Half Yearly Exam 2024
Latest Updates
தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
இரண்டு வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட அலகு
விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு
தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக பட்டதாரி
ஆசிரியர்களை பொருத்தவரை அவர்கள் பள்ளிக்கல்விதுறைக்கு ஈர்க்கப்பட்ட நாள்
முதலே முன்னுரிமை வைக்கப்படுவதால் அடுத்த TET மூலம் அடுத்த
பட்டதாரி நியமிக்கப்படும் முன் ஈர்க்கப்பட்டால் சற்று முன்னுரிமை
கிடைக்கும் மேலும் முதுகலை ஆசிரியராக பதவியுயர்வு பெற வாய்ப்பு என்று
கிட்டும் எதிர்பார்கின்றனர்.
தொடக்கக்கல்வி துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 20.03.2013 அன்றைய நிலவரப்படி காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின்
உத்தரவில் கூறியிருப்பதாவது : 20.03.2013 அன்றுள்ளபடி ஊராட்சி ஒன்றிய /
நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக
உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை உரிய படிவத்தில் 26.03.2013 அன்று
தொடக்கக் கல்விஇயக்ககத்தில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது
அளிக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு
கொள்ளப்படுகிறார்கள் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி : யூ.பி.எஸ்.சி., அறிவிப்பு
யூ.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வுகளில்
முதன்மை தேர்வை தங்களின் பிராந்திய மொழிலேயே தேர்வாளர்கள் எழுத அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே எழுத
வேண்டும்
என மார்ச் 5ம் தேதி யூ.பி.எஸ்.சி.,
அறிவித்திருந்ததற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து எழுந்த கடுமையாக
எதிர்ப்பை அடுத்து யூ.பி.எஸ்.சி., தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக
கூறப்படுகிறது.
நுழைவுத்தேர்வுகளுக்கு உதவும் ஆன்லைன் தேர்வுகள்!
நேரம் நிர்ணயித்து எழுதிப்பார்க்கும் தேர்வுக்கு முந்தைய மாதிரித்
தேர்வுகள், உங்களின் சுய மதிப்பீட்டிற்கு சிறந்த அளவுகோல்களாக திகழ்கின்றன.
தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு
தொடக்கக்கல்வித்துறையில் 20.03.2013 அன்று உள்ளபடி ஊராட்சி ஒன்றியம்/
நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள
ஆசிரியர் பணியிட விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் 26.03.2013 அன்று
தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்க
தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன . மேலும் இதேபோல் பள்ளிக்கல்விதுறையிலும் தகவல்
கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்"
"அரசுத் துறைகளில், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து,
புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, இனி, தேர்ச்சி சதவீதம்
அதிகரிக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் நடராஜ் கூறினார்.
.
உயிரியல், வரலாறு தேர்வு: 36 மாணவர்கள் சிக்கினர்
பிளஸ் 2 உயிரியல், வரலாறு தேர்வுகளில், 36 மாணவர்கள், "பிட்" அடித்து
பிடிபட்டனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று, உயிரியல், வரலாறு, தாவரவியல்,
வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடந்தன.
தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?
இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 2013-14ம் நிதியாண்டிற்கான,
தமிழக பட்ஜெட், மார்ச் 21ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல்
செய்தார். அதில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு கல்வித்
துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரங்கள்,
தமிழக அரசு பட்ஜெட் 2013-14: பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி
ஜெனீவா: ஐ.நா., வில் மனித உரிமைகள் கழகத்தில் இலங்கைக்கு
எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது. இதில் தீர்மானத்துக்கு
ஆதரவாக 25 நாடுகளும், தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகளும் ஓட்டுப்போட்டன. 8
நாடுகள் பங்கேற்கவில்லை. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா
ஓட்டுப்போட்டது.
பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாமா?
எழுதலாம். அரசு பணியே கிடைக்காதவர்கள் கூட தம் வீட்டு முகவரியை கொண்டு துறை தேர்வுகளை எழுதலாம்.
பகுதி நேர ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் அல்லது தொடக்க கல்வி துறை எனில் உதவி தொடக்க கல்வி அலுவலர் அனுமதியுடன் துறை தேர்வுகளை எழுதலாம். பின்னர் முழு நேர பணியாளராக ஆனதும் பணிப்பதிவேடு துவங்கிய பின்னர் அதில் தங்கள் துறைதேர்வு முடிவுகளை பதிவு செய்து கொள்ளலாம்.
குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை
"தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் -1 தேர்வுக்கான
வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும்" என, மார்க்., கம்யூ., கட்சி
கூறியுள்ளது.