Half Yearly Exam 2024
Latest Updates
5-ம் வகுப்பு மாணவர்களிடம் தமிழ் வாசிப்புத் திறன் இல்லை
ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 20
சதவிகிதம் பேரிடம் தமிழ் வாசிப்பு திறன் இல்லை என செஞ்சியில் நடைபெற்ற
வாசிப்புத்திறன் குறித்த விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டத்தில் மாநில
தொடக்கக்கல்வி இணை இயக்குநர்
லதா வேதனையுடன் தெரிவித்தார். இந்நிலைக்கு
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களே பொறுப்பாவர். வாசிப்புத்திறனை
மேம்படுத்தாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்
எச்சரித்தார்.
கல்வித்துறை இயக்குனர்கள் அனைவரும், முக்கிய பாட தேர்வுகளை கண்காணிக்க, பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்
வரும், 11ம் தேதி முதல் நடக்க உள்ள, பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகளை,
கல்வித்துறை இயக்குனர்களும், நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என,
பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப் பள்ளிகள்
மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரண்டாவது
கட்டமாக, கல்வியில் பின்தங்கியுள்ள, 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப்
பள்ளிகள், வரும் கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளன. கட்டடப் பணிகள் இன்னும்
துவங்காததால், தற்காலிகமாக, அரசுப் பள்ளிகளில், மாதிரிப் பள்ளிகள் இயங்கும்
என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குரூப்-2: 230 பதவிகளுக்கு 4ம் கட்ட கலந்தாய்வு
கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வு நடந்தது. இந்த
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மூன்று கட்டமாக நடந்தது.
இதில் 2,941 பேருக்கு பணி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன . மேலும் 230 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டலிஜென்ஸ் டெஸ்டில் ஐன்ஸ்டீனை முந்திய இந்திய சிறுமி
இன்டலிஜென்ஸ் டெஸ்டில், பிரபல விஞ்ஞானிகள், ஐன்ஸ்டீன்
மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை முந்தி 12 வயது இந்திய சிறுமி சாதனை
படைத்துள்ளார்.
9 பல்கலைகளுக்கு நவரத்தினா அந்தஸ்து: ரூ.300 கோடி கூடுதல் மானியம்
பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) சார்பில் அளிக்கப்படும், நவரத்தினா
பல்கலை அந்தஸ்து பெற, தமிழகத்தில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. தேர்வு
செய்யப்படும் ஒன்பது பல்கலைகளுக்கு, தலா, 300 கோடி ரூபாய், கூடுதல் மானியம்
கிடைக்கும்.
தேர்ச்சி பெற்றும் பணியில்லை: தாவரவியல் பட்டதாரிகள் தவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்திய போட்டி
தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், இதுவரை பணி நியமனம் கிடைக்காமல்,
தாவரவியல் முதுகலை பட்டதாரிகள் தவிக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்
விழுப்புரம் செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
விழுப்புரம் மந்தக்கரை புதுத்தெரு பகுதியில் உள்ள செயின்ட்
ஜான் மாற்றுதிறனாளிகள் மேல்நிலை பள்ளியில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை
மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
ஆய்வக பயிற்சியில் மாணவி காயம்: 2 பேர் மீது வழக்கு
செஸ் போட்டியில் மாணவர் சாதனை
செஸ் போட்டியில், அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக்.,
மேல்நிலைப்பள்ளி சார்பில் வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம்,
மன்னார்குடியில் கடந்த, 2ம் தேதி, மாநில அளவிலான செஸ் போட்டிகள்
நடைபெற்றது. இதில் 7, 9, 11, 13, மற்றும் 17 வயதுக்குட்பட்டோருக்கான
சதுரங்க போட்டிகள், ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது.
முதுநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் நியமனம் வழங்கப்பட்டது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்
பெறுவதற்கான கலந்தாய்வு செவ்வாய்க் கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
ஆன்லைன் மூலமாக தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் கலந்தாய்வுகள்
நடத்தப்பட்டன.
2011 - 12 ஆண்டிலும் அதற்கு முந்தைய
ஆண்டுகளிலும் உருவான 700 காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
முதலில் உள் மாவட்டங்களில் பணி பெறுவதற்கான கலந்தாய்வும், பிறகு பிற
மாவட்டங்களில் பணி பெறுவதற்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டது. மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வுகள்
நடத்தப்பட்டன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் M.Com. (Financial Management), M.Com. (Bank Management), M.Com. (Computer Application), B.Com.(Applied), B.Com. (Bank Management) and B.Com. (கம்ப்யூட்டர் Application) ஆகிய பட்டப்படிப்புகள் B.Com., மற்றும் M.Com., பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வுக்கு அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களை சிறப்பு பார்வையாளராக மாவட்ட வாரியாக நியமித்து தேர்வுத்துறை உத்தரவு.
மேல்நிலைத் தேர்வில் அதிக முக்கியத்துவம்
வாய்ந்த கணிதம், இயற்பியல், வேதியியல், உயரியியல், தாவரவியல் மற்றும்
விலங்கியல் ஆகிய ஆறு பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும் நாட்களில் தேர்வு
மையங்களை கண்காணித்திட அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டைகளைப் போலவே
இவ்வாண்டும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மற்றும் மாவட்டக் கல்வி
அலுவலர்களும் வருகின்ற பேராசிரியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க
அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
7வது சம்பள கமிஷன் அமைக்க திட்டமா?
7வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில்
இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதித்துறை
இணையமைச்சர் நமோ நாராயன் மீனா லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த
பதிலில்ல 6வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் ஜனவரி 2006 1ம் தேதி முதல்
அமல்படுத்தப்பட்டுள்ளது, 7வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை
உள்ளது. ஆனால் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சம்பள கமிஷன்
அமைக்கப்படுகிறது என கூறினார்.
10ம் வகுப்பு கணித வினாத்தாளில் மாற்றம்: 100/100 அள்ளலாம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணித வினாக்கள் அமைப்பில், இந்தாண்டு
தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தாண்டு கணிதத்தில்
"நூற்றுக்கு நூறு" மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை
அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
10ம் வகுப்பு தனி தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு
பத்தாம் வகுப்பு பொது தேர்வை, தனி தேர்வாக எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க
தவறிய மாணவ, மாணவியர், தத்கால் திட்டத்தில், 6,7ம் தேதிகளில், இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வழக்கு
பிளஸ் 2 பிரெஞ்ச் தேர்வு: புரியாத கேள்விகளால் திணறிய மாணவர்கள்
தமிழகத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 பிரெஞ்ச் இரண்டாம் தாள் தேர்வில்,
மாணவர்களை குழப்பும் வகையில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டன. இதன் காரணமாக
தவறான வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இந்திய டாக்டர்கள் மீது தகுதி தேர்வில் பிரிட்டன் பாரபட்சம்
பிரிட்டனில், டாக்டர்களுக்கான தகுதி தேர்வில், இந்தியர்கள் வேண்டுமென்றே தகுதியிழப்பு செய்யப்படுவதாக, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ் 2ம் தாள் தேர்வில் 11 பேர் சிக்கினர்
தமிழகத்தில் நேற்று நடந்த, பிளஸ் 2 தமிழ் இரண்டாள் தாள் தேர்வில், பிட்
அடித்த, 11 மாணவர்கள் பறக்கும் படை குழுவினரிடம் சிக்கினர். இதன் காரணமாக
தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளில் சிக்கிய மாணவர் எண்ணிக்கை,
17 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில், தலா ஒரு மாணவர், கடலூர்,
காஞ்சிபுரம், அரியலூர் மாவட்டங்களில், தலா இரு மாணவர் மற்றும் திருவள்ளூர்
மாவட்டத்தில், மூன்று மாணவர் என, 11 பேர், பறக்கும்படை குழுவினரிடம்
சிக்கினர். கடந்த, 1ம் தேதி நடந்த தேர்வில், ஆறு மாணவர்கள் சிக்கினர்.
தமிழ் 2ம் தாள் தேர்வு: மாணவ, மாணவியர் ஏமாற்றம்
பிளஸ் 2, தமிழ் முதற்தாள் கேள்வித்தாள், ரிப்பீட் ஆனது போல், இரண்டாம்
தாள் கேள்வித்தாளும் இருக்கும் என, எதிர்பார்த்து, மாணவ, மாணவியர் ஏமாற்றம்
அடைந்தனர்.
ஆசிரியர் பட்டய தேர்வு: 36.57% பேர் தேர்ச்சி
தொடக்க கல்வி, இரண்டாம் ஆண்டு பட்டயத் தேர்வில், 36.57 சதவீத தனி தேர்வர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தொடக்கக் கல்வி, இரண்டாம் ஆண்டு தனித்தேர்வு மாணவர்களுக்கான பட்டயத்
தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடந்தது. தேர்வுத்துறை நடத்திய இத்தேர்வில்,
35,640 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, 2ம் தேதி வெளியானது.
இதில், 13,037 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம்
36.57. தோல்வியுற்ற மாணவ, மாணவியரில், பெரும்பாலானோர், ஆங்கிலப் பாடத்தில்
தோல்வி அடைந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அனிமேஷன் துறை - அம்சங்கள், பணிவாய்ப்புகள்!
திரையில் உயிரோட்டமாக காட்டுவதற்காக, உருவங்களை படைக்கும் கலைக்கு
அனிமேஷன் என்று பெயர். இக்கலையானது, கலையம்சமான படங்கள், வணிகப் படங்கள்,
பாப் வீடியோக்கள், கம்யூட்டர் கேம்ஸ் மற்றும் வலைத்தளங்கள் என்ற வகையில்
அனைத்து வகை மீடியாக்களிலும், இந்த அனிமேஷன் பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் ஒரே சமயத்தில் சம்பளம்-புதிய சாப்ட்வேர் அறிமுகம்
புதிய சாப்ட்வேர் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 5 வருடங்களாக இசிஎஸ் முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறையில் அரசுத் துறைகள், பள்ளிகள் சம்பளப் பட்டி யலை சிடி மூலம் கருவூலத்தில் கொடுத்து விட வேண்டும். கருவூல அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் அந்த பட்டியல் அந்தந்த மாவட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் வங்கிகள் மூலம் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேமிப்பு கணக்கில் சம்பளம் போய் சேர்ந்து விடும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு நேரம் குறைப்பு
வேலைவாய்ப்பு அலுவலகங்களில், நிர்வாக காரணங்களுக்காக சான்றிதழ்கள் பதிவு செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால், பதிவு,
புதிப்பித்தல், முகவரி மாற்றும் மற்றும் விசாரணை குறித்த அனைத்து
அலுவல்களும், பகல் 3 மணிக்குள் முடிக்கப்படும்.