Half Yearly Exam 2024
Latest Updates
அனைத்து வசதிகளையும் கொண்ட அதிசய கிராமம் கங்கதேவி பள்ளி
ஆந்திராவில், ஒரு அதிசய கிராமம் உள்ளது. அனைத்து உள்கட்டமைப்பு
வசதிகளுடன், 24 மணி நேர மின் வினியோகத்துடன், சுத்தம், சுகாதாரத்துடன்
விளங்கும் இந்த கிராமம், நாட்டின் முன்னணி கிராமங்களில் ஒன்றாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல விருதுகளைப் பெற்றுள்ள இந்த கிராமத்தின்
தலைவர், சந்திர மவுலி, நேபாள நாட்டின் சிறப்பு விருந்தினராக
அழைக்கப்பட்டுள்ளார்.
ஐஐடிக்களில் 43% காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள்
ஐஐடி மற்றும் என்ஐடிக்களில் 40 சதவீதத்துக்கு மேல் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கல்வித் தரம் முன்னேறி வந்தாலும்,
உலக அளவில் போட்டி போடும் அளவுக்கு இன்னமும் வளரவில்லை. உலக அளவில்
மாணவர்களை தயார் படுத்த உருவாக்கப்பட்டவையே ஐஐடி மற்றும் என்ஐடிக்கள்.
ஆனால், அவையும் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரவில்லை.
"அரிதான நாணயங்கள் கிடைத்தால் உதாசீனப்படுத்தாதீர்"
"அரிதான நாணயங்கள் ஏதேனும் கிடைத்தால், அதை, தயவு செய்து நாணய ஆராய்ச்சி
செய்யும் அறிஞர்களின் கவனத்திற்கு, கொண்டு செல்லுங்கள். பழைய நாணயங்களை
உதாசீனப்படுத்தி, தமிழகத்தின் வரலாற்றை அழித்து விடாதீர்கள்" என, "தினமலர்"
நாளிதழ் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்
"மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்லூரிகளை உடனடியாக திறக்க
வேண்டும்" என, மாணவர்கள் கூட்டமைப்பினர், அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர்.
வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்
தமிழகத்தில் அரசு பொது தேர்வு வினாத்தாள் கண்காணிப்பு குழுவில், மாணவர்களும் இந்தாண்டு முதல், சேர்க்கப்பட்டுள்ளனர்.
"விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை"
"விடைத்தாள், ரயில் பாதையில் கிடந்த விவகாரத்தில், தேர்வு துறையின்
தவறுகள் எதுவும் இல்லை" என அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்
பார்சலில் அனுப்பப்பட்ட, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்
தாள்கள், ரயில் பாதையில் சிதறிக் கிடந்ததால், விருத்தாசலம் ரயில்
நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
கணித அருங்காட்சியகமாக உருமாறுகிறது கணிதமேதை ராமானுஜர் பிறந்த வீடு
ஈரோடு: ஈரோட்டில்
கணிதமேதை ராமானுஜர் பிறந்த வீடு, கணித அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது.
புகழ் பெற்ற கணிதமேதை ராமானுஜர். இவர் பிறந்த வீடு ஈரோட்டில் உள்ளது. இந்த
வீட்டை தற்போது கணித அருங்காட்சியமாக மாற்றவுள்ளனர். இது குறித்து
புதன்கிழமை ஈரோடு மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்லூரிகள் ஏப்.1-ல் திறப்பு இல்லை?: தள்ளிப்போகிறது பல்கலை தேர்வுகள்
அரசிடமிருந்து எந்தவொரு தகவலும் இதுவரை
வராததால், கல்லூரிகள் திறப்பது பெரும்பாலும் ஏப்ரல் 1-ம் தேதி இருக்காது
என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களும், உயர் கல்வித் துறை அதிகாரிகளும்
தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்பட இருந்த
பல்கலைக்கழகத் தேர்வுகள், தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள்
தெரிவிக்கின்றனர்.
ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு
வரும் 1ம் தேதி முதல், பிபிஎப் மற்றும் மூத்த
குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது
என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி
வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி.,
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி.,
முதன்மைத் தேர்வில் செய்யப்பட இருந்த மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., வாபஸ்
பெற்றது. ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுக்கு, கடும்
எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த முடிவை எடுத்தது.
எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்பில் சேர இணையத்தில் விண்ணப்பம்
அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புகளில் சேர, பல்கலை
இணையதளம் வழியாக, ஏப்., 13ம் தேதி வரை, பதிவு செய்யலாம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர்,செவிலியர்,ஆசிரியர்பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி.முனுசாமி
சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் சவுந்திர ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ.), ஆறுமுகம் (இந்திய கம்யூ.), என்.ஆர்.ரங்கநாதன் (காங்) ஆகியோர் கவன ஈர்ப்பு கொண்டு வந்தனர். அவர்கள் கூறும் போது, தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரித்து வரும் காலி பணியிடங்களை பூர்த்தி செய்து நிர்வாக பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்கள்.
10ம் வகுப்புத் தமிழ் இரண்டாம் தாள் தேர்வு: படிவம் இல்லாமல் படிவத்தை எப்படி நிரப்புவது? மாணவர்கள் குழப்பம்
இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய
மாணவர்களுக்கு ஒரு கேள்வியைப் படித்ததும் கடும் அதிர்ச்சி. தமிழ் 2வது
தாளில் 38வது கேள்வியாக,"வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் படிவத்தில்
நிரப்புக என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு 5 மதிப்பெண்கள்.
10ம் வகுப்பு வினாத்தாளில் "பார் கோடு"
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. வினாத்தாள்கள்,
அந்தந்த கல்வி மாவட்ட மையங்களுக்கு, பத்து நாட்களுக்கு முன்பு
அனுப்பப்படும். ஒவ்வொரு மையங்களுக்கும், பணி மூப்பு அடிப்படையில் இரு தலைமை
ஆசிரியர்கள் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்
"டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கு,
மீண்டும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு,
கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளோம்,' என, சட்டசபையில், பள்ளிக்கல்வி
அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் எளிமை: ஆசிரியர், மாணவர் மகிழ்ச்சி
"பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தன" என, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வுகள் முடிந்தன: 10ம் வகுப்பு தேர்வு துவங்கியது
பிளஸ் 2 தேர்வுகள், நேற்றுடன் முடிந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்
தேர்வு, நேற்று (27ம் தேதி)துவங்கியது. மாநிலம் முழுவதும், 3,012
மையங்களில், 10.68 லட்சம் மாணவ, மாணவியர், தமிழ் முதற்தாள் தேர்வை
எழுதினர்.
TNPSC - Results of Departmental Examinations - DECEMBER 2012
Results of Departmental Examinations - DECEMBER 2012
(Updated on 25 Mar 2013)
(Updated on 25 Mar 2013)
(Enter Your Register Number, Then Press Enter)
|