Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு


      பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
 
 

தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை


          ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
 
 

கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு


         கல்வி உரிமை சட்டத்தை (ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது.
 
 

சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி.,


              ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., முதன்மைத் தேர்வில் செய்யப்பட இருந்த மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., வாபஸ் பெற்றது. ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த முடிவை எடுத்தது.


எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்பில் சேர இணையத்தில் விண்ணப்பம்


           அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புகளில் சேர, பல்கலை இணையதளம் வழியாக, ஏப்., 13ம் தேதி வரை, பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு வினா எண்.38 எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 வழங்க உத்தரவு. - One India Tamil - Paper News




           10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற தமிழ் 2ஆம் தாள் தேர்வில், வினாத்தாளுடன் இணைத்து கொடுக்க வேண்டிய படிவம் கொடுக்கப்படாததால் பல பள்ளிகளில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் வினாவினை எழுத முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுகள் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.  

டாக்டர்,செவிலியர்,ஆசிரியர்பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி.முனுசாமி



                சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் சவுந்திர ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ.), ஆறுமுகம் (இந்திய கம்யூ.), என்.ஆர்.ரங்கநாதன் (காங்) ஆகியோர் கவன ஈர்ப்பு கொண்டு வந்தனர். அவர்கள் கூறும் போது, தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரித்து வரும் காலி பணியிடங்களை பூர்த்தி செய்து நிர்வாக பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்கள்.

தொடக்கக்கல்வி பட்டயத் (D.T.Ed) தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெறலாம்


          தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 

10ம் வகுப்புத் தமிழ் இரண்டாம் தாள் தேர்வு: படிவம் இல்லாமல் படிவத்தை எப்படி நிரப்புவது? மாணவர்கள் குழப்பம்




            இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு கேள்வியைப் படித்ததும் கடும் அதிர்ச்சி. தமிழ் 2வது தாளில் 38வது கேள்வியாக,"வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் படிவத்தில் நிரப்புக என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு 5 மதிப்பெண்கள். 

10ம் வகுப்பு வினாத்தாளில் "பார் கோடு"


             பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. வினாத்தாள்கள், அந்தந்த கல்வி மாவட்ட மையங்களுக்கு, பத்து நாட்களுக்கு முன்பு அனுப்பப்படும். ஒவ்வொரு மையங்களுக்கும், பணி மூப்பு அடிப்படையில் இரு தலைமை ஆசிரியர்கள் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.


இளநிலை உதவியாளர் பணியிடங்கள்: பரிந்துரைக்கப்பட உள்ளவர்கள் பட்டியல் வெளியீடு

 
           
             மாநகராட்சி இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தியில்:-
 
 

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்


           "டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கு, மீண்டும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு, கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளோம்,' என, சட்டசபையில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.


பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் எளிமை: ஆசிரியர், மாணவர் மகிழ்ச்சி


      "பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தன" என, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


பிளஸ் 2 தேர்வுகள் முடிந்தன: 10ம் வகுப்பு தேர்வு துவங்கியது


          பிளஸ் 2 தேர்வுகள், நேற்றுடன் முடிந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, நேற்று (27ம் தேதி)துவங்கியது. மாநிலம் முழுவதும், 3,012 மையங்களில், 10.68 லட்சம் மாணவ, மாணவியர், தமிழ் முதற்தாள் தேர்வை எழுதினர்.


தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்


                    தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

TNPSC - Results of Departmental Examinations - DECEMBER 2012



Results of Departmental Examinations - DECEMBER 2012
(Updated on 25 Mar 2013)
Enter Your Register Number :                                                         
(Enter Your Register Number, Then Press Enter)

TNPSC- Departmental Test Bulletin MAY 2011 /2012



Bulletin No. View/Download
Bulletin No. 15 dated 7th August 2012
(contains results of Departmental Examinations, May 2012)
View/Download
Bulletin No. 16 dated 16th August 2012
(contains results of Departmental Examinations, May 2012)
View/Download
Bulletin No. 17 dated 7th August 2011
(contains results of Departmental Examinations, May 2011)
View/Download
Bulletin 18 dated 16th August 2011
(contains results of Departmental Examinations, May 2011)
View/Download

அரசுத் துறை தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு




            டிசம்பரில் நடந்த, அரசு துறை தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

         பதவி உயர்வு பெறுவதற்காக, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், கடந்த டிசம்பரில் நடந்த துறை தேர்வுகளை எழுதினர். இதன் முடிவுகள், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

                    தேர்வர்கள், தங்களுடைய பதிவு எண்களை பதிவு செய்து, தேர்வு முடிவை அறியலாம்.

Forms & Proposals




Thanks to Mr. K.Manavalan,
B.T.Asst.,
GHRSS.,
Thokkanampakkam,
Cudalore District.



தனியார் பள்ளிகளின் இட பிரச்னையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு

 

              தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச இட வசதியை ஏற்படுத்தாத தனியார் பள்ளிகள் பிரச்னை குறித்து, ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், வல்லுநர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

வெண்புள்ளி உள்ள மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது


             "உடம்பில் வெண்புள்ளிகள் உள்ளதை காரணங்காட்டி, மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாரபட்சமாக நடத்தக்கூடாது" என, பள்ளிக் கல்வி துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
 
 

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது


            அரசுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
 
 

பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகளுக்கு போனஸ் மதிப்பெண்?


           பிளஸ் 2 கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகளுக்கு, போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என, சட்டசபையில் நேற்று வலியுறுத்தப்பட்டது. இதனால், கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
 

10th Students - Best of Luck



மேல்நிலைத் தேர்வு மைய மதிப்பீட்டு பணியை மேற்- கொள்ளாத அனைத்து SSA CEO / DIET முதல்வர்கள் / DIET விரிவுரையாளர்கள் / DEO / மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் SSLC கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவு.


               இன்று (27.03.2012) தொடங்கவுள்ள SSLC பொதுத் தேர்வில் கண்காணிப்பு பணியில் ஈடுபட, மேல்நிலைத் தேர்வு மைய மதிப்பீட்டு பணியை மேற்கொள்ளாத அனைத்து SSA CEO / DIET முதல்வர்கள் / DIET விரிவுரையாளர்கள் / DEO / மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 
 

சென்னைப் பல்கலை, தொலை நிலைக்கல்வி: இளநிலை படிப்புக்கு ஏப்ரல் 2க்குள் விண்ணப்பிக்கலாம்


            சென்னைப் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளுக்கு ஏப்ரல் 2ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

பிளஸ் 2 பிரதான பாடங்களின் தேர்வுகள் நிறைவு



          கணினி அறிவியல் தேர்வுடன் பிளஸ் 2 பிரதான தேர்வுகள் நேற்று நிறைவடைந்தன. கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
 

பொது சேமநல நிதி, அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு


                  பொது சேமநல நிதி, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்


 
          பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்குகிறது. 10.68 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம் தேதியில் இருந்து, நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன.
 
               இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive