவர்களிடையே துப்பாக்கிக் கலாச்சாரம்; தேவை விழிப்புணர்வு


           சென்னையில் மாணவர்கள் துப்பாக்கியுடன் மோதிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் துணை நகரம் அமைக்கப்படும்: முதல்-அமைச்சர் ஜெயலலிதா


         தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மதுரை நகரில் துணை நகரம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா, மதுரை விமான நிலையத்திற்கு 586.86 ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த துணை நகரம் அமைக்கப்படும்.
 
 

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. பி.எட். படிப்பு: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகம்


           தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பி.எட். படிப்பில் உள்ள 1000 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 5-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
 
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரம்: மறுதேர்வு கிடையாது


          செஞ்சி அருகே, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், அஞ்சலக புறநிலை ஊழியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மாயமான விடைத் தாள்களுக்கு மறுதேர்வு கிடையாது.


பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேடு: தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு


           பிளஸ் 2, இயற்பியல் பொதுத் தேர்வின் போது, முறைகேட்டில் ஈடுபட்ட, நாமக்கல் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மீது, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


அரியலூர் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு


         "ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்&' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.


"டான்செட்" நுழைவு தேர்வு: தகவல் அறிய மையங்கள் அமைப்பு


         முதுகலை தொழில்நுட்ப படிப்புகளுக்கு, தமிழக அரசின் பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), வரும் 6, 7ம் தேதிகளில் நடக்கிறது. தேர்வு பற்றி தகவல்களை, 15 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் மாணவர்கள் பெறலாம் என, டான்செட் செயலர் கூறியுள்ளார்.

கல்லூரி கோடை விடுமுறை நாட்கள் குறைய வாய்ப்பு


           கல்லூரிகளில், குறைந்த அளவு வேலை நாட்கள் உள்ளதால், சிறப்பு வகுப்புகள் மூலம், வேலை நாட்களை ஈடு செய்ய, ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால், கோடை விடுமுறை காலம் குறையும் என, கூறப்படுகிறது.

பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கும் லேப்டாப்: ஐகோர்ட் உத்தரவு


           பல்கலை கல்லூரி மாணவர்களுக்கும் இலவச "லேப்டாப்" வழங்க, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


மாயமான விடைத்தாள்களை தேடும் அதிகாரிகள்


         நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு விடைத்தாள் அடங்கிய பார்சல் மாயமானது. இதற்கு அஞ்சல்துறையினரின் அலட்சியப்போக்கு காரணம் என கூறப்படுகிறது.


ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்; ஆசிரியை பணி வழங்க மறுத்தது சரி: உயர் நீதிமன்றம்


          "ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு பட்டங்களைப் படித்த பெண்ணுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்க மறுத்தது சரி தான்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
 
 

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான 100 மருத்துவக் குறிப்புகள்

 
1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
 

அகவிலைப்படி உயர்வு சார்பான முடிவு, நிதி அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.


               மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2013 முதல்  8% அகவிலைப்படி உயர்வு, ஏப்ரல் 2ந் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்றும், இதற்கான முடிவு அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நேற்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் 3 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளதால், அகவிலைப்படி உயர்வு பற்றிய முடிவு அடுத்த நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று செய்தி மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் மனீஷ் திவாரி தெரிவித்தார்.  
 

தேர்வுத்துறை இணை இயக்குனர் பணியிடம் காலி


            தேர்வுத்துறை இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) பணியிடத்தை நிரப்பாமல், வழக்கம் போல், கூடுதல் பொறுப்பில், பணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
 

தமிழகமெங்கும் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு

 

               இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிற்கு எதிராகவும், இலங்கை தமிழர்களை காக்க வலியுறுத்தியும் மாணவர் கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.
 
 

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?

 
      அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, ஆங்கில வழிக் கல்வியை போதிக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது; ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் "ஆங்கில வழிக்கல்வி" துவங்கும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.
 
 

மதுரைக்கு ஒரு லட்சம் பிளஸ் 2 விடைத்தாள்கள்: தவறு ஏற்படும் அச்சத்தில் ஆசிரியர்கள்


            மதுரை மாவட்டத்திற்கு ஒரு லட்சம் பிளஸ் 2 ஆங்கில விடைத்தாள்கள், திருத்தும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் திணறுகின்றனர். இதனால், மறுமதிப்பீட்டின் போது அதிக "தவறு" ஏற்பட வாய்ப்புள்ளதாக, அச்சம் தெரிவித்துள்ளனர்.
 
 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 04.04.2013 அன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள ஆர்பாட்டத்தில் எந்தவித அசாம்பவித சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு.


              ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் ஊதிய பிரச்சனைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 04.04.2013 அன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள ஆர்பாட்டத்தில் எந்தவித அசாம்பவித சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 

நோய் அல்ல குறைபாடு: இன்று உலக ஆட்டிசம் தினம்


              ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. இது பற்றி பெரும்பாலான பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை.
 
               இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஏப்., 2ம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்


                திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதி மங்கலங்கிழார் பயிற்சி மையத்தில், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிப்பதால், பயிற்சி பெற வரும் ஆசிரியர்கள் எண்ணிக்கை, நாளுக்கு அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : மத்திய அமைச்சகம் அனுமதி


               மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு


              சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்
உள்ள பதிவுகள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

விடைத்தாள் சேதத்துக்கு ரயில்வே பொறுப்பில்லை": பி.ஆர்.ஓ., விளக்கம்


              "பத்தாம் வகுப்பு விடைத்தாள் பண்டல், ரயிலிலிருந்து விழுந்ததுக்கு ரயில்வே துறை காரணமில்லை" என, திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம்


          ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு முடிவு செய்து நிதி ஒதுக்கியுள்ளது.
 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive