Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Part Time Teachers Priority | பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்


       பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சேலத்தில் நடந்த விழாவில் செம்மலை எம்.பி., பேசினார்.

10ம் வகுப்பு கணித வினாத்தாளில் மாற்றம்: 100/100 அள்ளலாம்


         பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணித வினாக்கள் அமைப்பில், இந்தாண்டு தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தாண்டு கணிதத்தில் "நூற்றுக்கு நூறு" மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

10ம் வகுப்பு தனி தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு


     பத்தாம் வகுப்பு பொது தேர்வை, தனி தேர்வாக எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், தத்கால் திட்டத்தில், 6,7ம் தேதிகளில், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வழக்கு



      கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க, ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.


பிளஸ் 2 பிரெஞ்ச் தேர்வு: புரியாத கேள்விகளால் திணறிய மாணவர்கள்


      தமிழகத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 பிரெஞ்ச் இரண்டாம் தாள் தேர்வில், மாணவர்களை குழப்பும் வகையில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டன. இதன் காரணமாக தவறான வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய டாக்டர்கள் மீது தகுதி தேர்வில் பிரிட்டன் பாரபட்சம்


         பிரிட்டனில், டாக்டர்களுக்கான தகுதி தேர்வில், இந்தியர்கள் வேண்டுமென்றே தகுதியிழப்பு செய்யப்படுவதாக, வழக்கு தொடரப்பட்டுள்ளது.


தமிழ் 2ம் தாள் தேர்வில் 11 பேர் சிக்கினர்


      தமிழகத்தில் நேற்று நடந்த, பிளஸ் 2 தமிழ் இரண்டாள் தாள் தேர்வில், பிட் அடித்த, 11 மாணவர்கள் பறக்கும் படை குழுவினரிடம் சிக்கினர். இதன் காரணமாக தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளில் சிக்கிய மாணவர் எண்ணிக்கை, 17 ஆக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில், தலா ஒரு மாணவர், கடலூர், காஞ்சிபுரம், அரியலூர் மாவட்டங்களில், தலா இரு மாணவர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று மாணவர் என, 11 பேர், பறக்கும்படை குழுவினரிடம் சிக்கினர். கடந்த, 1ம் தேதி நடந்த தேர்வில், ஆறு மாணவர்கள் சிக்கினர்.

தமிழ் 2ம் தாள் தேர்வு: மாணவ, மாணவியர் ஏமாற்றம்


     பிளஸ் 2, தமிழ் முதற்தாள் கேள்வித்தாள், ரிப்பீட் ஆனது போல், இரண்டாம் தாள் கேள்வித்தாளும் இருக்கும் என, எதிர்பார்த்து, மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆசிரியர் பட்டய தேர்வு: 36.57% பேர் தேர்ச்சி


     தொடக்க கல்வி, இரண்டாம் ஆண்டு பட்டயத் தேர்வில், 36.57 சதவீத தனி தேர்வர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.

     தொடக்கக் கல்வி, இரண்டாம் ஆண்டு தனித்தேர்வு மாணவர்களுக்கான பட்டயத் தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடந்தது. தேர்வுத்துறை நடத்திய இத்தேர்வில், 35,640 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, 2ம் தேதி வெளியானது.
இதில், 13,037 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 36.57. தோல்வியுற்ற மாணவ, மாணவியரில், பெரும்பாலானோர், ஆங்கிலப் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


அனிமேஷன் துறை - அம்சங்கள், பணிவாய்ப்புகள்!


        திரையில் உயிரோட்டமாக காட்டுவதற்காக, உருவங்களை படைக்கும் கலைக்கு அனிமேஷன் என்று பெயர். இக்கலையானது, கலையம்சமான படங்கள், வணிகப் படங்கள், பாப் வீடியோக்கள், கம்யூட்டர் கேம்ஸ் மற்றும் வலைத்தளங்கள் என்ற வகையில் அனைத்து வகை மீடியாக்களிலும், இந்த அனிமேஷன் பயன்படுத்தப்படுகிறது.


அனைத்து அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் ஒரே சமயத்தில் சம்பளம்-புதிய சாப்ட்வேர் அறிமுகம்



         புதிய சாப்ட்வேர் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
          அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 5 வருடங்களாக இசிஎஸ் முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறையில் அரசுத் துறைகள், பள்ளிகள் சம்பளப் பட்டி யலை சிடி மூலம் கருவூலத்தில் கொடுத்து விட வேண்டும். கருவூல அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் அந்த பட்டியல் அந்தந்த மாவட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் வங்கிகள் மூலம் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேமிப்பு கணக்கில் சம்பளம் போய் சேர்ந்து விடும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு நேரம் குறைப்பு


         வேலைவாய்ப்பு அலுவலகங்களில், நிர்வாக காரணங்களுக்காக சான்றிதழ்கள் பதிவு செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

          மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால், பதிவு, புதிப்பித்தல், முகவரி மாற்றும் மற்றும் விசாரணை குறித்த அனைத்து அலுவல்களும், பகல் 3 மணிக்குள் முடிக்கப்படும்.

PGT ONLINE COUNSELLING | 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 03.06.2013 அன்று பணியில் சேர வேண்டும்.


            2011-12ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற நபர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலகங்களில் நடைபெறுகிறது. 2011-12ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து, 700 இடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை,பள்ளிக் கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., வழங்கியது. இவர்கள், வரும், 5ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கும், "ஆன்-லைன்' கலந்தாய்வு மூலம், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

இந்த கலந்தாய்வில் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 

1.    ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான  கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு  அன்றே தொடர்ந்து  அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட  வேண்டும். 



