அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப்
பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. போட்டித்
தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களைப் போலவே, உயர் தரத்தில், துறைத் தேர்வு
பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், தேர்வு எழுதுவோர், இனி அதிக
கவனத்துடன் படித்து எழுத வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள்
தெரிவித்தன.
Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளிகளில் மாணவிகள் நடனமாட தடைவிதித்த பஞ்சாயத்து
அரியானாவைச் சேர்ந்த, பஞ்சாயத்து அமைப்பு, தங்கள் பகுதிகளில் நடக்கும் பள்ளி விழாக்களில், மாணவியர் நடனமாடுவதற்கு தடை விதித்துள்ளது.
ஜி.ஏ.டி.இ., தேர்வு முடிவுகள் வெளியீடு - பயோடெக்னாலஜியில் தஞ்சை மாணவி முதலிடம்
ஐ.ஐ.டி.,க்களில், எம்.டெக்., படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வு(கேட்) முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.
சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும்
சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும் என்பதை
நிரூபித்துக்காட்டியுள்ளார், பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த இளைஞர்
ஒருவர். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் நடத்திய பி.ஏ., தேர்வில் முதல்
ரேங்க் பெற்று, தங்கப்பதக்கம் வென்றுள்ளார், இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.
162 புதிய பி.எட்., கல்லூரிகள் துவங்க விண்ணப்பங்கள்: துணைவேந்தர்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 162 பி.எட்., கல்லூரிகள் துவக்க,
விண்ணப்பங்கள் வந்துள்ளன என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர்
விஸ்வநாதன் தெரிவித்தார்.
பள்ளிகளில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் - 360 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில், 14,130 பள்ளிகளில், வைப்பறையுடன் கூடிய சமையலறைகள்
கட்டுவதற்கு, 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
வணிகவியல் தேர்வு வினாத்தாளில், பல இடங்களில் எழுத்து பிழைகள் இருந்தன - Dinamalar
தமிழகம் முழுவதும் நடந்த வணிகவியல் தேர்வு வினாத்தாளில், பல இடங்களில்
எழுத்து பிழைகள் இருந்தன. விடைகளை தேர்ந்தெடுக்க வேண்டிய வினாக்களில்,
நான்கு விடைகளுக்கு பதில், மூன்று விடைகள் மட்டும் இடம் பெற்றிருந்தன. இது,
மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்திய வைரங்கள் கல்வி நிறுவனம்
கடந்த 1978ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட
இந்திய வைரங்கள் கல்வி நிறுவனம், வைரங்கள், ரத்தினங்கள் மற்றும் தங்க நகைத்
துறையில் ஆராய்ச்சி மற்றும் படிப்பகளை வழங்கும் ஒரு பிரதான நிறுவனம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு முறை மாற்றங்கள் நிறுத்தம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வு முறையில் மாநில
மொழிகளைப் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படும் வகையில் மாற்றங்கள்
செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில்,
இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
பிளஸ் 2 கணிதம்: ஆசிரியர், மாணவர் சொல்வது என்ன
"பிளஸ் 2 கணித தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன.
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான உணர்வை தரவில்லை" என ஆசிரியர்கள், மாணவர்கள்
கூறினர்.
பிளஸ் 2 கணிதம்: ஆங்கில வழி தேர்வர்கள் அதிருப்தி
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும்,
எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள்,
ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர். கணக்கு வினாத்தாள் கடினமாக இருப்பதாக
கூறி, பல தேர்வு மையங்களில், ஆங்கில வழி மாணவியர் கண்ணீர் விட்டு கதறி
அழுதனர்.
பிளஸ் 2 கணிதத் தேர்வு கடினம்; மாணவர்கள், ஆசிரியர்கள் கவலை
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும்,
எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள்,
ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர். இதனால், கணிதத்தில், நூற்றுக்கு நூறு
எடுப்பவர்கள் எண்ணிக்கை சரிவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும், கணித
ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும் தமிழ் மொழிக்கு பின்னடைவு
சிவில் சர்வீஸ் தேர்வைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும்,
தமிழ் மொழி பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இது,
கிராமப்புற தேர்வர்களுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மாநில வாரியான பல்கலைக்கழக விபரங்கள் (2012ம் ஆண்டின் படி)
இந்தியாவின் மாநில வாரியான பல்கலைக்கழக விபரங்கள் (2012ம் ஆண்டின் படி)
உலகத்தரம் வாய்ந்த கல்விநிறுவனம் அமைவதில் உள்ள சிக்கல்
பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா அளித்த சிறப்புப் பேட்டி:
கல்வி மேம்பாட்டை பொறுத்தே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி
அமைகிறது. எனவேதான், அனைத்து நாடுகளும் கல்விக்கு முக்கியத்துவம்
தருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில்
உயிர்கல்வி கற்போர் விகிதம் 50 முதல் 80 சதவீதமாக உள்ளது. இந்தியாவில்
உயர்கல்வி கற்போர் 12 சதவீதம் மட்டுமே.
TET Study Materials - 1st Schedule
தற்போது நம் வலைத்தளத்தில் உள்ள TET Study Material அனைத்தும் Wordpress மூலமாக பதிவேற்றப்படுவதால் நீங்கள் click செய்தவுடன் பார்க்க முடியும். Download செய்ய Ctrl + S எழுத்தை கொடுக்கவும்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும் தமிழ் மொழிக்கு பின்னடைவு
சிவில் சர்வீஸ் தேர்வைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும்,
தமிழ் மொழி பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இது,
கிராமப்புற தேர்வர்களுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உத்தரவு
"தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை
கண்டறிந்து, ஒளி-ஒலி காட்சி மூலம் கற்பிக்க வேண்டும்" என, மதுரை ஐகோர்ட்
கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி டாக்டர் விஜயரங்கன்
தாக்கல் செய்த பொது நல மனு: கற்றலில் குறைபாடுள்ள (டிஸ்லெக்சியா)
மாணவர்களால் சரளமாக, சத்தமாக பேச முடியாது. புதிய வார்த்தைகளை கற்க
முடியாது. உயர்கல்விக்குச் செல்லும் போதும், அதே நிலை நீடிக்கிறது. இதை
எளிதில் கண்டுபிடிக்க முடியாது.