சத்துணவில், விதவிதமான உணவு வகைகள் வழங்கும் திட்டம், மாவட்டத்திற்கு
ஒரு இடம் என, தமிழகம் முழுவதும், 32 இடங்களில் முன்னோடித் திட்டமாக
தொடங்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
நாமக்கல்லில் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
ஜெனிவா மனித உரிமை கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக தீர்மானம்
நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில், கல்லூரி மாணவர்கள், இலங்கை
தமிழர் முகாமை சேர்ந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு.
மார்ச் 21ஆம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில்
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்த துறை சார்ந்த அனைத்து விவரங்களும்
தாயாற்படுத்தி வைத்து கொள்ளவும், பட்ஜெட் நடக்கும் நாளன்று அனைத்து
இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆய்வு
அலுவலர்கள் அவர்களின் அலுவவலக தலைமை இடத்தில் இருக்க பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் அறிமுகம்
அரசு / ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் CCE
சார்பான பதிவேடுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள் ஆகியவற்றில் ஆசிரியர்களின்
சுமையை குறைப்பது மற்றும் CCE செயல்திறன் பற்றி அறிய "BEE EDUSYS" என்ற
நிறுவனம் மூலம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கு 2 அரசு
பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுத்து தமிழக முழுவதும் 64 பள்ளிகளுக்கு,
இச்செயல்திறன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, கணித வினாத்தாளில் ஏற்பட்டிருக்கும்
மாற்றம் குறித்த சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
கற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்!..
நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்கிறோம். கற்றல் செயல்பாடானது
24x7 என்ற தொடர்ந்த செயல்பாடாக நம் வாழ்வில் இடம்பெற்ற ஒன்று என்பதை
புரிந்துகொள்பவரே புத்திசாலி.
கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்
பள்ளி கல்வித்துறையில், விரைவில், 500 இளநிலை உதவியாளர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
"போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை"
டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழியின்
முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது போல் பேசுவது தவறு. தமிழ் மொழியை
புறக்கணித்து, தமிழக அரசுப் பணிகளுக்கு, பணியாளர்களை தேர்வு செய்ய
முடியாது" என, புதிய பாடத்திட்டங்களை உருவாக்கிய முன்னாள் தலைவர் நட்ராஜ்
கூறினார்.
ஒரே நாளில் 2 அரசுத் தேர்வு: மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்?
தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கான கடைசி தேர்வும்,
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் தேர்வும் ஒரே நாளில் நடக்கவுள்ளதால்,
பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேர்வு மையங்கள்
ஒதுக்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தலைமை ஆசிரியர்கள்
தெரிவிக்கின்றனர்.
மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்: பள்ளி திறக்கும் நாளில் வழங்க நடவடிக்கை
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை,
பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து
வருகிறது.
ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது
ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது.
தலைவர் சுபாஷ் சாஸ்திரி இது தொடர்பாக
கூறுகையில் DA 50% மேல் சென்றுவிட்டதால் ஏழாவது ஊதியகுழுவை அமைப்பதில்
காலம் தாழ்த்தக்கூடாது மேலும் அடிப்படை சம்பளத்தில் 50% DA வை
இணைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார் .
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு ரத்து கிடையாது: தேர்வுத்துறை - Dinamalar
வேதியியல், கணக்கு பதிவியலில் 122 மாணவர் சிக்கினர்
இதுவரை நடந்த பிளஸ் 2 தேர்வுகளில், அதிகபட்சமாக, நேற்று நடந்த
வேதியியல், கணக்குப் பதிவியல் தேர்வுகளில், மாநிலம் முழுவதும், 122
மாணவர்கள், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு, பறக்கும் படை குழுக்களிடம்
பிடிபட்டனர்.
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு கேள்வியில் குழப்பம்
பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு கேள்வி ஆங்கிலத்தில் சரியாகவும்,
தமிழில் தவறாகவும் உள்ளதால், 5 மதிப்பெண்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ,
என மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேதியியல் வினாத்தாள் எளிது: சென்டம் அதிகரிக்கும்
பிளஸ் 2 வேதியியல் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது என்பதால், பிற
பாடங்களை காட்டிலும் வேதியியல் பாடத்தில், "சென்டம்" எடுக்கும் மாணவர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு,
எதிர்பார்க்கும் கட்- ஆப் மதிப்பெண் பெற, வேதியியல் தேர்வு ஓரளவு கை
கொடுக்கும், என்ற நம்பிக்கை உள்ளதாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
அரசு துறைத் தேர்வுகள் அறிவிப்பு: ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம்
"அரசு ஊழியர்கள், அலுவலர்கள், துறைத் தேர்வுகளை எழுத, ஏப்ரல், 15ம் தேதி
வரை, "ஆன்-லைன்" வழியாக விண்ணப்பிக்கலாம்" என, டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.
புதிதாக 20 ஐ.ஐ.ஐ.டி.,கள்: மக்களவையில் மசோதா தாக்கல்
தற்போதுள்ள, நான்கு, ஐ.ஐ.ஐ.டி.,களுடன், மேலும், 20, இந்திய தகவல்
தொழில்நுட்ப கல்வி கழகங்களை துவக்க வகை செய்யும், மசோதா நேற்று,
லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
எம்.எஸ்சி., நர்சிங், எம்.பார்ம்., - எம்.பி.டி., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளிகளின் தரத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்க வலியுறுத்தல்
"தனியார் பள்ளிகள் அனைத்திற்கும், ஒரே விதமான கட்டணங்களை
நிர்ணயிக்காமல், தரத்திற்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும்" என, தமிழ்நாடு
மாணவர் - பெற்றோர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
Salem Vinayga Mission University - M.Phil Not Eligible to Promotion or Incentive
சேலம் விநாயகா மிசன் பல்கலைகழகம் இது வரை தமிழக அரசின் ஒப்புதல் ஆணை பெறப்படவில்லை என்பதால், அதில் பயின்ற M.Phil பட்டம் மூலம் பதவி உயர்வு அல்லது ஊக்க ஊதிய உயர்வு பெற வழி வகை இல்லை என பள்ளி கல்வி இணை இயக்குனர் RTI மூலம் தகவல் அளித்துள்ளார்.
மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் -அஜய் மகேன்
ஏழாவது ஊதிய குழு அமைக்கவேண்டும் என டாக்டர் மன்மோகன்சிங் அமைச்சரவையில்
முதல் குரலாக அஜய் மகேன் குரல் ஒலித்துள்ளது. மத்தியஅரசு ஊழியர்களுக்கு
7வது ஊதிய குழு அமைப்பது தற்போதைய சூழலில் தேவை எனவும் அதை
நடப்பாண்டிலேயே செய்யவேண்டும் எனவும் பாரத பிரதமரை யூனியன் மினிஸ்டர்
அஜய் மகேன் கேட்டுக்கொண்டுள்ளார்.