பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாளில், முதன் முறையாக வரிசை எண்கள்
குறிப்பிடப்பட்டுள்ளது. வினாத்தாள் திருடப்படுவதை தடுக்க இந்த புதிய முறையை
கல்வித்துறை இந்த ஆண்டு அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
தமிழ் முதல் தாள் மிக எளிது: மாணவர்கள் மிகழ்ச்சி
பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது என,
மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும், அரையாண்டு
தேர்வில் தமிழ் முதல்தாள் கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த 29
மதிப்பெண்களுக்கான 8 கேள்விகள், நேற்று நடந்த பொதுத்தேர்வில் வரிசை எண்
மாறாமல் இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ் முதல் தாள் தேர்வு: முறைகேடு செய்த 6 மாணவர்கள் சிக்கினர்
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நேற்று துவங்கியது. 8.5
லட்சம் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன், மொழி முதல் தாள் தேர்வில்
பங்கேற்றனர். மொழிப் பாடமான தமிழ்த் தேர்விலும், பிட் அடித்த 6 மாணவர்கள்,
பறக்கும் படை குழுவினரிடம் சிக்கினர்.
நம்பிக்கை விதைத்த பிளஸ் 2 மாணவ, மாணவியர்
விபத்தில் சிக்கி, உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், மனஉறுதியுடன் பிளஸ் 2 தேர்வு எழுதினார், தேனி மாணவர் தனசேகரன்.
தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்த இவர், மேலப்பேட்டை இந்து நாடார்
மெட்ரிக் பள்ளியில் படிக்கிறார். நேற்று முன்தினம் காலை, நண்பர்களுடன்
அங்குள்ள கண்மாய் கரைக்கு சென்றார். அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்ததால்,
மின்சாரம் பாய்ந்து செயல் இழந்தவரை, நண்பர்கள் காப்பாற்றினர்.
11 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம்
"வரும் மே மாதத்துடன், பழைய கல்வி கட்டணம் முடிவுக்கு வரும் நிலையில்,
11,626 தனியார் பள்ளிகளுக்கு, ஆகஸ்ட் 26ம் தேதிக்குள், அடுத்த மூன்று
கல்வி ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்" என, கட்டண நிர்ணயக்
குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்.
TNTET 2013 EXAM DATE - பரவும் புரளி குருஞ்செய்திகள்...
சமூகத்தில் புரளிகளுக்கு என்று ஒரு இடம் எப்போதும் உள்ளது என்பது உண்மைதான்.
அதற்காக எதற்கெல்லாம் புரளியை கிளப்புவது என்பது கிடையாது போல...
அதற்குள்ளாக TNTET தேர்வுநாள்... ஆன்லைன் அப்லை செய்ய நாள் என்று ஒரு பட்டியலுடன் பரவிக் கொண்டிருக்கிறது அந்த குறுஞ்செய்தி.. அதில்..
ஆசிரியர் தகுதித் தேர்வு 2013
அதற்காக எதற்கெல்லாம் புரளியை கிளப்புவது என்பது கிடையாது போல...
அதற்குள்ளாக TNTET தேர்வுநாள்... ஆன்லைன் அப்லை செய்ய நாள் என்று ஒரு பட்டியலுடன் பரவிக் கொண்டிருக்கிறது அந்த குறுஞ்செய்தி.. அதில்..
ஆசிரியர் தகுதித் தேர்வு 2013
ONLINE APPLY DATE :- 13.03.2013 - 23.4.2013
EXAM DATE :- 9.6.2013
VACANT POSITION
D.TEd - 2639
TAMIL - 891
EXAM DATE :- 9.6.2013
VACANT POSITION
D.TEd - 2639
TAMIL - 891
ENGLISH -2654
MATHS -4096
SCIENCE - 6518
MATHS -4096
SCIENCE - 6518
SOCIAL SCIENCE - 1530
இது புரளி என்பதற்கான காரணங்கள்...
ஆன்லைனில் பதிவு செய்வதால் இடையில் இரண்டு மாத இடைவெளி என்பது தேவையில்லாத ஒன்றாக மாறிவிடும்.
Latest Materials - 2013
- English Minimum Material - Published By CEO, Vellore.
- Social Science Minimum Material - TM - Published By CEO, Vellore.
- Social Science Minimum Material - EM - Published By CEO, Vellore.
- Science Minimum Material - TM - Published By CEO, Vellore.
- Science Minimum Material - EM - Published By CEO, Vellore
பெட்ரோல் விலை உயர்வு லிட்டருக்கு ரூ.1.40 உயர்த்தப்பட்டது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.40 காசுகள்
உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு
வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டர்
ஒன்று ரூ.72.15க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வை அடுத்து இனி
பெட்ரோல் விலை லிட்டர் ரூ.73.65க்கு விற்கப்படும்.
எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை அவசியம்
அரசு தொடக்கப்பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள்
இருந்தும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை தடுக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொடக்க
பள்ளிகளின் நிலை நாளுக்கு நாள் மாறி வருகிறது. பெரும்பாலான தொடக்க
பள்ளிகளில் புதிய வகுப்பறை, காம்பவுண்ட் சுவர், கம்ப்யூட்டர், விளையாட்டு
உபகரணம் என எஸ்.எஸ்.ஏ., நிதியில் கீழ், அனைத்து வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மட்டக்கண்டி அரசு தொடக்க பள்ளியில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மாணவர்கள்
குறைந்து வருவது ஆசிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
10ம் வகுப்பு தேர்வு: மாணவர்களை விட மாணவியர் குறைவு
வரும், 27ம் தேதி முதல், ஏப்., 12 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு
பொதுத்தேர்வை, 10.68 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை
விட, 17,916 பேர், கூடுதலாக எழுதுகின்றனர். இவர்களில், 16,362 பேர் மாணவர்;
மாணவியர், 1,554 பேர்.
