Half Yearly Exam 2024
Latest Updates
2012-13ம் கல்வியாண்டில் AEEO/AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் (AEEO) பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு "English Communication Skill" பயிற்சியினை/ பரிசுகளை SCERT மற்றும் SSA இணைந்து அளிக்க திட்டம்
6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர்
மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த
மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு "English Communication
Skill" பயிற்சியினை/ பரிசுகளை SCERT மற்றும் SSA இணைந்து அளிக்க
திட்டம் ..
இமாச்சலில் கல்லூரி மாணவிகளுக்கு பெண் போலீஸ் பாதுகாப்பு
"இமாச்சல பிரதேசத்தில், கல்லூரி மாணவியரின் பாதுகாப்பிற்காக, ஒவ்வொரு
மகளிர் கல்லூரியிலும், பெண் போலீசார் பாதுகாப்புப் பணியில்
ஈடுபடுத்தப்படுவர்" என, அம்மாநில முதல்வர் வீர்பத்திரசிங் கூறினார்.
ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்!
படிப்பு சுமையாகிவிட்ட இக்காலத்தில், அதைச் சுவையாக்குவது எப்படி? என்று
யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை. பிறந்த குழந்தைக்கு 3 வயது எப்போது
ஆகும் என்று காத்திருக்கும் பெற்றோர், எங்கேயாவது பள்ளியில் தள்ளி விட்டு
விட்டு அவசர அவசரமாக வேலைக்கு ஓடும் காலம் இது. எனவே குழந்தைகளின் மன
வளர்ச்சி, அறிவு வளர்ச்சி அத்தனைக்கும் பொறுப்பு, பாடம் சொல்லித் தரும்
ஆசிரியர்கள்தாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி உயர்வு, மார்ச் 3வது வாரத்தில் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்ப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி
உயர்வு, மார்ச் 3வது வாரத்தில் முறையாக அறிவிக்கக்கூடும் என தகவல்கள்
தெரிவிக்கின்றன. அகவிலைப்படியானது, ACPIN-ன் குறியீட்டு கணக்கின் படி 8% ஆக
இருக்கும் எனவும், ஜனவரி 2013 முதல் கணக்கீட்டு வழங்கப்படும் எனவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடாததால் பெற்றோர் கவலை
பெரும்பாலான மாவட்டங்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தவிர்த்து,
இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படவில்லை. இதனால்,
கோடை விடுமுறைக்கு, வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பெற்றோர், கவலையில்
ஆழ்ந்துள்ளனர்.
பிளஸ் 2 முதன்மைத் தேர்வுகளை கண்காணிக்க 4,000 பேர்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழிப்பாடங்களில், 43 மாணவர்கள், "பிட்" அடித்து பிடிபட்டனர்.
துவக்கப் பள்ளி மாணவர் வாசிப்புத்திறன் குறைவு: இணை இயக்குனர் ஆய்வில் அதிர்ச்சி - Dinamalar
"துவக்கப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை, ஏப்ரல்
மாதத்துக்குள் அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், சம்மந்தப்பட்ட வகுப்பு
ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என, தொடக்கக்
கல்வித் துறை இணை இயக்குனர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வெளிநாடு செல்ல பல்கலைக்கு தலா ரூ.20 லட்சம்: அமைச்சர் பழனியப்பன்
""வெளிநாடு சென்று, மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை
வளர்த்துக்கொள்ள, ஒவ்வொரு பல்கலைக்கும் ஆண்டுதோறும் தலா 20 லட்ச ரூபாய்
அரசு ஒதுக்குகிறது,'' என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.
சிலம்பம்: அரசு பள்ளி மாணவன் சாதனை
திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர், சிலம்பத்தில் பதக்கங்களை குவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு காப்பீட்டு திட்டம் கிடைக்குமா?
கேந்திர வித்யாலயா பள்ளிகளை போல், தமிழக பள்ளி மாணவர்களுக்கும்
காப்பீடு (இன்சூரன்ஸ்) திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற, எதிர்பார்ப்பு
பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் கைது
சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்களை போலீசார்
கைது செய்தனர்.மேலும் உண்ணாவிரத பந்தலுக்கும் சீல் வைக்கப்பட்டது.
வானவில் ஔவையார் எழுத்துருவை பயன்படுத்தி தட்டச்சு செய்ய எளிய வழி
தமிழக
அரசு அலுவலகங்களிலும், கல்வித்துறையிலும் அலுவலக ரீதியிலான தகவல்
தொடர்புகள் மற்றும் டாக்குமென்ட்களில் வானவில்-ஔவையார் எழுத்துரு
பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு தனியார் நிறுவனத்தின் எழுத்துரு ஆகும்.
இதனை தட்டச்சு செய்ய அவர்களது நிறுவனத்தின் மென்பொருளையே பயன்படுத்த
வேண்டியிருக்கிறது. பொதுவாக இந்த மென்பொருளை வாங்குவதற்கு என்று அரசு
அலுவலகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. இதனால் அரசு
அலுவலகங்கள் கிராக் செய்யப்பட்ட மென்பொருளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை
இருக்கிறது. கிராக் செய்யப்பட்ட மென்பொருளும் வின்டோஸ் 7 இயக்கச்சூழலில்
வேலை செய்வது இல்லை.
வேறு இலவச மாற்று வழி இருப்பின் அரசு அலுவலகங்களுக்கு மிகவும்பயனுடையதாக இருக்கும். என்.எச்.எம் ரைட்டர் இதற்கு மிகப் பெரிய தீர்வாக அமைந்துள்ளது. (ஆமாம்! யுனிகோடுக்கு மாற வேண்டியது தானே!)
என்.எச்.எம் ரைட்டரை வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சு செய்ய பயன்படுத்துதல்.
TPF to GPF Proposal - Always Available our Padasalai Site in Forms & Proposals Tab
அன்புள்ள ஆசிரியர்களே நீங்கள் முன்னதாக TPF இல் இருந்து தற்போது GPF இல் தொடர விரும்புகிறீர்களா?
இதோ உங்களுக்காக மிக அறிய Proposal
"மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்"
"மக்களிடையே அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்" என கருத்தரங்கில் தெரிவிக்கப்ட்டது.
வறுமையே தடைக்கல்லாய் முன் நிற்கிறது
கால்பந்தாட்ட போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி சாதிக்கத்
துடிக்கும், சேலம் மாணவிக்கு பொருளாதார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும்
உதவிக்கரம் தேவைப்படுகிறது.
அமெரிக்காவில், 106 வயது மூதாட்டி, தன் பள்ளி சான்றிதழை, பல ஆண்டுகளுக்கு பின் பெற உள்ளார்.
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .
(((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்)))
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்