பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும்
பணியில், இந்தாண்டு "திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு" பிழை இல்லாமல்
திருத்தம் செய்யப்படவுள்ளது என கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன்
தெரிவித்தார்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள்,
தமிழகம் முழுவதும், 55 மையங்களில் துவங்கியுள்ளது. இந்தாண்டு தேர்வு
மார்ச் 27ல் முடிகிறது. அதற்கு முன்பாகவே விடைத்தாள் திருத்தும் பணி
துவங்கியுள்ளது. இப்பணியை விரைந்து முடித்து, தேர்வு முடிவுகளை முன்
கூட்டியே வழங்க, பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.