2011-12ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற நபர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. 2011-12ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து, 700 இடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை,பள்ளிக் கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., வழங்கியது. இவர்கள், வரும், 5ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கும், "ஆன்-லைன்' கலந்தாய்வு மூலம், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்த கலந்தாய்வில் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
1. ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அன்றே தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட வேண்டும்.