7,91,924 மாணவர்கள் எழுதும் பிளஸ் 2 தேர்வு துவங்கியது!
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்கியது.
தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
இந்த தேர்வு , மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு தடா: மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர், மின்தடையின்றி தேர்வெழுத, தேர்வு
மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம்
திட்டமிட்டுள்ளது.
சென்னை பல்கலை தொலைதூர கல்வி இளங்கலை தேர்வு முடிவு
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியின், இளங்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.
ஆரம்ப கல்வியில் அறிவியல் ஊக்குவிப்பு அவசியம்
ஆரம்ப கல்வியிலேயே அறிவியலை போதித்தால் ஆர்வம் அதிகரிக்கும் என, தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டி ரேடியோ வானியல் மையத்தில்,
நேற்று, தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. மைய தலைவர் டாக்டர் மனோகரன்
வரவேற்று பேசுகையில், "மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு
குறைவாக உள்ளது. அறிவியல் ஆராய்ச்சியில் அதிகளவு மாணவர்கள் ஈடுபட வேண்டும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ரூ.2,000 கோடியில் தனி நிதியம்
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தாக்கல் செய்த நிதியறிக்கையில்,
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கு, வரும் நிதியாண்டில், 6,275
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறைக்கு, 5,615 கோடியும்,
அணுசக்தித் துறைக்கு, 5,880 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்
நாடாளுமன்றத்தில் 2013-14ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; ரூ. 2000 சலுகை
* வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு, அவர்க்ளுக்கு வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி
*ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.* வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு, அவர்க்ளுக்கு வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி
வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உயர்வு இந்த ஆண்டு இல்லை என்று அறிவித்துள்ளார் சிதம்பரம்.
ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.
2013-14 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல்
செய்தார். அதில் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய
அனுமதி அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா? பிப்., 28 தேசிய அறிவியல் தினம்
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல்
வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை
உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி
கடைபிடிக்கப்படுகிறது.
அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது.
இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும்
சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும்.
அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும்.
கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தது.
* கல்வித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 17 சதவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கீடு 22 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* கிராமப்புற வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு 46 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மாதிரியிலான 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்
எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்தைப் போன்று, அமைக்கப்பட்ட புதிய 6
மருத்துவக் கல்வி நிறுவனங்கள், இந்த 2013ம் ஆண்டு முதல் செயல்படத்
துவங்கும்.
இதோ! வந்தேவிட்டது பிளஸ் 2 பொதுத்தேர்வு!
பிளஸ் 2 மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அரசுப்
பொதுத்தேர்வுகள், இதோ வந்தேவிட்டது. மார்ச் 1ல் துவங்கும், தமிழ்நாடு மாநில
கல்வி வாரிய தேர்வுகள், மார்ச் 27ம் தேதி முடிவடைகிறது. அதற்கான கால
அட்டவணை, மாணவர்கள் வசதிக்காக, மீண்டும் ஒருமுறை இணையதளத்தில்
வெளியிடப்படுகிறது.
தனியார் பள்ளிகளை கிரேடு அடிப்படையில் தரம் பிரிக்க திட்டம்
தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில், "ஏ.பி.சி.டி" என,
நான்கு வரையான, கிரேடு அங்கீகாரம் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான
கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு: தமிழ் வழியில் 69.60%... ஆங்கில வழியில் 30.40%
மார்ச் 1ம் தேதி துவங்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, 69.60 சதவீத மாணவ,
மாணவியர், தமிழ் வழியில் எழுதுகின்றனர். அதன்படி, 5.59 லட்சம் பேர், தமிழ்
வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே,
ஆங்கில வழியில், தேர்வை எழுதுகின்றனர்.
முறைகேடுகளுக்கு துணைபோனால்... பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை
"பொதுத் தேர்வில், முறைகேடுகளுக்கு உடந்தையாக, பள்ளி நிர்வாகங்கள்
செயல்பட்டால், சம்பந்தபட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய, நடவடிக்கை
எடுக்கப்படும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா எச்சரித்துள்ளார்.
இரயில்வே பாதுகாப்பு: ஆராய்ச்சி மாணவர்களுக்கு நிதி உதவி
மத்திய அரசாங்கம் 2013- 2014 க்கான இரயில்வே பட்ஜெட்டை செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
இரயில்வே
அமைச்சர் திரு. பவன்குமார் பன்சால் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட
அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் 1,52,000 காலி இடங்கள்
நிரப்பப்படும் என்றும் 47,000 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு
ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா? பிப்., 28 தேசிய அறிவியல் தினம்
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு
வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக,
ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.8 கோடி: சிதம்பரம்
நாடு முழுவதும் வேலைவாய்ப்ற்றவர்களின் எண்ணிக்கை 2.8 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர்
கூறியதாவது: கடந்த 2004-05ம் ஆண்டில் 8.2 சதவீதமாக இருந்த
வேலைவாய்ப்பின்மை விகிதம், 2009-10-ம் ஆண்டில் 6.6 ஆக குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2004-05-ல் 3.45
கோடியாக இருந்தது. அது 2009-10ம் ஆண்டில் 65 லட்சம் குறைந்து 2.8 கோடியாக
உள்ளது.