TET Tamil Study Material

மனம் தளராமல் நின்று கொண்டே தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவி


        வினோதமான உடல்நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள, பிளஸ் 2 மாணவி, நின்று கொண்டே தேர்வு எழுதுகிறார்; அவரால் உட்கார முடியாது என்பதால், நின்றே தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.

           மும்பையில், வாசி பகுதியைச் சேர்ந்த பிரவினாவின் மகள், ஹெமிதா ஷா, பிளஸ் 2 படிக்கிறார். சிறு வயது முதலே, "மஸ்குலர் டிஸ்ட்ரோபி" எனப்படும், உடல் தசை குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், 18 வயதான போதிலும், சிறுமி போலவே காணப்படுகிறார்.


பள்ளி, கல்லூரி விடுதிக்கான சிலிண்டர் விலை சரிவு


          வீடுகளுக்கு வினியோகிக்கப்படும், மானியம் இல்லாத சிலிண்டரை, பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு வழங்க, எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவு காரணமாக, இனி, பள்ளிக் கல்லூரி விடுதிகளுக்கு, மானியம் இல்லாத சிலிண்டர், 932.50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் விடுதிகளுக்கு, சிலிண்டர் ஒன்றுக்கு, 328 ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது.

தேர்வை சமாளிக்க சார்ஜர் விளக்கு: பார்வை பாதிக்கும் என பெற்றோர் கவலை


          தேர்வு நேரத்திலும், இரவு நேர மின்தடை தொடர்வதால், மாணவர்கள் எல்.இ.டி., சார்ஜர் விளக்குகளை கொண்டு படிக்கின்றனர். குறைந்த வெளிச்சம் மற்றும் கண்ணுக்கு அருகில் விளக்குகள் வைக்கப்படுவதால், மாணவர்களின் பார்வைத் திறன் பாதிக்கப்படும் என, பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

             ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படுகிறது. மாலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணிக்குள்ளாக இரண்டு மணி நேரம் கட்டாயம் மின்தடை உள்ளது.


வீடியோ கான்பரன்ஸ் மூலம் 20 ஆயிரம் கல்லூரிகளை இணைக்கும் சாப்ட்வேர்


              நாடு முழுவதும் உள்ள, 20 ஆயிரம் கல்லூரிகளை இணைக்கும், வீடியோ கான்பரன்ஸ் சாப்ட்வேர், விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால், தொலை தூரங்களில் உள்ள கல்லூரிகளுக்கும், நல்ல தரமான கல்வி சாத்தியமாகும்.

விடையுடன் பிளஸ் 2 வினாத்தாள்: மணிப்பூரில் பரபரப்பு


        மணிப்பூரில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, கேள்வித்தாளுடன் விடைகளும் சேர்த்து அச்சடிக்கப்பட்ட தாள் கொடுக்கப்பட்டது. இதை தாமதமாக கண்டறிந்த அதிகாரிகள், தேர்வை ரத்து செய்ததுடன், வேறொரு நாளில் தள்ளிவைத்தனர்.

ஆசிரியர் பயிற்சி தனிதேர்வு முடிவு அறிவிப்பு


      கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

        கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நடராசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2012 ஜூன் மாதம் நடந்த டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச் 2) அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

போதை ஆசிரியர்களை போலீசில் பிடித்து கொடுத்த பள்ளி மாணவர்கள்


         தாங்கள் பணியாற்றும் பிரபல பள்ளியில், தங்களின் குழந்தைகளுக்கு, அட்மிஷன் கிடைத்ததை, பள்ளியிலேயே மது அருந்தி ஆசிரியர்கள் கொண்டாடியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பந்தயக் குதிரைகளா மாணவர்கள்?-தினமணி கட்டுரை


        அரசுத் தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்குப் பரிசு வழங்குவதும், பாராட்டுவதும் மற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஓர் அணுகுமுறையாக இருக்கலாம். தொழிற் கல்லூரிகளில் இடம் கிடைக்க பள்ளித் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் பெறவேண்டும் என்ற நிலை இருப்பதால் அவற்றில் இடம் பிடிக்க நினைப்பவர்களுக்கு இந்த அணுகுமுறையால் ஊக்கம் கிடைக்கக் கூடும்.
 

TET - TRB Syllabus & Model Question Paper - Published by TRB.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1
 2 in 1
3 in 1
 Syllabus 
 Syllabus 



பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2
 2 in 1
3 in 1
 Syllabus 
 Syllabus 


TET - 2013 Application Sales Centre List

முதுகலை ஆசிரியர்களுக்குமார்ச் 5 ல் கவுன்சிலிங்



      ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம் மாதம் 5ல் கவுன்சிலிங் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, 2308 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் பெற்றனர். 

தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.



    தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது. 

How to Conduct PG Counselling?


How to Conduct PG Counseling? - Instruction will Publish Today Evening

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் துவக்கம்


         நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளும், நேற்று துவங்கின. 10ம் வகுப்பு தேர்வு, வரும் 15ம் தேதி வரையும், பிளஸ் 2 தேர்வுகள், 17ம் தேதி வரையும், தொடர்ந்து நடக்கின்றன.

இரு தேர்வுகளையும் சேர்த்து, சென்னை மண்டலத்தில், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.


பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்


         பள்ளிகளில், மாணவியருக்கு எதிரான, பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறை களைத் தடுக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து மாணவியருக்கு, தற்காப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

திருட்டை தடுக்க புதிய முறை: பிளஸ் 2 வினாத்தாளில் வரிசை எண்


        பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாளில், முதன் முறையாக வரிசை எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. வினாத்தாள் திருடப்படுவதை தடுக்க இந்த புதிய முறையை கல்வித்துறை இந்த ஆண்டு அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive