கல்வியில்
பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் -தினமலர் செய்தி
எதிரொலி-விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர்
செயல்முறை
Half Yearly Exam 2024
Latest Updates
விடைத்தாள் திருத்துவதில் தவறு ஆசிரியர்களுக்கு அபராதம்
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களின்
விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு தண்டனை,
அபராதம் வழங்க, கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
12 வயதில் குழந்தைப் பருவம் முடிந்துவிடுகிறது: ஆய்வுகள்
வளர் இளம் பருவத்தை எட்டுவதற்குள் தங்கள்
குழந்தைகளின் குழந்தைப் பருவம் முடிந்துவிடுவதாக மூன்றில் இரண்டு பங்கு
பெற்றோர்கள் ஒரு ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள் காமாலை உருவாகக் காரணம் மற்றும் தீர்வு
இந்தி, உருது மொழிக்கல்வியின் நன்மைகள்
இந்தியாவில் ஏராளமான மொழிகள் பேசப்படுகின்றன. வடமொழிக் குடும்பம்
மற்றும் திராவிட மொழிக் குடும்பம் என்று இரண்டு பெரிய பிரிவுகளாக
பிரிந்துள்ள அம்மொழிகளில், பல்வேறான வேலைவாய்ப்புகள் உள்ளன.
பிளாஸ்டிக் அழிக்க ஆராய்ச்சி: பேராசிரியருக்கு விருது
மக்காத பிளாஸ்டிக் கழிவுகளான கேரிபேக், வாட்டர் பாட்டில்களை,
நுண்ணுயிரை பயன்படுத்தி சிதைவடைய செய்யும் ஆராய்ச்சியில் வெற்றி கண்ட மதுரை
போராசிரியர் வி.பிரபாகரனுக்கு, டில்லி விஞ்ஞானிகள் அமைப்பு சார்பில்
அச்யூமென்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நேரில் கற்றுத் தருவதை விட, கம்ப்யூட்டர் மூலம் கற்பித்தல் எளிமையாக புரியும்படி உள்ளது
பள்ளிப் பாடத்தை, கம்ப்யூட்டர் வழியில் கற்றுத்
தருவதற்கான செயல் திட்டங்களுக்கு, தேசிய கற்பித்தல் விருது
வழங்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர்களிடம் இருந்து, செயல் திட்டங்கள்
வரவேற்கப்பட்டன.
பொதுவான பாடத்திட்டங்கள், முன்னேற்றத்திற்கு உதவாது: யு.ஜி.சி
"நாடு முழுவதும், ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் என்பது,
முன்னேற்றத்திற்கு உதவாது. ஒவ்வொரு பகுதியிலும், அங்குள்ள தேவையை அறிந்து,
அதற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி, கல்வியை வழங்கினால் தான், நாடு
முன்னேறும்" என, பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் (யு.ஜி.சி) வேத் பிரகாஷ்
பேசினார்.
பழங்குடியின மாணவர்களுக்கு ஊக்கமளிக்க பயிற்சிகள்
முதுமலை கார்குடியில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. முதுமலை புலிகள் காப்பகம் கார்குடியில் அரசு பழங்குடியினர் உண்டு
உறைவிடப் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் அனைத்து
மாணவர்களும், பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்.
01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை (09.03.2013) அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.
01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான
பதவியுயர்வு கலந்தாய்வு நாளை (09.03.2013) அந்ததந்த மாவட்ட
தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.
சான்றிதழ்கள், ஓய்வூதியம் வழங்க இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு அபராதம்
பாஸ்போர்ட், ஓய்வூதியம், பிறப்பு மற்றும் இறப்புச்
சான்றிதழ் உள்ளிட்ட, பொதுமக்களுக்கான சேவைகளை, குறித்த நேரத்தில்
வழங்காமல், இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு, கடிவாளம் போடப்பட உள்ளது.
சேவைகளை குறித்த நேரத்தில் வழங்காத அதிகாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை,
அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை,
நேற்று ஒப்புதல் அளித்தது.
ஆங்கிலம் 2ம் தாள் தேர்வு: 12 மாணவர்கள் சிக்கினர்
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த ஆங்கில இரண்டாம் தாள் தேர்வில், 12
மாணவர்கள், பிட் அடித்து, பிடிபட்டனர். தேர்வு முறைகேடுகள் தொடர்பாக,
இதுவரை, 66 மாணவர்கள் பிடிபட்டு, தேர்வுத்துறையின் தண்டனை வளையத்தில்
சிக்கியுள்ளனர்.
செய்முறை வகுப்பு: 10ம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு சிக்கல்
செய்முறை வகுப்புக்கு விண்ணப்பிக்க தவறிய, பத்தாம் வகுப்பு தனித் தேர்வு
மாணவர்கள், உடனடி தேர்வு எழுத, ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
36 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு, 36 மையங்களை தயார் நிலையில்
வைக்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும் தேதி அறிவிக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பள்ளிப் பேருந்துகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா
மும்பையில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளிலும், ரகசிய கண்காணிப்பு
கேமராக்களை பொருத்த, போலீசார் உத்தரவிட்டுள்ளனர். பேருந்து ஊழியர்களால்,
மாணவிகள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக புகார்கள் வந்துள்ளதை அடுத்து,
இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
GPF Forms ( Full Set for Bill Preparation ) now available our site
Thanks to Mr. Sugumar,
Headmaster,
GHS,
Vilai,
Thiruvannamalai District.
+2 Study Material
- Analysis of 5 mark PROBLEMS in PHYSICS asked in the Board examination (March 2006 to October 2012)-Prepared By Mr.Natrajan,PGAsst,GHRSS,Alakkudi,Thanjavur Dt.
ஆட்டிசம் குழந்தை பயிற்சி முகாம்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்
சிறப்பாசிரியர்களுக்கு, ஆட்டிசம் குழந்தைகள் பற்றி பயிற்சி முகாமில்,
சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேசிய நிறுவனம் மற்றும் சித்தர் நிறுவனமும்
இணைந்து நடத்திய ஆட்டிசம் குழந்தைகள் பற்றிய பயிற்சி முகாமில், சான்றிதழ்
வழங்கும் நிகழ்ச்சி, கரூர் வெண்ணைமலையில் நடந்தது. இதில் நகராட்சி தலைவர்
செல்வராஜ் தலைமை வகித்து, சான்றிதழ்களை வழங்கினார். ஒன்றுக்கும் மேற்பட்ட
ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் தலைவர் டாக்டர் நீரதா, ஆட்டிசம்
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகவல் தொடர்பு திறன் மேம்பாடு குறித்து
பயிற்சிகளை அளித்தார்.
அண்ணா பல்கலை: இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
அண்ணா பல்கலைக்கழகத்தில், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்போர் திறனை கண்டறிய புது மாற்றம்
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீசஸ் தேர்வில் பொது
பாட பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. இதற்கான, அறிவிப்பை, மத்திய பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்டது.
டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவர் யார்... ஓரிரு நாளில் அறிவிப்பு?
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், வரும் 12ம் தேதியுடன்
முடிகிறது. எனவே, புதிய தலைவர் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில்
வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிப்படையான செயல்பாட்டால் டி.என்.பி.எஸ்.சி., மீது நம்பிக்கை
சென்னை பல்கலை மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தின், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.