Half Yearly Exam 2024
Latest Updates
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 04.04.2013 அன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள ஆர்பாட்டத்தில் எந்தவித அசாம்பவித சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு.
ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் ஊதிய
பிரச்சனைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்
பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 04.04.2013 அன்று மாவட்ட தலைநகரங்களில்
நடைபெறவுள்ள ஆர்பாட்டத்தில் எந்தவித அசாம்பவித சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நோய் அல்ல குறைபாடு: இன்று உலக ஆட்டிசம் தினம்
ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள
நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. இது பற்றி பெரும்பாலான
பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை.
இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்
என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஏப்., 2ம் தேதி உலக
ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு
சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம்
பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை
கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்
உள்ள பதிவுகள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும்
வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு
செய்யப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
CPS தொடர்பாக "CITU" தொடர்ந்த வழக்கில் சென்னை
உயர்நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அவ்வுத்தரவில்
இறந்தவருக்கு எந்த மாதிரியான செட்டில்மென்ட் என்பதை இரண்டு வாரத்திக்குள்
பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தில் மனுதாரர் கட்டிய சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது
எனவும், இறந்தவரின் பங்களிப்பு தொகையினை வட்டி தரக்கூடிய வைப்பு நிதியாக
வைக்க உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2013 முதல் 8% அகவிலைப்படி உயர்வு, இன்று ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2013 முதல்
8% அகவிலைப்படி உயர்வு, இன்று ஏப்ரல் 2ந் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை
கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்றும், இதற்கான முடிவு எடுக்கப்படும்
என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பால் சுமார் 50
லட்சம் அரசு ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதுள்ள
விலைவாசி உயர்வை சமாளிக்க உதவியாக இருக்கும்.
கருகும் தாவரம் - தாவரவியல் பட்டதாரிகளின் கண்ணீர் கதை.
"கருகும் தாவரம்"
- தாவரவியல் பட்டதாரிகளின்
கண்ணீர் கதை.
முதுகலை தாவரவியல்
பட்டதாரிகளின் பணிநியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தாவரவியல் பட்டதாரிகள் கண்ணீர்
சிந்தி வருகின்றனர்.
இவர்களின் கண்ணீர்
கதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
கல்லூாரியில் சேரும்
போதே பி.ஏ போன்ற மற்ற பட்டங்களை விட பி.எஸ்.சி போன்ற பட்டங்களில் சேர கடும் போட்டி
அதிகம். மேலும் படிப்பு கட்டணமும் அதிகம். மூன்று வருடங்கள் முடிக்கும் போது அரியர்
இல்லாமல் தேர்ச்சி பெற்று வருவதே மிகவும் கடினம். அதிலும் 80 சதவீதத்திற்கு மேல் இருந்தால்
தான் அரசு பி.எட். கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும். இல்லையேல் தனியார் பி.எட்
கல்லூரிகளில் சேர கட்டணமும் அதிகம், நன்கொடை வேறு.
DEPT EXAM COLLECTIONS - REMINDER
DEPARTMENT EXAM COLLECTION ALWAYS AVAILABLE OUR SITE IN TOP SIDE TAB "துறை தேர்வு "
Click Here 4 More Collection - "துறை தேர்வு "
10ம் வகுப்பு விடைத்தாள் நாசம்: ரயில்வே மீது வழக்கு
"பத்தாம் வகுப்பு விடைத் தாள்களை தவறவிட்ட, ரயில்வே நிர்வாகம் மீது
வழக்கு தொடரப்படும்" என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன்
கூறினார்.
சி.ஏ., - சி.டபிள்யூ.ஏ., - சி.எஸ்., பட்டங்கள்: டில்லி மாணவி சாதனை
டில்லியைச் சேர்ந்த மாணவி, 23 வயதிலேயே, சி.ஏ., - சி.எஸ்., -
சி.டபிள்யூ.ஏ., என, கணக்கியல் தொடர்பான, மூன்று பட்டங்களில், தேர்ச்சி
பெற்று சாதனை படைத்துள்ளார்.
அடிப்படை வசதிகள் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள்
அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என மூன்று வகையாக
பள்ளிகள் செயல்படுகிறது. அரசு பள்ளிகளுக்கு அரசு அனைத்து விதமான கட்டுமான
வசதி, அடிப்படை வசதிகளை செய்கிறது.
பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொடுங்கள்: சசி தரூர் "அட்வைஸ்"
"இன்றைய நவீன உலகில், வெற்றி பெற வேண்டுமானால், ஆங்கிலம் படிப்பது
மிகவும் அவசியம். இளம் தலைமுறைக்கு, ஆங்கிலம் கற்றுக் கொடுக்கவில்லை
என்றால், அவர்களின் எதிர்காலம், பாதிக்கப்படும்" என, மத்திய மனிதவளத் துறை
இணை அமைச்சர், சசி தரூர் கூறியுள்ளார்.
கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்
அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர்
ஒருவர், ஊர் ஊராக சென்று, பொது மக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டு
நன்கொடை சேகரிக்கிறார்.
நாளை சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை
தமிழக அரசின் 20132014ம் ஆண்டுக்கான பட்ஜெட்
கடந்த 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25ம்
தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபையில் பொது விவாதம் நடந்தது.
பட்ஜெட் மீது நடந்த விவாதத்திற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ம்
தேதி பதில் அளித்தார். இதையடுத்து சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 1ம் தேதிக்கு
சபாநாயகர் தனபால் தள்ளிவைத்தார்.
PAN CARD என்றால் என்ன? அதன் முக்கியதுவம் என்ன?
நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு
(Permanent Account Number-PAN)
நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.
1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
உலகசாதனையை முறியடித்த மாற்றுத்திறனாளி மாணவர் : உதவிகளை நாடி காத்திருப்பு
எறும்புக்கும் வாழ்க்கையுள்ள இந்த உலகில்
சாதிக்க ... ஊனம் ஒரு தடையே அல்ல... தன்னம்பிக்கையை இழந்தவர்கள் ஜெயிப்பது
இல்லை... ஜெயிப்பவர்கள் தன்னம்பிக்கையை இழப்பது இல்லை... பாராலிம்பிக்
போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரரின் சாதனையை
முறியடித்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன்... சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த
இந்த மாணவரின் பெயர் மாரியப்பன்.